புரண்டு புரண்டு
படுக்கிறேன்.
தூக்கமே வரவில்லை.
எங்கே போய் தொலைந்தது
என தேடிக்கொண்டிருந்தேன்.
அட உன் நினைவுகளோடு
தூக்கத்தை தேடுவது
மெது மெதுவாக
புரிந்தது எனக்கு.
தூக்கமே வரவில்லையா?!
உன் நினைவால் தான்
தூக்கம் தொலைந்ததா?!
தூக்கம் வரவில்லையே
என நினைத்த எனக்குள்
உன் ஞாபகம் வந்து
ஒட்டிக்கொண்டதா?!
விடை தேட முயன்றேன்.
விடையாக விரிந்தது மனதில்.
தூக்கம் வரவில்லையே
என நினைத்த எனக்குள்
உன் ஞாபகம் வந்து
எனக்குத் துணையாக
புகுந்து கொண்டது.
இது தான் நட்பின் உன்னதம்.
இப்படியான ஒரு இன்ப அனுபவத்தை
எத்தனை பேர் உணர்ந்திருப்பர்.!
இதெல்லாம் காதலுக்கு மட்டுமே உரியதுன்னு தோனுது(நெறய கத கேட்டுருக்கேனில்ல..).ஆனா நீங்க
ReplyDeleteகடைசியில //இது தான் நட்பின் உன்னதம். // ன்னுட்டிங்களே நளாயினி அக்கா...
பொறுத்திருந்தபாருங்களன் என்னவாக முடியுது என. ஏன் இந்த அவசரம்.
ReplyDeleteஉயிர்த்தீயில் இதுவரை 9 கவிதைகள் தான் போட்டிருக்கிறன். ஒன்றில் இருந்து ஒன்பது வரை உள்ள கவிதைகளை வாசித்தப்பார்த்தீர்களா. அவை எல்லாம் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை.
ஓஹோ... அப்ப இது தொடர் கவிதயா?... நா ஆரம்பத்துல இருந்து படிச்சிட்டு வரேனே..
ReplyDeletemm..
ReplyDelete//புரண்டு புரண்டு
ReplyDeleteபடுக்கிறேன்.
தூக்கமே வரவில்லை.
எங்கே போய் தொலைந்தது
என தேடிக்கொண்டிருந்தேன்.
அட உன் நினைவுகளோடு
தூக்கத்தை தேடுவது
மெது மெதுவாக
புரிந்தது எனக்கு.
//
இதுவரை நான் படித்த உங்கள் கவிதைகளில், இவைதான் எனக்கு பிடித்திருக்கின்றன;-)
பழகிப்போன சில நட்பின் நினைவுகள் கடினமானவைதான்… (ஆனால் இது நட்புக்கும் காதலுக்கும் இடையில் தவிக்கும் மனதின் வெளிப்பாடு போல தெரிகிறது)
ReplyDelete(இன்னமும் உங்கள் கருத்தை பதியவில்லையே)
நல்ல கவிதை. நினைவுகளும் கனவுகளும் கைகோர்த்து தூக்கத்தை துரத்திடும் களம் கவிதையின் களம். dreams are somethings which does not come when you sleep, but dreams are something which does not allow you to sleep என்று படித்தது நினைவுக்கு வருகிறது.
ReplyDeleteநல்ல பதிவு. நன்றி.
btw, இன்று தீபாவளி இல்லியா... இனிய வாழ்த்துக்கள்!
ninaivukul thukam thulainthu ponna porul,kidaipathu miga kadinam
ReplyDelete