Tuesday, November 06, 2007
கவின் குறு நூறு. ( ஈரோடு தமிழன்பன்.) கவிதையோடு கரைதல்.
(மகள்.)
எனது கையில் ஈரோடு தமிழன்பனின் கவின் குறு நூறு என்ற கவித்தொகுதி கிடைத்த போது என்னடா இது ,கவிதைகள் எல்லாம் புதுவடிவம் பெற்றுவிட்டன என மனதில் ஒரு திகில்.
அதற்குள் கீறப்பட்டிருந்த ஓவியங்களை பார்த்தபோது ,எத்தனையோ நவீன ஓவியங்களை பார்த்து பார்த்து வியந்து போன எனக்கு ஓவியர் புகழின் ஓவியங்களில் பரீட்சயமில்லாததால் கோட்டோவியங்களை பார்த்ததும் எனக்கு ஆச்சரியமும் வியப்பும் ஏற்பட்டது.
பின்னர் எப்போதோ பார்த்த ஞாபகம் ஒவியர் புகழின் இணையத்தளம்.
http://www.oviarpugazh.com/
அதை முற்றிலுமாக முற்றுகையிட்டேன். அந்த ஓவியங்களை உணர முற்பட்டேன். அத்தனை உணர்வுகளையும் கோட்டோவியங்களுள்கொண்டு வந்து விடலாமா.! கொண்டுவந்திருக்கிறாரே புகழ்.அதன் பின்னர் கவின் குறுநூறை வாசிக்க தொடங்கினேன்.
கவின்குறுநூறை வாசிக்க வாசிக்க இரண்டு சகாப்தமாக இறுக மூடப்பட்ட பல கதவுகள் என்னுள் திறந்து முகம்காட்ட தொடங்கியது. இளமைக்கால ஞாபகங்கள் ,சிறுபராயத்தில் செய்த குறும்புகள், செய்து விட்டு கிடைத்த தண்டனைகள், பள்ளிப்பருவத்து குறும்புகள், தண்டனைகள், இப்படியாக சங்கிலித்தொடராக---- அப்பப்போ முறித்துக்கொண்டு தூக்கம் என்னைத்தழுவினாலும் தொடரத்தான் செய்தது.
இப்போதெல்லாம் நான் நினைப்பதுண்டு , நான் நினைப்பவற்றை எல்லாம் உடனுக்குடன் தட்டச்சு செய்ய ஏதாவது ஒரு கண்டு பிடிப்பை யாராவது செய்ய மாட்டார்களா என்று. ? பலதை எழுத வேண்டும் என ஏதேதோ எல்லாம் வந்து போகும் . அத்தகையவை வேலைப்பழு குhடிய நேரத்தில் தான் என்னுள் முகம் காட்டும். பின்னர் அது பற்றி எழுதுவோம் என நினைத்து ஞாபகக்கிடங்கில் பதிவு செய்து வைத்தாலும் ஏனோ பிறகு மறந்து போகிறது . அல்லது அது வேறுவடிவம் பெற்றுவிடுகிறது. அடடா..! சில சமயம் கனவில் குhட கவிதைகளை எழுதி முடித்திருப்பேன். எழும்பி எழுத முயற்சிக்கிற போது எந்த வரியுமே எனக்காக காத்திருக்காது மறைந்து போய்விட்டிருக்கும்.
ஓ--! எங்கே விட்டேன் ஆஆ! இளவயது குறும்புகளில். அதெல்லாம் இப்போது கிடைத்தற்கரியதாகிவிட்டது எனது தேசத்திலும் இப்புலம்பெயர்தேசத்திலும். உற்றாh,; உறவு, சுற்றம் என வாழ்ந்தது அது காலம்.ஒரு சின்ன குறும்பு, களவு, செய்தாலும் அக்கம் பக்கமெல்லாம் தெரிந்துவிடும்.
பெரியம்மா, பெரியப்பாலு மாமா, மாமி அன்ரி அன்ரியப்பா அப்புச்சி பெரியாச்சி அப்பாச்சி என வாழ்ந்த குடும்பம். அப்பா தடி எடுத்தால், அடிக்க முதலே அந்த வளவு முழுக்க ஓடி ஓ... என பெரிதாக அழுவேன் ".தனது தம்பி ஒரு நாளுமே மகளுக்கு அடிக்கமாட்டான்" என மாமிக்கு தெரியும். தெரிஞ்சாலும் (எனது மாமி தான் பக்கத்து வீடு) "டேய் தம்பி இளையாம்ப"p என தனது வீட்டுத் திண்ணையிலை நின்று குரல் கொடுப்பார். அவ்வளவு தான் அப்பா தடியை கீழ போட்டுவிடுவார். அப்பா போடேலையோ நான் திரும்பவும் பிலத்து அழுவேன். திரும்பவும் ஒரு டேய் வந்து விழும் அப்பாவின் காலடியில். அப்பா பிறகு தடியை எறிஞ்சிடுவார். அதோடை எனது அழுகையும் நின்றுவிடும். என்ன கொஞ்ச நேரத்துக்கு அப்பாக்கு கிட்ட போக மாட்N;டன். பிறகு இருவரும் எல்லாவற்றையும் மறந்துவிட்டிருப்போம்.
