Monday, November 19, 2007

ஓவியம்.12/09/2007



ஓவியத்தின் மேல் கிளிக்செய்தால் பெரிதாக பார்க்க முடியும்.

Copyright © nalayiny

18 comments:

  1. அருமையாக இருக்கிறது :)

    ReplyDelete
  2. நன்றி மாயா. நலம் தானே.

    ReplyDelete
  3. நளாயினி அக்கா.. இப்பத்தேன் படத்துல ஒரு மூலையில ஒரு முகம் தெரிய ஆரம்பிச்சி இருக்கு..
    நாளைக்குள்ள ஒரு முடிவுக்கு வந்துடுவேன்..

    ReplyDelete
  4. படம் அருமை...படத்தின் மூலம் ஏதேனும் சொல்ல வருகிறீர்களா?

    ReplyDelete
  5. ரசிகன் a dit...
    நளாயினி அக்கா.. இப்பத்தேன் படத்துல ஒரு மூலையில ஒரு முகம் தெரிய ஆரம்பிச்சி இருக்கு..
    நாளைக்குள்ள ஒரு முடிவுக்கு வந்துடுவேன்..


    அப்பாடா நல்லதாப்போச்சு...

    ReplyDelete
  6. பிரதாப் குமார் சி a dit...
    படத்தின் மூலம் ஏதேனும் சொல்ல வருகிறீர்களா?


    என்ன கேள்வி... அது தானே உண்மை.

    ReplyDelete
  7. கொஞ்சம் 'தெளிவாக' வரைய ஆரம்பித்து விட்டீர்கள்!!!;-)))

    ReplyDelete
  8. ஒரு வருசம் தான் கிறுக்கவே ஆரம்பிச்சது. சந்தோசமாக இருக்கு

    ReplyDelete
  9. வணக்கம் அக்கா,
    எனக்கும் ஓவியம் வரைவதில் ஆர்வம் உண்டு..ஓரளவுகு வரைவேன்.இப்படியான ஓவியங்களில் ஆரம்ப காலங்களில் ஒரு மரியாதை பிரமிப்பு இருந்தது.ஆனால்..இப்படி புரியாத ஓவியங்களை எப்படி புரிந்துகொள்வது என்று மூளையை கசக்குவதை விட எளிய புரிந்துகொள்ளத்தக்க ஓவியங்கள் மக்களை இலகுவில் சென்றடையும் என்பது எனது கருத்து..உங்கள் கருத்தை எதிர்பாக்கின்றேன்..

    ReplyDelete
  10. ரிப்பீட்டேய் for ernesto.

    எனது கருத்தும் அதே. நானும் கொஞ்சம் வரைவேன். வந்து பாருங்களேன் எனது 'சித்திரம் பேசுதடி' தளத்திற்கு.

    ReplyDelete
  11. மாடர்ன் ஆர்ட் - புரியாத புதிர் - பார்க்கும் ஒர்வ்வொருவரும் தன் மூளையைக் கசக்கி ஒரு முடிவுக்கு வந்தால் - அது வரைந்தவரின் எண்ணத்தோடு ஒத்துப் போகுமா

    ReplyDelete
  12. அத்தகைய பிரமிப்புத்தான் என்னையும் வரையத் தூண்டியது. மூளையையும் கண்ணையும் மனசையும் உணர்வையும் கசக்கி ஒரு முடிவுக்கு வருவது நல்லது தானே.

    சில கவிதைகளை பாருங்கள் என்ன சொல்ல வருகிறார்கள் என்பதே புரியவே புரியாது. அதே போலத்தான் இதுவும். நமக்கான தேடலும் வாழ்வனுபவமும் ஒரு சேர இணைகிறபோது இத்தகைய ஓவியங்களை புரியலாம் என நான் நினைக்கிறன்.

