இந்த குளிர்
எத்தனை அழகைத்தருகிறது.!
அப்படித்தான் நீயும் எனக்குள்!
ஆனால் பல காயங்களைத் தந்தபடி
உதடுகள் கைகள்
வெடித்து இரத்தம்
உறைவது போல்
பலத்த வலிகள்.
ஊசியாய்
பல துளைகள்
உடல் எங்கும்
அறையும்
குளிர் போல்.
முள்ளந் தண்டிற் கூடாக
குளிர் உடலெங்கம்
பரவுவதை நன்கு
உணர முடிகிறது.
இந்த குளிரில் இருந்து
காப்பதற்கான முயற்சி
உடலை நன்கு இறுக்கியபடி
என்னையே எனக்குள்
இழுத்து வைத்துக்கொண்டு
ஓரிடத்தில் உட்கார்ந்து விட்டேன்.
இந்த குளிரில் இருந்து
என்னைக் காக்க
ஒரு போர்வையாவது தாவேன்.
(எனது "உயிர்த்தீ" கவிதைத்தொகுதியில் இருந்து.)
இந்த குளிர்
ReplyDeleteஎத்தனை அழகைத்தருகிறது.!
அப்படித்தான் நீயும் எனக்குள்!
ஆனால் பல காயங்களைத் தந்தபடி
உதடுகள் கைகள்
வெடித்து இரத்தம்
உறைவது போல்
பலத்த வலிகள்.
ஊசியாய்
பல துளைகள்
உடல் எங்கும்
அறையும்
குளிர் போல்.
இந்த வரி இல்லாமலே பொருள் வருகிறது.
முள்ளந் தண்டிற் கூடாக
குளிர் உடலெங்கும்
பரவுவதை நன்கு
உணர முடிகிறது.
இந்த குளிரில் இருந்து
காப்பதற்கான முயற்சி
உடலை நன்கு இறுக்கியபடி
என்னையே எனக்குள்
இழுத்து வைத்துக்கொண்டு
ஓரிடத்தில் உட்கார்ந்து விட்டேன்.
இந்த குளிரில் இருந்து
என்னைக் காக்க
ஒரு போர்வையாவது தாவேன். தாயேன் வாழ்த்துக்கள்