இதை எழுதுகிறபோது நெஞ்சை அடைத்துக்கொண்டு விழிகளில் நீர் திரையிடுகிறது. வாயில் கைவைத்து செருமிக்கொண்டு என்னை சுதாகரிக்க முயல்கிறேன் முடியவில்லை.விழிகள் நிரம்பி கண்ணீர் எனது கன்னக்கதுப்பை ஈரமாக்குகிறது. தட்டச்சு செய்ய முடியவில்லை. கதிரையில் இருந்த படியே சிறிது நேரம் அழுதேன். கண்களை துடைத்து விட்டுக்கொண்டு எழும்பி குளியலறை புகுந்து கண்ணாடியில் முகம் பார்த்தேன். ஏதோ மணித்தியாலக்கணக்காக அழுதுவடித்தது போன்று விழிகள் சிவந்து கிடந்தன. முகம் அதைத்தது போன்று காணப்பட்டது. குளிர் நீரில் முகம் கழுவிவிட்டு மீண்டும் வந்தமர்கிறேன் கணணிமுன்.
ஆனாலும் அப்பாவின் குரலை ஒருமுறை கேட்க வேணும் போல் மனசு துடித்தது. தொலைபேசி செய்து பாடும்படி கட்டளை பிறப்பித்தேன்.(எனது தந்தை சங்கீதபூஐணம்.) அம்மா சொன்னார் சாப்பிடுகிறார் அப்பா என்று. இப்ப பாடும்படி மீண்டும் கட்டளை. "சரி சரி வாறன் வாறன"; என்ற படி வாயினுள் திணித்த சாப்பாட்டோடு வந்தார்அப்பா."பொறுபிள்ளை கைகழுவிப்போட்டு வாறன்" என தொலைபேசியோடு குரல் தந்து விட்டு மீண்டும் சமயலறை புகுந்தார்.
குரலை செருமி சரி செய்தபடி "சரி என்னபாட்டு பாட" என கேட்டார் .பேசிட வாய்மணக்கும் செந்தமிழை பேசிட வாய்மணக்கும்....
அது முடிய ம்.. இன்னொண்டு. என நான் கட்டளை பிறப்பித்தேன். என்ன பிள்ளை சாப்பிட்ட குறை என்றார். இல்லை வந்துருத்தி பாடச்சொன்னன். சரி கொஞ்சம் எண்டிட்டு பாடினார். மனசு கனத்து உடல் களைத்துப்போகிற சமயங்களில், எல்லாம் அப்பாவின் பாடல் கேட்டால் அப்பாவோடு கதைத்தால் அத்தனை சொர்;க்கமும் எனக்குள் வந்திறங்கியதாய் ஒரு உணர்வு. அப்பாவின் மடியில் தலைவைத்து படுத்த சுகம்.அப்பா என்றால் அத்தனை பிரியம் எனக்கு. நினைவுகளில் கரைதல் என்பது எத்தனை இன்பமானது.
குழந்தைகள் என்றாலே எனக்கு அத்தனை பிரியம். எனது வீட்டைச்சுற்றி குழந்தைகளே பல வருடங்களாக இல்லை. அங்கு செய்த அட்டகாசம் முழுக்க நானும் எனது இரண்டாவது அண்ணாவுமாகத்தான் இருக்கும்.எனக்கு பதின்னான்கு பதினைந்து வயது வரைக்கும் என சொல்லலாம். பின்னர் எனது பக்கத்துவீட்டு மாமாக்கு திருமணமாகி அடுத்த வருடமே அழகியதொரு பெண்குழந்தை பிறந்தது. அத்தனை அழகையும் இறைவன் வஞ்சகமெதுவும் செய்யாமல் கொடுத்திருந்தார். தத்தி நடைபயின்ற காலம். தூக்கி கொண்டு வீடு வந்து விடுவேன். குழந்தைகளோடு பொழுது போக்குவதென்றால் காலநேரம் போவது தெரிவதில்லை.
பின்னர் யாழ்ப்பாணம் கொழும்பு இந்தியா என சென்ற போதெல்லாம் பிரிவுத்துயரமும் போர்க்கொடுமையும் தான் எனது மூளைப்பரப்பெங்கும் நிறைந்திருந்திருக்கிறது என்பதை இப்போது இதை எழுதும் போது தான் உணர்கிறேன். . எந்தக் குழுந்தையின் ஞாபகமும் இல்லை. பஸ்சில் றெயினில் விமானத்தில் அப்படி ஞாபகப்பதிவாய் எந்தக்குழந்தையுமா வந்து போகவில்லை எனது வாழ்வில். நினைத்துப்பார்க்கிறபோது மிகுந்த வேதனை அடைகிறது என் மனசு. ஞாபகத்தில் இருப்பதெல்லாம் பசிக்காக அழும் குழந்தைகளும், குண்டுவெடியில், செல் வீச்சில் சிதறிமாண்ட குழந்தைகளின் முகமிளந்த கோர சம்பவங்களும,; கை கால் ஊனமுற்ற குழந்தைகளின் உருவப்படங்களும் தான். நெஞ்சு கனக்கிறது.என்ன செய்து விட முடியும்? நம்மால் வேதனைப்பட்டு வேதனைப்பட்டு உருகி கருகுவதே ஈழத்தமிழன் விதியாச்சு.
