Friday, June 29, 2007

இன்று இது தான் ஓகேவா. (றிலாக்ஸ்.)


வெள்ளிக் கிழமை நாள் அதுகும் வேலை நாள் என்னண்டு என நினைக்கிறீர்களா. அது தான் ஆசை . நேரம் காலம் ஒத்து வரவேணுமே. ஆனா ஓய்வே இல்லாமல் இன்னும் அரை மணிநேரத்தில் வேலையிடத்தில் நிற்க வேணும். உடலும் மனசும் நல்லதொரு தூக்கம் போடவேணுமென சொல்லுது. அதற்கு யார் செவிகொடுப்பது. ஓகே பிறகு பேசலாம்.

Thursday, June 28, 2007

ச்சும்மா சும்மா..


படத்தின் மேல் கிளிக்செய்தால் பெரிதாக பார்க்க முடியும்.

Wednesday, June 27, 2007

உயிர்த்தீ......8






பச்சைக் குழந்தையாய்
நான் இருந்த அழுகிறேன்.

என்னை நானே
அறைந்து கொள்ளலாம் போல்
இப்படித்தான் இப்போ
அடிக்கடி உணர்வுகள்
வந்து போகிறது.

எமது உணர்வுகளை
இரகசியமாக வைத்துக்கொள்.

யாரும் வந்து
கொச்சைப்படுத்தி விட்டு
போகக் கூடாது பார்.

நீயும் நானும்
எம்மை நாம்
உணர்ந்து கொண்டது
எத்தகைய உன்னதம்
தெரியுமா?!

வெறும்
காதலையும்
காமத்தையும்
உடலெங்கும் பூசிக்கொண்டு
வாழ்க்கை என்ற
போர்வைக்குள்
பதுங்கிக்கொள்ளும்
இந்த மானிடர்க்கு
எமது உறவும்
அப்படித் தெரியலாம்.

இது வெறும் பருவகால
சந்திப்புப்போல் அல்ல.
இது எத்தகைய தொரு
உன்னத பக்குவ நிலை தெரியுமா.

இதை எந்த
வார்த்தை கொண்டு
அழைக்கலாம்?

காமம் என்கின்ற
கருப்பொருளூடாக
மட்டுமே பார்க்க தெரிந்த
இந்த சமூக சாம்ராச்சியத்தால்
புணர்ந்து அழிக்கப்பட்ட
உள்ளங்களாய்.

அது சரி
இந்த பரந்த பூமியில்
எம்மைப்போல்
அங்கொன்றும் இங்கொன்றுமாய்
சில உள்ளங்கள் இருக்குமோ?!!

Tuesday, June 19, 2007

ஓவியம். (18/06/2007)

ஓவியத்தின் மேல் கிளிக்செய்தால் பெரிதாக பார்க்க முடியும்.

Saturday, June 16, 2007

அகத்தின் அழகு முகத்தில் தெரியும். ( நவரசம்.) ஓவியம்.


நவரசத்தை ஒவ்வோர் முகங்களிலும் கொண்டுவர முயற்சித்திருக்கிறேன். இனி நீங்கள் தான் சொல்ல வேணும்.



ஓவியத்தின் மேல் கிளிக்செய்தால் பெரிதாக பார்க்க முடியும்.

Thursday, June 14, 2007

நான்.

காதல் துய்த்து காதல் துய்த்து
காதல் தோய்த்த பலாச்சுழையாகி
உணர்வுகளை எல்லாம் ஒன்றாய்குவித்து
காதல் நோயில் கிறங்கிக் கிடப்பேன்.

கோபக்கனலை
மென்று விழுங்கி
என்னை நானே
வதைத்துக்கொள்வேன்.

போட்டி பொறாமை
வஞ்சம் பொய்மை
கணையாய் வந்தால்
போதி மரத்துப் புத்தனாவேன்.

