Tuesday, April 01, 2008

பூக்கள் பேசிக்கொண்டால்.... ! ( 8)


*
இதழுக்கு அடக்கமாய்
எத்தனை முத்தங்களை
கோர்த்து வைத்திருந்தேன்.
உன்னைக் கண்டதும்
எப்படி நழுவியது?

*
எங்கே தொலைந்தது என
தேடிக்கொண்டிருந்தேன்
என் நாணம் எனும்
மலர்த்தோட்டத்து
அடிவானில் அழகு காட்டி நின்றது.

*
என் அத்தனை முத்தங்களின்
கோர்ப்புத்தான் வானவில்லாய்.
வானவில்லே இத்தனை அழகென்றால்
என் முத்தம்
எத்தனை அழகாக இருக்கும்.?!!
அடடா..!
நீ யோசிப்பது தெரிகிறது.

*
வானவில்லின் அத்தனை குணங்களும்
என் முதத்தத்திற்கு உள்ளது
வரும் போகும்.
கண்கள் அதனை ரசிப்பதுபோல்
முதத்தையும் உடல் நரம்புகள் உணரும்.

*
முத்தத்தை
கொடுத்து விடு
கொடுத்து விடு
என உணர்வு மண்டலங்கள்
சொல்லிக்கொண்டாலும்
இந்த நாணத்தை வெல்லத்தான்
இன்னும் முடியவில்லை.

*
ஒவ்வொரு சந்திப்பின் போதும்
மூர்க்கத்தனமாக
சிந்தித்துக்கொண்டாலும்
சூரிய மறைவின் போது
வானம் தோன்றும்
காட்சி மாற்றமாய்
நணம் வந்து தொலைக்கிறது

*
நாணத்தை வெல்லுவதற்கு
ஏதும் ஐடியா கொடேன்.
இதைக் கூட சொல்ல முடியாமல்
என் தலை
சூரிய அஸ்த்தமனத்தின் போது உள்ள
சூரியகாந்திப் பூவைப்போல்
தலையை கவிழ்த்துக்கொள்கிறதே...!

நளாயினி.

பூக்கள் இன்னும் பேசும்.....

1 comment:

  1. ///இதழுக்கு அடக்கமாய்
    எத்தனை முத்தங்களை
    கோர்த்து வைத்திருந்தேன்.
    உன்னைக் கண்டதும்
    எப்படி நழுவியது?///

    அழகு...

    ReplyDelete