பின்னர் Nஐர்மனி வந்திறங்கியபோது அண்ணாவின் இரு பிள்ளைகள். இருவருமே என்னை மிகவும் பாதித்த பிள்ளைகள். அப்படி பயங்கர சுட்டித்தனத்தோடு குhடிய குறும்புகள். பின்னர் எனது மகள் மகன். அப்பாடா எனது பிள்ளைகள் செய்துவிட்ட குறும்புகளுக்கு அளவே இல்லை. இப்படியாக பலதை இந்த கவின் குறு நூறு என்னுள் தோற்றுவித்துவிட்டிருந்தது.இரவில் எல்லோரும் தூங்கிய பின் கோல் முழுவதும் மெழுகுதிரிகளை ஏற்றி வைத்து விட்டு மூன்று முறை முழுமையாக படித்துமுடித்துவிட்டிருந்தேன்.அத்தகையதொரு ரம்மியப்பொழுதில் வாசிக்க வேண்டிய கவிதை. இப்போது கவிதைகளோடும் ஓவியத்தினோடும் என்னால் அழகாக கைகோர்த்து மனம் கோர்த்து செல்ல முடிகிறது.
தனது பேரனின் குறும்புகளை அணுவணுவாக ரசித்து எழுதியிருக்கிறார். ஈரோடு தமிழன்பன்.
குழல் இனிது யாழ் இனிது என்பர் தம் மக்கள்
மழலைக் குறும்பை உணர்ந்து இரசியாதோர்.
சொல்கிறார் கவிஞர் (பக் 38)
குறும்புகளின் உலகம்
குழந்தையைத்தான்
தியானிக்கிறது. அதன் மூலம்
கற்பனைச்
சுவற்கத்தின்
கனவுகளைத்திறக்கிறது.
குழந்தைகளின் உலகமே ஒரு தனியான உலகம் அதிலும் அவர்களின் ஒவ்வொரு படிநிலை வளர்ச்சி என்பது அவதானிப்போரை வியக்க வைக்கின்றது. நாம் குழந்தைகளிடமிருந்து நிறைய கற்றுக்கொள்ள வேண்டியவர்களாக இருக்கிறோம். குழந்தைகளால் தம்மை மாற்றி அமைத்தவர்கள் நிறையப்போ.; .அடிக்கடி எனது அம்மா குhறுவார் குடும்பத்தில் தாய் தந்தையரை மாற்றி அமைக்க கட்டாயம் ஒரு பிள்ளை பிறக்கும் என. தங்களை மாற்ற நான் பிறந்தேன் என அடிக்கடி குhறுவார். அதனை நான் பின்னாளில் எனக்கு குழந்தைகள் பிறந்த போது அனுபவித்திருக்கிறேன். தினம் தினம் நம்மை நாம் திருத்திக்கொள்ள வேண்டியவர்களாக இருக்கிறோம். அவர்களின் சிந்தனைகள் செயல்கள் குறும்புத்தனங்கள் எல்லாமே இந்த 2007 ஓடு ஒட்டி வளர்ந்து கொண்டே செல்கிறது.அவர்களுக்கான சிந்தனைகளுக்கும் கற்பனைகளுக்கும் நாம் வழி விட்டு இடம் கொடுக்க வேண்டியவர்களாக இருக்கிறோம். குழந்தைகள் நம்மை பக்திப்பரவசமாக்குவார்கள். காதலாகி கசிந்து கண்ணீர் மல்க வைப்பர்.
இப்படித்தான் ஒரு முறை எனது வேலைத்தளத்தில் முதலாளியோடு சின்ன மனஸ்தாபம். மனம் மிகவும் சோர்ந்து போயிற்று. பலத்த சிந்தனைக்கு ஆளானவளாக வீடு வந்தேன். நடந்த விடயத்தை பதின் மூன்றே வயதான மகளிடம் சொன்னேன். என்னை ஆதரவாக அணைத்து முத்தமிட்டிட்டு அம்மா தேனீர் போடுகிறேன் என தேனீர் போட்டார். சுடச்சுட . உடலுக்கும் மனசுக்கும் புத்துணர்வு வந்தது போல் இருந்தது. பிறகும் நடந்த சம்பவத்தையே கதைத்துக்கொண்டிருந்தேன்.
மகள் ஓர் பெரிய மனிசியாகி தனது உடலை அற்றென்சனாக்கி கைகளை உயர்;த்தி எனக்கு ஆலோசனை குhறினார்உரத்த தொனியில்.பட பட என பொழிந்து தள்ளினார்.நான் பிரமித்தே போனேன். இத்தனை வயதில் இதனை வெரி சீரியஸ்சாக எடுக்காத போக்கு எனக்கு பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அவர் பின்வருமாறு குhறுகிறார். " அம்மா ஒவ்வொருவரும் ஒவ்வொரு புத்தகம் மாதிரி. ஒவ்வொரு நாளும் அந்த புத்தகத்தின் ஒவ்வொரு பக்கம் மாதிரி. திரும்ப திரும்ப அதே பக்கத்திலையே நிண்டா எப்பிடி.? அடுத்த பக்கத்தை புரட்டிப்போடுங்கோ. இல்லையோ நாளும் காலமும் நேரமும் உங்களுக்காக நில்லாது. .சும்மா நடந்ததையே நினைச்சுக்கொண்டு.-- என ஒரு விறைப்போடு சொல்லி முடித்தார். எனக்குள் பல அதிர்வலைகள். எண்ண ஓட்டங்கள். ஒரு புது விதமாக உரோமங்கள் சிலிர்த்துக்கொண்ட உணர்வு. இதுவரைகாலமும் உணராத பல புதுப்புது உணர்வுகள் இன்னதென்று குhறமுடியாத இன்னதென்று வரையறுக்க முடியாத உணர்வுப்பெருக்கம் என்னுள் எழுந்தது.
