Tuesday, January 08, 2008

பூக்கள் பேசிக்கொண்டால்.... ! ( 5)



1 7)

ன் விழிகளே
இவ்வளவு கதைகளைச்
சொல்லும் போது
நீ கூட
நல்ல ஒரு
எழுத்தாளன்
ஆகலாமே.

18)

ட்பு என்பதை
உணர்வு பேசும்
காதல் என்பதை
இதயம் பேசும்.
எனக்குள்ளும்
உனக்குள்ளும்
உணர்வும்
இதயமும
ஒன்றாய் கலந்து
பேசுகிறது.

19)

ன் விழிகள் சொல்லம் ஐhலம்
என் முத்தத்தின் ஊற்று.
உன் விழிகள் சொல்லும் கதைகள்
என் முத்தத்தின் அத்திவாரம்.
உன் விழிகள் சொல்லும் தாபம்
என் முதத்தத்தின் சத்தம்.


நளாயினி.

பூக்கள் இன்னும் பேசும்.....

5 comments:

  1. ஒவ்வொரு கவிதைகளும் அருமையாக தொகுப்பட்டுள்ளது.

    ReplyDelete
  2. வாருங்கள். நன்றி. எனது கவிதைகளை விட உங்கள் கவிதைகளில் மிகவும் அழகிய கவிதைகளாக தெரிகின்றன. அன்பும் அதிகம் தெரிகிறது.

    ReplyDelete
  3. \\ந
    ட்பு என்பதை
    உணர்வு பேசும்
    காதல் என்பதை
    இதயம் பேசும்.
    எனக்குள்ளும்
    உனக்குள்ளும்
    உணர்வும்
    இதயமும
    ஒன்றாய் கலந்து
    பேசுகிறது. \\

    மிக அழகான வரிகள், பெரிதும் ரசித்தேன் உங்கள் கவிதையை!

    [ஆங்கில எழுத்து 'h' தவறுதலாக சேர்க்கப்பட்டுள்ளது, 'ஐhலம் ' ]

    ReplyDelete
  4. நன்றி தங்களின் வருகைக்கும் கருத்தக்கும்.
    பொங்கு தமிழை உருவாக்கி தந்த சுரதா யாழ்வாணன் அவர்களுக்கு பலமுறை சொன்னாச்சு. அதை கொஞ்சம் திருத்தங்கோ என இன்னமும் சரிபார்க்கவில்லை. பாமினியில் ரைப்செய்து அதனை பொங்குதமிழில் கொண்டு சென்று யுனிக்கோட்டுக்கு மாற்ற அது ஏச் ஆங்கில எழுத்தாகவே வருகிறது. மீண்டும் இன்றுமொருமுறை மெயில் செய்கிறேன் சுரதாவிற்கு.

    ReplyDelete
  5. கவிதைகள் எல்லாம் அருமை!!

    ReplyDelete