அன்புச் சிறையுள்
என்னைப் பூட்டி
அணுவணுவாய்
ரசித்து மகிழ்வேன்

விடுதலை உணர்வை
மென்று தின்று
மனிதநேயம்
வளர்த்துக்கொள்வேன்.

தனிமைச்சுவரை
எனக்குள் அமைத்து
கிழமைக்கணக்காய்
அழுது சிரிப்பேன்.

மௌனம் மௌனம்
நன்றே என்று
மாயச் சிறையுள்
புகுந்து கொள்வேன்.

மழையில் நனைந்து
பனியில் உறைந்து
உணர்வுகள் சாக
மரத்துக்கிடப்பேன்.

நிலத்தில் நீந்தி
நீரில் நடந்து
வெற்றிப் படிகள்
ஏறிமகிழ்வேன்.

காதல் நோய் என்னை வதைத்து
வெறுமை என்னை துரத்தம் போது
கழுவில் ஏற்றி என்னை மாய்த்து
மீண்டும் மீண்டும் புதிதாய்ப் பிறப்பேன்.


நளாயினி
சுவிஸ்.

11/02/2007

Wednesday, June 13, 2007

எதிரெதிரே இரண்டு திறந்த கதவு.அதன் ஊடாக ஒரு யன்னல்.

ஓவியத்தின் மேல் கிளிக்செய்தால் பெரிதாக பார்க்க முடியும்.


எதிரெதிரே இரண்டு திறந்த கதவு.அதன் ஊடாக ஒரு யன்னல். இவற்றுக்கு எதிரே இருக்கக் கூடிய மூடப்பட்ட கண்ணாடி யன்னலில் இவற்றின் விம்பம் எப்படித்தெரியுமென பார்ப்போம். சுவர்களின் நிறங்களுக்கு ஏற்ப நிறங்கள் தீர்மானிக்கப்படுகிறது.

அழகை ஆக்கிரமித்து நிற்கும் மின்சாரக்கம்பிகள். (2)




அழகிய பனிப்புகார் காலம்.

படத்தின் மேல் கிளிக் செய்தால் பெரிதாக பார்க்கலாம்.

Tuesday, June 12, 2007

ஓவியம். (12/06/2007) 2


ஓவியத்தின் மேல் கிளிக்செய்தால் பெரிதாக பார்க்க முடியும்.

ஓவியம். (23/05/2007) 1

உங்களின் கற்பனை ;சிந்தனா சக்தி ;வாழ்வியல் அனுபவம் ; இவற்றின் மூலம் இந்த ஓவியம் எதை பேசுகிறது என சொல்ல முயலுங்களேன்.

படத்தின் மேல் கிளிக்செய்தால் பெரிதாக பார்க்க முடியும்.

Monday, June 11, 2007

Saturday, June 09, 2007

உயிர்த்தீ......7




நாம் எல்லாம்
காதலை மட்டுமே
சுவாசித்து பழகியவர்கள்.
ஆண் பெண் நட்பை
சுவாசிக்க பழக்க வேண்டும்.

நான் இங்கு சொல்வது
சில சமயம்
பைத்தியக்காரத்தனமாக தெரியலாம்.
காதலைப்போன்ற
அத்தனை உணர்வும்
நட்புக்குள்ளும் உண்டு.

பிரிவு ஏக்கம்
இன்பம் துன்பம்
சல்லாபம் தழுவல்
குழந்தை தனம் எல்லாம்.

காதல் தனது ஆட்சியை
பள்ளியறையில்
முடித்துக்கொண்டு
மூச்சடங்கிப்போகிறது.

நட்பு அப்படியல்ல
இதயத்தின் இதயத்துள்
உணர்வின் உணர்வுள்
புதுப்புது அர்த்தங்களை
வாழ்வின் எல்லை வரை
தருவதாய்.

ஆண் பெண் நட்பை
இதுவரை சுவாசிக்க தவறியவர்க்கு
இது புரிய சந்தர்ப்பமேது?