குறும்புக்குள் நுழைகிறேன்.பலதை வாசித்தபோது என்பதை விட அந்த குறும்புகளை ரசித்தபோது உண்மையில் நான் வாய்விட்டு சிரித்த அனுபவங்கள் தான் நிறைய.
எதைக்கொடுத்தம்
சமாதானம் ஆகாது
அழுத கவின்
சமாதானம் ஆனான்
பாட்டியும்
சேர்ந்து அழுதபோது. (பக் 10 )
வண்ண எழுதியை
எடுத்துக்கொடுத்து
வானில் உள்ள
இளம்பிறை காட்டி
அப்பாவிடம் சொன்னான்
அதை முழுசா வரை.! (பக் 13)
நீ உன் மாமா மாதிரி
போக்கிரியாகத்தான்
வரப்போகிறாய் என்ற
அம்மாவிடம்
அவன் கேட்டான்
அப்படீன்னா
நீ யார் மாதிரி போக்கிரி.? (பக் 14)
பூங்காத் தடாகத்தில்
வாத்து பார்த்து வந்த
கவின்
முற்றம் முழுக்க
கொட்டினான் தண்ணீர்.
பொம்மை வாத்து நீந்த வேண்டுமே. (பக் 19)
பூங்கா தடாகம், வாத்து, இந்த கவிதையை பார்த்த போது எனது மகளின் சிறுவயதுக் குறும்பு ஒன்று ஞாபகப்பதிவில். ஒன்றரை இரண்டு வயதுக்குள் தான். எப்போ நாம் எமது பார்வையை தன்னில் இருந்து விலத்துகிறோமோ அதை உணர்ந்த அந்தப்பொழுதில் கண்மூடி திறப்பதற்குள் என்பார்கள் அப்படி குளிர்சாதனப்பெட்டியை திறந்து குறைந்தது 5 முட்டைகளையாவது தூக்கி கீழேபோடாமல் இருந்தது கிடையாது. குளிர்சாதனப்பெட்டியை திறக்கும் சத்தம் கேட்டு சிந்தாம்மா என உறுக்கியபடி ஓடுவதற்குள்ளாக இவை நடந்து முடிந்துவிடும். என்னை விட அத்தனை வேகம்.
உடைத்துவிட்டு துள்ளி துள்ளி கைதட்டி சிரிப்பார். என்னை அப்போ சிந்திக்க வைத்த விடயம் இது. நான் முட்டை வாங்கி வந்து குளிர்சாதனப்பெட்டியில் வைத்ததை அவதானித்திருப்பது, அதை போட்டு உடைப்பதற்கென காலம் நேரம்பார்த்துது காத்துநிற்பது, . .. அட அட பிரமித்துப்போன குறும்புகளில் இதுவுமொன்று. இப்போது தான் நினைக்கிறேன். சிரிப்பு வருகிறது. தொலைக்காட்சியில் ரொம் அன் nஐரி நன்றாக பார்ப்பார் வாய் பிளந்தபடி அத்தனை உன்னிப்பாக பார்ப்பார். அதில் எல்லாம் முட்டைகள் உடைந்து குஞ்சுகள் வெளியே வரும். ஓடும். குளிர்சாதனப்பெட்டியுள் உள்ள முட்டைகளையும் உடைத்தால் அதிலிருந்து கோழிக்குஞ்சுகள் வெளியேறி ஓடும் என நினைத்தாரோ...! எத்தனை விடுதலை உணர்வு அவருக்குள் அந்தவயதில் இருந்திருக்கிறது என்பதை இப்போது நினைக்கிறபோது பெருமிதமாக இருக்கிறது. குழந்தைகளின் ஒவ்வொரு செய்கைகளுமே அவர்களின் எதிர்காலத்தை பிரதிபலிப்பவை என நான் அதிகம் நம்புபவள். அதனால் தான் எனது மகளுக்குள் அத்தகையதொரு விடுதலை உணர்வு என குhறினேன்.
இதை எழுதிவிட்டு குறும்புகளுள் திழைக்கிறேன். எனது மகளுக்குள் உள்ள விடுதலை உணர்வை இந்த குழந்தையிடமும் காண்கிறேன்.
படமாய் பட்டாம் பூச்சி.
சட்டையில்.
பறக்கச்சொல்லி
கவின்
சட்டையோடு அதைச்
சன்னலுக்கு
வெளியே விட்டான்.
