அது எத்தனை
நீண்ட தொடராய்.
ஏறுவோரும்
இறங்குவோரும்
நேரத்தை தவறவிட்டு
காத்து நிப்போரும்
அருகிருந்து
சிரித்து விட்டு
முகம் சுழித்தே போவோரும்
பிடிக்காத போது
விலத்தி இருக்க
வைப்போரும்
கை பிடி தவறி
படிகளில் விழும் போது
ஓடிவந்து
கைபிடித்து தூக்குவோரும்
பாரங்களை
சுமக்கிறபோது
பக்குவமாய்
இறக்கிவைக்க
உதவுவோரும்
மலையில் இருந்து
விழும் நீர்வீழ்ச்சியாய்
அதன் மனசெல்லாம்
உணர்வெல்லாம்
மகிழ்வைத்தருவோரும்
இது புகையிரதப்
பயணம் போல்
தரிப்பிடங்கள்
ஏதுமில்லை
பலர் ஏறுவர்
இறங்குவர்
காணாமலும் போவர்.
ஆனாலும் யாரோ
ஓரிருவர் மட்டுமே
காக்க வைத்து
தவிக்க விட்டு
பயணமுடிவு வரை
வரவேண்டுமென.
ஒத்த உணர்வுகள்
நிச்சயம் தொடர்ந்து வரும்.
சுவாரசியமும்
துன்பமும்
ஏக்கமும்
ஆசையும்
காதலுமாய்
பயணம் நீண்டுதான்
போகிறது.
நளாயினி தாமரைச்செல்வன்.
6 comments:
தொடர்ந்துவரும் உறவு தேடி
படர்ந்து பூத்திருக்கும்
பாசப்பந்தல்...
கப்பலில் பயணித்ததில்லை
நல்ல பயணம் தந்தீர்கள்.
எந்த பந்தமும் அறுபட்டு போகாமல் தொடர வேண்டும் என்பது தான் எனது கொள்ளை ஆனாலும் பலது அறுபட்டே போகிறது. அதற்கான காரணத்தை முடிவு வரிகள் சொல்கின்றது.
பாச முடிச்சுகள் சில அவிழ்க்கப்பட்டாலும் தூர தேசங்களில் சில முகவரிகள் தெரியப்படுத்திக்கொண்டேயிருக்கின்றன இந்த பயணங்கள்.
தங்கள் வருகைக்கு நன்றி கணேஸ்.
வணக்கம்.
தங்கள் கலையுணர்வு கண்டு மகிழ்ச்சி.
தொடர்க தங்கள் பணி.
மு.இளங்கோவன்
புதுச்சேரி,இந்தியா
muelangovan@gmail.com
நல்ல கவிதை - பல பயணங்களில்சந்திப்போரும் பழகுபவர்களும் தொடர்வதில்லை - தொடரமுடியவில்லை. திடரவேண்டும் நட்பு என ஆசைப்பட்டாலும் பல்வேறு காரணங்கலினால் முடியவில்லை. நல்ல சிந்தனை - நல்ல விருப்பம் - நன்று
Post a Comment