Sunday, October 09, 2005

புதிதாய் பிறந்து விட்டுப் போகிறேன்..


அந்த வீதியில்
நீயும் ,நானும்
நட்பாய்
தெரிந்தமுகம் ஒன்று.
நானோ நட்பாய்
சிரித்து வைத்தேன்.
ஆனால் நீயோ
அவனைப்பார்த்து
என்ன இழிப்பு?
என கூறிய போது
ஏனோ அதிகம்
இடிந்து போனது
நம் காதல் தான்.
உனக்கான
காத்திருப்பில்
நீ வரப் பிந்தியதால்
உன் நண்பனோடு
சிரித்துக் கதைத்தேன்.
ஆனால் நீயோ
என்ன கதைத்தாய்
என என்னைக்
குடைந்தெடுத்து
குற்றக் கூண்டில்
நிறுத்தினாய் பார்
அப்போ என் மனம்
நீ என் மீது
வைத்துள்ள
காதலையும்,
நம்பிக்கையையும்
ஆய்வு செய்து
அறிக்கை எழுத
தவற வில்லை.
என் கூந்தலை
வெட்டியதற்காய்
எப்படி எல்லாம்
திட்டித் தீர்த்தாய்.
நான் உன்னில் இருந்து
விலகிப் போகவல்லா
செய்து விட்டாய்.
காதல் என்றால்
என்ன வென்று
தெரியுமாஉனக்கு.?
எனக்கே எனக்கான
வாழ்வையும்
உனக்கே உனக்கான
வாழ்வையும்
நீயும் , நானும்
மனம் கோர்த்து
வாழ்ந்து பார்ப்பது தான்.
அதற்காய்
என் வாழ்வை
என் விருப்பு வெறுப்பை
எல்லாம் துறந்து
உனக்காய் மட்டும்
உன் விருப்பு வெறுப்போடு
உனக்காய் வாழ
எனக்கு இஸ்டமில்லை.
நீ நினைக்கும்
குருட்டு
செவிட்டு
ஊமைக்
காதலியாக
நான் இருப்பேன்
எனநினையாதே.
என்னை
சிதை ஏற்றாமல்
என்னை எனக்கே
திருப்பித் தந்துவிடு.
போதும்
நீ என் மீது வைத்த காதலும்
அதன் மீதான நம்பிக்கையும்.
போனால் போகிறது
நான் உன் மீதுகொண்ட
காதலை புதைத்து
மீண்டும்
புதிதாய்
பிறந்து விட்டுப் போகிறேன்.
நளாயினி

3 comments:

  1. Anonymous8:52 am

    //என்னை எனக்கே
    திருப்பித் தந்துவிடு.
    போதும்
    நீ என் மீது வைத்த காதலும்//
    என்ன உங்களை உங்களுக்கே திருப்பி தரசொல்லிஎன்ன கேள்வி :))

    புதிதாய் பிறந்துவிட்டு போகிறீர்களா. அந்த துணிவு எல்லருக்கும் வரவேணுமே

    நல்ல கவிதை............

    ReplyDelete
  2. தைரியமான காதல், தைரியம் கவிதையில் மட்டுமா? கவிக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. எல்லாம் சும்மா செல்லச் சண்டை தான்.நாம் யாரில் அதிக அன்பு வைக்கிறமோ அவையோடை தானே சண்டைபிடிக்கலாம் வெருட்டலாம். அது தான் சும்மா வெருட்டிப்பாத்தன்.

    ReplyDelete