குழந்தைகளை நாம் ஏமாற்றிவிட முடியாது. அத்தனையும் அவர்களின் உலகில் புரிந்து கொண்டே அவர்கள் வளர்கிறார்கள். அவர்களின் சிந்தனைவளர்ச்சிக்கு ஏற்ப நாம் அவர்களுக்கு செய்யும் பொய்மைத்தனத்தை அவர்கள் புரிந்தே வைத்திருக்கிறார்கள். ஒரு குழந்தையை பாருங்கள் எழுந்து நடக்க தொடங்கும் போது எத்தனை லாவகமாக பக்குவமாக எழுந்து நிற்க முயல்கிறது என்று. அதே போல மேசைகளுக்குள் தவழும் போது தலையில் இடித்து விடுமே என அதில் குhட அதிக கவனமாக இருக்கிறார்கள். விழப்போகிறார்கள் என தெரிந்து எத்தனை பக்குவாமாக தம்மை தரையில் இருத்திக்கொள்கிறார்கள். நாம் தான் ஆ ஊ ஐயோ விழப்போகுது பிள்ளை என கத்தி பயப்பிடுத்தி விடுகிறோம். அந்த குழந்தையின் துடினத்தை அடக்கி விடுகிறோம்.இந்த அடக்குதல் என்பது குழந்தையின் இயல்பான சிந்தனைக்கு தடைக்கல்லாக அமைகிறது என்பதை பல பெற்றோர் அறிவதே இல்லை.
(மகன்)
இப்படித்தான் எனது மகன் அப்போ எட்டு மாதம் அவருக்கு. சோபாவில் இருத்திவிட்டு நான் எனது அலுவல்களை செய்தபடிக்கே இருப்பேன்.இந்த செய்கை எனது வீட்டு வேலைகளை இலகுவாக சீக்கிரமாக முடிக்க சுகமாக இருந்தது. அவரால் சோபாவில் இருந்து இறங்க முடியாது. இறங்க முனையும் போது ஆ ஆ.. நோ நோ. விழப்போறீங்கள் என எனது விரல்கொண்டு விழிகொண்டு மிரட்டுவேன். அமைதியாக இருப்பார். இதுவே எனக்கு வழக்கமாகிவிட்டது. இந்த அம்மா என்னை நெடுக வெருட்டுறாவே இவவை என்ன செய்யலாம் எனது மகன் நினைத்திருக்கலாம் போலும் அவரின் குழந்தை உலகு குறும்புலகு. பிறகு என்ன தொண்டை அடிக்குரலில் வாயிலிருந்து நீர் வடிய சிரித்தபடிக்கு தான் செற்றியில் இருந்து இறங்குவதாக பாவனை செய்து என்னை வெருட்ட தொடங்கிவிட்டார். எனக்கு அந்த செய்கை அம்மா நான் விழுறன் விழுறன் என்ற உணர்வை தோற்றுவித்தது. என்னை ஒரு வீட்டு அலுவலுமே செய்யாமல் செய்து விடுவார். அப்படி பயமுறுத்தியபடி . நெஞ்சையே பதை பதைக்க வைப்பார். பிறகென்ன. மகனின் டோச்சர் தாங்க முடியாமல்
எனது மனசு பதைபதைத்தது தான் மிச்சம். பிறகு ஆளை இறக்கியே விட்டு விட்டேன். சோபாவில் இருத்துவதே கிடையாது.
(மகன்)
அதன் பிறகு அவருக்கு ஒரே உல்லாசம் தான். தவழுவதும் இருப்பதும் தவண்டு தவண்டு பலவற்றை எடுத்து வைத்து ஆராய்வதுமாய் எழுந்து நிற்பதற்கான முயற்சிகளுமாய்அவரின் உலகு பரந்து விரியத்தொடங்கியது. குழந்தைகளுக்கு நாம் ஒன்றை செய்தோமானால் அவர்கள் நம்மை சிந்திக்க வைப்பதோடு நம்மை திருத்தியும் விடுகிறார்கள். இனிமேல் எனக்கு இப்படி செய்யாதே என செய்கைகளால் நிரூபித்தம் விடுகிறார்கள்.
அதையே இந்த குறும்பில் காணமுடிகிறது.
இரண்டு மிட்டாய் தானே.
வேணும்.
இதோ என்று ஒன்றையே
உடைத்து
இரண்டாக்கி தந்தார் அப்பா.
அடுத்த நாள்
ஒன்றுக்கு இரண்டு பேனா
மேசைமேல்.
அவன் அப்பா பார்த்தார்.
வாசலில் விழையாடிக்கொண்டிருந்தான்
அவன்.
அந்தந்த வயதிற் குரிய காலத்தில் அவரவருக்கான உலகம் விரிந்து பரந்து செல்கிறது. அவரவர்கேயான சிந்தனை செயல் திறன் ஆராய்வு சுதந்திரம் அனுபவம் .. இப்படியே குhறிச்செல்லலாம் . ஆனாலும் இந்த குழந்தைகளின் உலகம் எப்படி இருக்கும் அவர்களின் சிந்தனை செயல் எப்படியானவை இது பற்றி நாமெல்லாம் பெரிதாக அலட்டிக்கொள்வதில்லை.பெற்றோரே தமக்கே தமக்கான சிந்தனைகளை மட்டுமே அவர்களுக்குள் திணித்துக்கொண்டிருப்போம். அவர்களின் சிந்தனை செயல் சுதந்திரத்திற்கெல்லாம் பயங்கர முள் வேலி போட்டுவிடுவோம். ஆக மிஞ்சி மிஞ்சிப்போனா ஒரே வார்த்தையில் வாயை மூடலாம் என சிந்தனை செயல் எல்லாவற்றுக்குமே முட்டுக்கட்டை போட்டுவிடுவோம்.
