இரவின் நிழலாய்
நீள்கிறது விழிப்பு.
கதவுகளற்ற
யன்னல் கம்பிகளினூடே
ஒளிரும் விழிகளுடன்
கரும் பூனை ஒன்று
பாய்ந்து மறைகிறது.
கண்களை மூடுகையில்
இனம்காணமுடியா
சின்னதும் பெரியதுமாய்
மீன்குஞ்சுகள்
நீந்திப்பரவுகிறது.
குருவி ஒன்றின்
கீத ஒலி
ஸ்வரசச்ரமாய்
இறங்குகிறது உடலுள்.
உணர்வுகள் தோறும்
மெதுமெதுவாய்
பூக்கள் முகையவிழும் ஓசை
எரிவுடன்
விழிவழியே
திரள்கிறது கண்ணீர்.
போர்வையை
ஒருக்கழித்து எழும்புகையில்
வானத்தில் விடிவெள்ளி.
சூரியன் தனது பயணத்திற்காய் மீண்டும்.
நளாயினி
10- 08-2007
10- 08-2007
ஒரு விடியலை இவ்வளவு விரிவாக விளக்குவது ஆச்சர்யப்படுத்துகிறது... கரும் பூனை, மீன்குஞ்சுகள், குருவி என இத்தனை உயிர்களையும் துணைக்கழைத்து விடியலை மொட்டவிழும் மலர் போல மென்மையாக கவிதையால் எழுப்புவது அருமை!!!
ReplyDeleteநன்றி கவுதமன் தங்கள் கருத்துக்கும் வருகைக்கும்.
ReplyDeleteநன்றாயிருக்கிறது. ஆனால், நான் இப்படி ஒரு விடியலை பார்த்தேயில்லை!(விழிப்பதே பத்து மணிக்கு!;-))
ReplyDelete;-)
நல்லதொரு கவிதைக்கு கரு தந்திருக்கிறீங்கள். நன்றி யோசிப்பவரே.
ReplyDeleteஅப்போ அடுத்த கவிதையை நாளைக்கு எதிர்பார்க்கவா? இல்லை இன்றேவா?;-)
ReplyDeleteஅதென்னெண்டு நாளையா இன்றேயா என கேள்வி. ஆறுதலா தான் டக்கெண்டு எழுதிறது கவிதை இல்லை.
ReplyDelete//டக்கெண்டு எழுதிறது கவிதை இல்லை.
ReplyDelete//
எனக்கு கவிதை டக்கென்டுதான் வரும்!;-)
ஓ அப்படியா. உங்கள் தளத்தில் கவிதைகளை நான் பாக்கவே இல்லையே.
ReplyDelete//ஓ அப்படியா. உங்கள் தளத்தில் கவிதைகளை நான் பாக்கவே இல்லையே.//
ReplyDeleteஅவர் டக்கென்டு கவிதை யோசிப்பவர்.. எழுதுபவர் அல்ல!
பிறகெப்படி அவர் தளத்தில் கவிதை இருக்கும்?!!! (just for laugh!)
ஆமாம் கவிதைகள் இல்லை என் தளங்களில். ஆனால் சில 'கவிதை மாதிரி'களை இங்கே பதிந்திருக்கிறேன்.;-)
ReplyDeleteகண்களை மூடுகையில்
ReplyDeleteஇனம்காணமுடியா
சின்னதும் பெரியதுமாய்
மீன்குஞ்சுகள்
நீந்திப்பரவுகிறது
எல்லோருக்கும் வரும் காட்சி ஆனால்
உங்களைப் போன்ற சிலருக்குத்தான் கவிதையாக மிளிர்கிறது..வளமான கற்பனை
தங்களின் வருகைக்கும் கருத்தக்கும் மிக்க நன்றி.
ReplyDelete