    புரியும்படியான ஓவியங்கள் நல்லது தான். வியக்கிறொம்.- அடடாh எப்படி அழகாக இப்படி எல்லாம் வரைகிறார்கள் என.

    ஆனாலும் இந்த ஓவியங்கள் மனதில் பெரியதொரு பரபரப்பை ஏற்படுத்தி செல்கிறது. அவரவர் பார்வைக்கு ஏற்ப.

    ReplyDelete
  13. cheena (சீனா) said...
    மாடர்ன் ஆர்ட் - புரியாத புதிர் - பார்க்கும் ஒர்வ்வொருவரும் தன் மூளையைக் கசக்கி ஒரு முடிவுக்கு வந்தால் - அது வரைந்தவரின் எண்ணத்தோடு ஒத்துப் போகுமா

    "நவீன ஓவியங்கள் பற்றி எம்மில் பலரும் புரிதலில் வறுமைநிலையிலேயே இருக்கிறார்கள். அதனால் அது சொல்லவருவதிலிருந்து பலரும் மாறுபட்டே இருக்கிறார்கள். அனால் இங்குள்ள நவீன ஓவியர்கள் நாம்கீறும் போது உள்ள உணர்வோடு ஒத்திசைவாகவே இருக்கிறார்கள்."

    ReplyDelete
  14. சதங்கா ..!
    எனக்கு ஒரு மாமா இருக்கிறார் நன்றாக வரைவார். ஆனால் அவர் ஒன்றைப்பார்த்தத்தான் வரைவார். அற்புதமான ஓவியன். உங்களது தளம் பார்த்தேன்.

    நீங்களும் பார்த்துத்தான் வரைகிறீர்கள். எனது மாமா புகைப்படம் எடுத்தும் பின்னர் அதைப்பார்த்து வரைவார்.

    நவீன ஓவியம் அப்படியல்ல. அவரவர் உணர்வு.

    ஒவ்வொரு நிறத்தேர்வும் உணர்வை பிரதிபலிப்பன. ஒரு சின்னக் கோடும் உணர்வை சுமந்திருக்கும்.

    ReplyDelete
  15. நன்றாக வரைகிறீர்கள் சதங்கா .ஆனால் அங்கு நவீன ஓவியத்தின் தேடல் இல்லை. ( ஓவியனுக்கும் அதனை ரசிப்பவனுக்கும்.)

    ReplyDelete
  16. நீங்கள் நவீன ஓவியம் மட்டும்தான் வரைவது என்று ஏதாவது விரதமிருக்கிறீர்களா? பாரம்பர்ய ஓவியங்களும்(பார்த்ததை வரைவது அல்ல!) முயன்று பாருங்களேன்!!

    ReplyDelete
  17. யோசிப்பவரே ..! நான் பிறவியிலேயே ஓவிச்சி (ஓவியன் ,ஓவியை என்பதை விட ஓவிச்சி நல்லாயிருக்கா)இல்லையே.ஓவியங்களை ரசித்ததும் இல்லை. இப்ப கொஞ்ச காலமாகத்தான் அதன்பால் ஈர்ப்பு ஏற்பட்டது. ஆனா ஒண்டுமே புரியாது.புரியாத போது மனசு பெரிய பாரமாக இருக்கும். அந்த ஓவியங்கள் என்னை அலைக்களிக்கும்.பல குழந்தைகளிற்கு அன்பளிப்பென்றாலே ஓவியங்கள் வரைவதற்கான உபகரணங்களையே கொடுப்பேன். எனக்கு முன்னால் வரைவார்கள் பிறகு அதைப்பற்றி அவர்கள் மறந்துபோயிருப்பார்கள். நானே வரைந்தால் என்ன என நினைத்தது தான் இவை. இப்போ ஒரு வருடமாகத்தான் இந்த ஓவியம்.ம்.. முயற்சிக்கலாம் யார் இல்லை என்றது. அக்கறைக்கு நன்றி.

    ReplyDelete