ஒவ்வொன்றையும் புதிது புதிதாக அறியும் குழந்தைகள் தாம் அறிந்தவற்றோடு அதனை தொடர்பு படுத்தி பார்க்க முயல்கிறது. அன்றி நாம் திணித்த கருத்துக்களோடு ஒப்பிட்டு பார்க்க முயல்கிறது. அப்படி ஒப்பிட்டு பார்க்க முயல்கிறபோது பெரிய குழப்ப நிலை தோன்றுகிறது குழந்தை மனசில். அத்தகையதொரு சிக்கலான உணர்வு இந்த குழந்தைகள் உலகத்தில் உள்ளது என்பதை எத்தனை அழகாக குறும்பாக்கி உள்ளார் கவிஞர்.
நீண்ட பலூனை
கவின் பின்பக்கமாக செருகி
உனக்கு வால் முளைத்துவிட்டது பாற்தாயா
என்றாள் அம்மா.
மறுநாள்
குரங்கைப் பாற்ததும்
கவின்
அடம் பிடித்தான்
அந்த பலூனை வாங்கிக்கொடு.!(பக்28)
கொஞ்சம் தண்ணீரைக் கொட்டினாலும்
கோபிக்கிறாளே அம்மா.
எவ்வளவு தண்ணீரை
இப்படிக்கொட்டுது வானம்.?
ஏன் கேட்கவில்லை?
ஏன் கோபிக்கவில்லை? (பக்32)
குழந்தைகளின் சிந்தனைகள் செயல்கள் கேள்விகள் மிகவும் விசித்திரமானவை. பல கேள்விகளுக்கு நம்மிடம் உடனடிப்பதில்களே இராதவையாக இருக்கும். எப்பிடி சொல்லலாம் என்னமாதிரி புரியவைப்பது என சிந்திப்பதற்குள் அவர்களின் உலகத்தில் அவர்களிற்கு பதில் கிடைத்து விடுமோ என்னவோ..!!? அவர்கள் வேறு சிந்தனை ஓட்டத்திற்கும் தமது தேடலுக்குமாக தம்மை தயார்படுத்திக்கொண்டு சென்றுவிடுவார்கள்.
(அவர்களின் உலகம் தான் எத்தனை துடுக்குத்தனமும் துடினமும் சுறுசுறுப்பும் நிறைந்த உலகம்.) இல்லையோ ஓ இந்த பெரியவர்களுக்கே இந்த கேள்விக்கு பதில் தெரியாமல் இருக்குமோ என்னவோ என தமக்குள் சிரித்தபடியே போய் விடுவார்களோ என்னவோ..? இப்படியாக நாம் சிந்திக்கிறபோது ஆச்சரியத்தையும் இன்னும் பலதை இந்த குழந்தைகள் உலகத்திடம் இருந்த அறியவேண்டும் என்ற ஆவலையும் தூண்டுகிறது.
குருவி நம்மைப்போல்
பொங்கல் கொண்டாடுமா?
கேட்ட குழந்தைக்கு
அம்மாவிடமிருந்து
பொங்கல் தான் கிடைத்தது.
பதில் கிடைக்கவில்லை.! (பக் 33)
அப்பாவிடம்
கவின் கேட்டான்
ஆகாயத்தில்
சூரிய விளக்குக்கு
சுவிட்ச்
எந்த இடத்தில் இருக்கிறது? ( பக் 34)
உலகிலேயே அழகிய மொழி குழந்தைகளின் மொழி தான்.
பாப்பி- பால்
ஆமி- மாமி.
டண்டா நந்தா
பிறறு-பிறகு.
கடவு. கதவு.
ஆனான விமனயம்.- ஆகாய விமானம்.
அம்மா கீக்கை கடிங்கோ- அம்மா ஐPன்சை கழட்டிவிடுங்கோ.
பிறிஞ்சுப்பை- பிறின்சிப்பல்.
அப்பா அம்மா அடி- அப்பா அம்மா அடிச்சுப்போட்டா.
அம்மா டட்டா. அம்மா வெளியில் போவம்.
இவை எனது மகளின் மகனின் மொழிகள். இப்படியாக சொல்லிக்கொண்டே போகலாம்.
குழல் இனிது யாழ் இனிது என்பர் தம் மக்கள் மழலைச்சொல் கேளாதோர்.
அதை அழகாக சொல்லி இருக்கிறார் கவிஞர்.
குழந்தையின்
மழலையை கற்பதற்கு
எந்த மொழிக்கு தான் ஆசை இருக்காது.?
எனக் குhறிய கவிஞர் தனது பேரனின் மொழியை எமக்கெல்லாம் கவிதையின் ஊடே தந்துள்ளார்.
மாப்பழத்தை
மாயிம்
என்றான் கவின்.
மாந்தோப்புக்கள்
உடனே அதைத் தம்
பிஞ்சுகளுக்கெல்லாம்
சொல்லிக்கொடுத்து
நெஞ்சம் மகிழ்கின்றன.(பக் 41)
குழந்தைகளின் செயல்களிற்கு நாம் தடைவிதிக்கிறபோது அவர்கள் அதை பெற அல்லது செய்ய முயன்று கொண்டே இருக்கிறார்கள் இருப்பார்கள் நம்மை ஏமாற்றியபடிக்கு.அது தான் உண்மை. அதை அழகா சொல்லி இருக்கிறார் கவிஞர்
எட்டாத
உயரத்தில் எல்லாவற்றையும்
வைத்தாயிற்று.
கவின் கையில்
இப்போது
ஒட்டடைக் கொம்பு.
(மகள்.)