Friday, June 08, 2007

இலக்கு.( ஓவியமும் நானே. கவிதையும் நானே.)

ஓவியத்தின் மேலே கிளிக்செய்தால் நீங்கள் பெரிதாக பார்க்க முடியும்.




கால நகர்வில்

சிதைந்து போன

ஒற்றையடிப் பாதை.

நீண்ட தொடராய்.


பக்கமெல்லாம் முட்புதரும்

பாம்புப் புற்றும்.

ஆங்காங்கே

சிதறிக்கிடக்கும் பிணங்கள்.


நாயின் ஊளை

செவிகளை தாக்கி

திகிலை ஊட்டி -என்

நகர்வைத் தடுமாற வைக்கும்.


அக்கம் பக்கம் பார்த்து

திரும்பிப் பார்க்கிறேன்.

நான் மட்டும் தனிய.


மனதில் உறுதி

நடையில் வேகம்.
__________________
நளாயினி தாமரைச்செல்வன்.

Thursday, June 07, 2007


படத்தின் மேல் கிளிக்செய்யுங்கள்.

Wednesday, June 06, 2007


படத்தின் மேல் கிளிக்செய்யுங்கள்.

Tuesday, June 05, 2007

வானவில்.

படத்தின் மேல் கிளிக்செய்யுங்கள்.

Monday, June 04, 2007

முகம் தொலைத்தவர்....



மணல் வீடு கட்டி

மகிழ்ந்த அந்த நாட்கள்.

சின்னம் சிறுவராய்

சிந்திய புன்னகைப் பொழுதுகள்.



மண்டியிட்டே மடமையை

வளர்த்துக் கொண்ட பெண்.



பருவம் எய்ததும்-தன்னை

விலங்கிட்டே பூட்டிய பெண்.



உயர் கல்வியால்-தன்னை

நிலை நிறுத்தாத பெண்.



சீதணம் கேட்டு வந்த வரனிடம்

சினந்தெழாது


கை கட்டி

வாய் பொத்தி

தலை குனிந்து

தாலி ஏற்ற பெண்.



சினிமாவே வாழ்வென நினைத்து

சிந்திக்க மறந்து தன்னை

கதாநாயகியாக நினைக்கும்

ஏமாளிப் பெண்.



வீட்டினுள் கொலுவிருக்கும்

பொம்மை போல்

ஆணிடம் அடிமையாகும் பெண்.



சிரித்து மழுப்பி-தன்

பிழையை மறைக்கும்

ஆணிடம் கையேந்தி

அவன் கொடுக்கும்

புடவைக்கும் நகைக்குமாய்

அவன் காலடியில் வீழ்ந்து கிடக்கும் பெண்.



இன்று வரை தன்னை உணராது

ஜடமாய் வாழும் பெண்.


இவர்கள் எல்லாம்

என் கணிப்பில்

முகம் தொலைத்தவராய்.



இதை எழுதிய பேனா கூட

உயிர் உள்ளது

உணர்வுள்ளது

தீப்பெறி சுமந்தது

மை கூட ஜடமல்ல.



இப் பேனா கூட

ஒருபோதும் முகம் தொலையா.

மீண்டும் மீண்டும் தலைநிமிரும்.

குனிந்த தலைகளை நிமிரச்செய்யும்

தொலைத்த முகங்களை தேடவும் செய்யும்.



பெண்ணாகப் பிறந்ததனால்

பேருவகை கொள்கிறேன்.

தொலைந்து போன முகங்களுள்

தொலையாத முகமாய்-என்

முகமும் என

தலை நிமிர்த்திக் கொள்கிறேன்.

_______

ஆக்கம்-நளாயினி தாமரைச்செல்வன்.





Saturday, June 02, 2007

படத்தின் மேல் கிளிக்செய்யுங்கள்.

Friday, June 01, 2007




"வாழ்க்கை ஒரு முறை
வாழ்ந்து பார்
வீழ்ந்து விடாதே."

nalayiny