சில சமயம்
மணிக்கூடின்றி
மின்குமிழ்கள் இன்றி
எதையும்
அனுமானித்து விட
முடிவதில்லை
இந்த
பனிப்புகார்
காலத்தில்.
பகலா? இரவா?
சற்று குழப்பம் தான்.
ஆனாலும் இப்போ என்னால்
மணிக் கூடின்றி
மின்குமிழ்கள் இன்றி
சகலதையும்
அனுமானிக்க முடிவதோடு
அத்தனை அழகையும்
ரசிக்கவும் முடிகிறதே..!!
எத்தனை அழகாய்
வெள்ளை மலைத்தொடர்களும்.
அதற் கூடே ஒளிரும்
வெண்மையும்
அந்த ஒளித்தெறிப்பின்
யவ்வனமும்.
வெறும் உடம்போடு
பனிக்கால சுகத்தை
அனுவணுவாய்
ரசித்து கிறங்கி போயிருக்கும்
இயற்கையும்..
ஒரு மரக்கிளையில்
குளிரில் நடங்கியபடி
எங்கோ பார்த்திருக்கும்
ஒற்றைக் குருவி.
பாவம்..!!
இதற்கும்
தலைசாய்து கொள்ள
ஒரு மடி கிடைத்து விட்டால்
என்னைப்போல இத்தனை அழகையும்
இன்பமாய் ரசிக்குமோ.?
நளாயினி தாமரைச்செல்வன்.
No comments:
Post a Comment