குழந்தைகளின் விழிகள் எதையாவது தேடல் செய்து ஒளிவீசியபடியே இருக்கும் துறு துறு என எல்லாவற்றையும் ஒரு சேர தமக்குள் உள்வாங்கியபடியே இருப்பார்கள். அதனால் தான் குழந்தைகளின் விழிகளில் என்னேரமும் ஒரு பிரகாசம் தோன்றியபடியே உள்ளது. அதை அழகாக கவிஞர் குhறிஉள்ளார்.
பகலில் நட்சத்திரங்கள்
பளிச்சிட்டு மின்னுமா?
மின்னுகின்றனவே கவின் கண்களில்.!
குழந்தைகள் எப்போதுமே தங்களின் குறும்புகள் மூலம் நம்மை மகிழ்விக்கிறார்கள் தொல்லை தருகிறார்கள் குறும்பு செய்யாதபோது என்ன சத்தத்தையே காணம் என திடுக்கிட வைக்கிறார்கள். எங்காவது நம்மை ஏமாற்றிவிட்டு அமைதியாக ஒரு மூலையிலோ அல்லது கதவின் பின்னாலிருந்தோ ஏதாவது பெரியதொரு ஆராய்ச்சியில் எதையாவது பிய்த்து அல்லது உடைத்து அல்லது கலைத்து இப்படியாக எதையாவது பிரமிக்கத்தக்கதாகவும் கோபம் வரவழைக்க தக்கதாகவும் செய்தபடியே இருப்பார்கள். அதை எல்லாம் அழகாக தனது கவின் குறு நூறு மூலம் வெளிக்கொணர்ந்திருக்கிறார்.
(மகள்.)
பரிசளிக்கத்தக்க
குற்றங்கள்
குழந்தையிடம் பிறக்கின்றன
குறும்புகளாய்.( பக் 47)
எந்தக் குறும்பும்
செய்யாத நேரத்தில் தான்
அதிகம் கவலை.
எந்தக் குறும்புக்கு கவின்
யோசனை செய்கின்றானோ
என்று. (பக் 37)
கவினிடம்
உடைபடுவதில் கிடைக்கும் இன்பம்
எந்தப்பொருளுக்கும்
அதைப் பத்திரப்படத்தும்
யாரிடமிருந்தும்
கிடைப்பதில்லையே!(பக் 39)
என்
கவிதையிலிருந்த
வார்த்தைகளை
ஒரு சேர அள்ளி வெளியே
கொட்டியவன்
தன் வார்த்தைகளை
நிரப்பி வைத்தான்.
படித்து முடிக்கவில்லை
என்
தாயின் எழுதப்படாத கவிதையில்
வார்த்தைகளாய்க் கிடந்தேன் நான்.( பக் 19)
கலைத்தெறிகிறான் கவின்
காணாமற் போகின்றன பல.
கலைத்தெறிகிறான் கவின்.
காணாமல் போன பல கிடைக்கின்றன.
கலைத்தெறிகிறான் என்னைக் கவின்.
காணாமற் போவேனோ?
கிடைப்பேனா? ( பக் 5)
இறுதியாக இந்த கவின் குறு நூறு குறும்பகளைச்சொன்னாலும் கவிஞரே தனது பேரனின் குறும்பொன்றின் மூலம் சொல்கிறார் இப்படி...
சன்னல் வழியாக
பூட்டைத்
தூக்கிப்போட்டான்
குழந்தை.
யார் மண்டை திறந்ததோ? ( பக் 61)
எமது சமூகத்தில் குழந்தைகளை கையாளும் முறையே மிகவும் மோசமானது. அதை எல்லாம் விடுத்து குழந்தைகளின் குறும்புகளுக்குhடாக அவர்களை நாம் வழிநடத்துகிற போது நல்லதொரு குழந்தைகள் உலகத்தை நம்மால் உருவாக்கமுடியும் என்பதை சொல்லிச்செல்கிறார். என்னைப்பொறுத்தவரை இக் கவித்தொகுதி குழந்தைகளின் உளவியலை சொல்லிச்செல்கிறது. நல்லதொரு குழந்தை வளர்ப்பை சொல்லிச்செல்கிறது எனவும் எடுத்தக்கொள்ளலாம். தனது பேரனின் குறும்பு மூலம் பல சிந்தனைச்செல்களை புதிது புதிதாக நமதகத்துள் உருவாக்கி உள்ளார் கவிஞர்.
72 வது பக்கத்தோடு கவினது குறும்புகள் முடிந்ததா என கவலை என்னை ஆட்கொண்ட படிக்கு அவர் எழுதிய கவிதைக்கே மீண்டும் செல்கிறேன்.
