*
மர அடியில்
உதிர்ந்த இலைகள்.
நுனிப்பகுதியில்
இன்னும் பல இலைகளை
தளிர்க்கச்செய்தபடி
கவிதைகளாய்...!
அப்படித்தான் நீ எனக்குள்.
*
ஒரு பூவுக்கு
எப்படி மகரந்தம் அவசியமோ
அப்படித்தான் நீ எனக்கு.
*
வானம்
குளித்து முடித்து
இறுதியாய்
வீழ்ந்த மழைத்துளியில்
சிலிர்த்துக்கொண்ட
பூவைப்போல்
பிறந்தவர்கள் தான் நானும் நீயும்:
*
உன் கைப்பிடியின் மென்மை
அத்தனை இயற்கையையும்
நலம் விசாரித்துப்போவதாய் எனக்குள்.
*
இந்த இயற்கையின் அவசியம்
அத்தனை உயிர்க்கும் எப்படியோ
அதைப்போலவே எனக்கு நீ.
நளாயினி.
பூக்கள் இன்னும் பேசும்.....