Sunday, June 15, 2008

பூக்கள் பேசிக்கொண்டால்.... ! (11)


*
உனக்கான
கோபம் என்கானது தானே.
அந்த கோபங்களால் கூட
நான் மகிழ்ந்து தான் போகிறேன்.

*
எத்தனை கேள்விகளை
உன் முன்னே பரப்பியபடி.
அத்தனை கேள்விகளும்
மௌனமாய் நீ
காரணம் என்னவோ?
உனக்கும் அவை
பூர்த்தி செய்யப்படாத
கேள்விகள் என்றாவது
சொல்லித்தெலையேன்.
உனக்கு திமிர் அதிகம்
இல்லை என்றால்
சொல்லி இருப்பாயே.

*
உனது ஈகோவை விட்டிறங்கு.
அது தான்
நமது வாழ்க்கைக்கு நல்லது.


*
உனது பார்வையால் மட்டுமே
நான் மலர்ந்து கொள்கிறேனே.
அதெப்படி...!

*
உனது பார்வையில்தான்
எத்தனை சூரியர்கள்.
எனக்கு மட்டுமே தெரிந்த
புதிற்கான விடை இது.

*
மொட்டு பூப்பது இயல்பு .
எனக்கான மகரந்தங்களை
எடுத்து வந்தவன் நீ.

*
விழி திறந்து
மொழி பகர்ந்து
மௌனமொழி பேசி
ஆகா அற்புதமொழிகள் .
எம்மைப்போல் யாரும்
இவ்மொழிகள் உணர்ந்திரார்.


*
முத்தம் ஒன்று தந்தாய்
அதன் ஈரப்பதன்
அழியாமல் இன்றுரை.


நளாயினி.

பூக்கள் இன்னும் பேசும்.....

ஓவியம். 09/06/2008




ஓவியத்தின் மேல் கிளிக்செய்தால் பெரிதாக பார்க்க முடியும்.
Copyright © nalayiny