முகவரி
தவறிய குறும்புகள் எல்லாம்
கவின் ஆதரவில்
வளர்கின்றன எங்கள் இல்லத்தில். ( பக் 41)
இன்று இதை எப்படியாவது எழுதி முடித்து விட வேண்டும் என்ற ஆவலில் ஓர் விடுமுறை நாள் பார்த்து அமர்ந்தேன் கணணிமுன். முடிந்து என்னடா எனது பிள்ளைகளின் சத்தம் சலாரை காணவில்லையே என்றபடிக்கு கிச்சனுள் நுழைகிறேன். கிச்சன் மேசை யாரோ தூரிகை கொண்டு பல வர்ணக்கலவையை கலந்தது போல் காட்சி தந்தது. சத்தம் வந்த திசை பார்த்தேன். வரவேற்பறை. கதவு மூடி இருந்தது. கதவை திறந்தபோது விழிகள் ஆச்சரியத்தில். கைகளால் முகத்தை பொத்தியபடிக்கு நான். விரல் இடுக்குகளுக்கால் பார்வை செல்கிறது. வரவேற்பறை பல கோணங்களில் பல வர்ணங்களில் நவீன ஓவியம் போல காட்சி தந்தது அயண்பண்ண என வைத்த உடுப்புகளால்.வரவேற்பறையுள் இருந்த பொருட்களுக்கெல்லாம் இன்று நல்ல கொண்டாட்டம். எப்படி கவின் எனது பிள்ளைகளோடு வந்து சேர்ந்தார் என எண்ணியபடிக்கு கவினை வீடெங்கும் தேடலானேன்.
குழந்தைகளை நேசி
குதூகலம் கொள்.
மூப்பைத்தள்ளிப்போடு.
நளாயினி
சுவிற்சலாந்து.
10/9/2007
என்ன நளாயினி கன நாட்களுக்கு பிறகு எழுதியிருக்கிறீர்கள் ஒருவேளை இப்படியானதொரு நல்ல உணர்வை எழுதவேண்டும் என்றுதானோ? உண்மைதான் நளாயினி குழைந்தைகளோடு இருக்கையில் நாமும் குழைந்தைகளாகவே மாறிவிடுகிறோம் அவர்களுடைய அந்த உலகம் தனியனது தேடல் நிறைந்தது பல தீர்மானங்கள் நிறைந்தது ஆகவே நாம் அதனை சரியான முறையில் அமைப்பது நம் பொறுப்புத்தானே…
ReplyDeleteஒருவர் தனது உணர்வை மொழிவடிவுக்கு கொண்டுவருவது தான் கவிதை. அதை எழுதி ஒரு புத்தகமாக்குவதென்பது சில ஆண்டுகளானால்தான் ஒரு கவித்தொகுதி வெளியீடு. கவித்தொகுதிகிடைத்ததுமே செய்யப்படும் விமர்சனங்கள் பல சமயங்களில் அவசரம் அவசரமாக நடந்தேறிவிடுகிறது. நான் அப்படியல்ல. பலதடவைகள் வாசித்து ஒன்றோடென்று தொடர்புபடுத்தியே எழுத தோன்றுகிறது எனக்கு. சரி பிழை சொல்ல வாசகனுக்கு இடமில்லை. இது எனது தனிப்பட்ட கருத்து. கவிஞனின் கரம்பிடித்து நாம் நடக்கலாமே தவிர கவிஞனை நமது உணர்வுகளோடு இழுத்துவர ஒரு போதும் முடியாது.அப்படி முடியாத போது தான் விமர்சிக்கப்படுகிறார்கள். இது கவிதையோடு கரைதல். கரைந்து ஆவியாதல்.எடுத்த எடுப்பில் கவிதைகளை வாசித்துவிட்டு வைக்கும் விமர்சனம் என்ற பெயரில் எழுத்தாளனின் உணர்வுகளை பிய்த்தெறிந்து கதை பேசுபவர்கள் எனக்கு பிடிப்பதே இல்லை. ஒரு குழந்தை தவழ்கிறது பின்னர் தத்தி நடைபயில்கிறது பின்னர் கம்பீரமாக எழுந்து நடக்கிறது. முதுமை வருகிறபோது ஊன்று கோல் தேவைப்படுகிறது. அதே போலத்தான் எழுத்தாளரும்.தவழும்போது என்ன நீ ர் இன்னமும் எழுந்து நடக்க வில்லை என தள்ளிவிடுவது நல்லதா. அவரவர் உணர்வை மொழிவடிவில் கொண்டு வருகிறார்கள். அதை நிதானமாக ஆறுதலாக நாம் உள்வாங்கி எழுதுவது வாசகரின் கடமை. அதை சரியாக செய்ய வேண்டும் என நினைக்கிறேன். சரியாக செய்தேனே அது இன்றுவரை எனக்கே தெரியாது. ஏன் இவ்வளவு தாமதமாக என்றதற்கான பதில் இவை. நன்றி தமிழன்.
ReplyDeleteநல்ல உணர்வை எழுதவேண்டுமென்பதற்காகவா என நீங்களே கேட்டிருக்கிறீர்கள். அந்த நல்ல புரிந்துணர்வுக்கு நன்றி.
அம்மாடியோவ்.. நம்ம நளாயினி அக்கா அக்காவா இம்மாம் பெரிய பதிவா போட்டிருக்காங்க..ன்னு மலைப்பு வந்துச்சி..ஆனாக்கா.. படிக்க ஆரம்பித்ததும்.. ரொம்பவே ஒன்றிட்டேன்..வார்த்தைகளும் கவிதைத்தனமா ரசிக்கும் படியா இருந்துச்சி...நல்லாயிருக்கு.
ReplyDeleteநளாயினி அக்கா..
ReplyDeleteஉங்களுக்கும் ,குடும்பத்தாருக்கும். எனது அன்பு கலந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
என்றும் அன்புடன் உங்கள் ரசிகன்.
பெரிசு பெரிசா எழுத இருக்கு. என்ன கொஞ்சம் சோம்பேறிதத்தனம் வந்திட்டுது. ரசிகன்.
ReplyDelete