Wednesday, July 04, 2007

ஓவியம். (18/03/2007)

ஓவியத்தின் மேல் கிளிக் செய்தால் பெரிதாக பார்க்க முடியும்.

18 comments:

  1. இப்படத்தைப் பார்க்கும் போது ஏதோ இருக்கு, ஆனால் அது இல்லை என்று டைரக்டர் சூர்யா பேச்சு நடையில் தான் பதில் சொல்லத் தோன்றுகிறது. பல சந்தர்ப்பங்களில் ஒரு பிரளயம் போன்ற இவ்வகை ஓவியங்களைப் பார்த்திருக்கிறேன். புரிந்தும் புரியாமல் பார்வை நகர்த்தி இருக்கிறேன்.
    உங்களிடம் ஒரே ஒரு கேள்விக்கு விடை காண ஆசைப்படுகிறேன். "இவ்வோவியத்தை நீங்கள் வரையத்தொடங்கும் போதே இப்படித்தான் வரைய வேண்டுமென்ற திட்டமிடல் இருந்ததா? அல்லது அதன்போக்கில் வரைந்து, வரைந்து, இப்போதைக்கு இது போதுமென்று நிறுத்திய ஓவியமா?

    ReplyDelete
  2. உங்கள் ஓவியங்களிலெல்லாம், நரகத்தின் தாக்கம் அதிகமிருப்பதாகத் தெரிகிறதே(ஒருவேளை எனக்கு மட்டும்தான் அப்படித் தெரியுதோ?!). ஏன் அப்படி?

    //இவ்வோவியத்தை நீங்கள் வரையத்தொடங்கும் போதே இப்படித்தான் வரைய வேண்டுமென்ற திட்டமிடல் இருந்ததா? அல்லது அதன்போக்கில் வரைந்து, வரைந்து, இப்போதைக்கு இது போதுமென்று நிறுத்திய ஓவியமா? //

    எனக்கும் இந்த சந்தேகம் இருக்கிறது. இது போன்ற ஓவியங்களை ஓவியர்கள் எப்படி வரைகிறார்கள்?

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. வத்திராயிருப்பு தெ. சு. கவுதமன் said...


    உங்களிடம் ஒரே ஒரு கேள்விக்கு விடை காண ஆசைப்படுகிறேன். "இவ்வோவியத்தை நீங்கள் வரையத்தொடங்கும் போதே இப்படித்தான் வரைய வேண்டுமென்ற திட்டமிடல் இருந்ததா? அல்லது அதன்போக்கில் வரைந்து, வரைந்து, இப்போதைக்கு இது போதுமென்று நிறுத்திய ஓவியமா?

    யோசிப்பவர் வந்து நரகவாடை என சொல்லி உள்ளார் அவரின் அந்த சொல்லின் விளக்கத்திற்கு பின்னர் உங்கள் இருவருக்கும் சொல்கிறேன்.

    ReplyDelete
  5. Anonymous11:34 pm

    யக்கோவ் சூடாகிட்டீங்க போல.. இதுங்கள் தானா மாடர்ன் ஆர்ட்டு

    ReplyDelete
  6. matharasi said...
    யக்கோவ் சூடாகிட்டீங்க போல.. இதுங்கள் தானா மாடர்ன் ஆர்ட்டு


    "அப்படி எல்லாம் இல்லை. ஆனாலும் சின்னதாக மனதில் ஒரு வலி. அவ்வளவு தான். ஆனாலும் பல ஓவியங்களிற்கு கருத்த எழுதியவர். ம்... பார்க்கலாம். ஏதாவது தவறு நடந்திருக்கலாம்.நரகம் என்ற சொல்லின் அர்த்தம் சரியாக தெரியாமல் சொன்னாரோ தெரியவில்லை. . ஒவ்வொருவரின் கருத்த சுதந்திரம் தானே."

    ReplyDelete
  7. யோசிப்பவர் பதில் வரும்வரை நானும் யோசிப்பவர் தானா? நான் அதிகமாய் யோசிப்பவர் கிடையாது, எனவே பதிலை சுருக்கில் சொல்லுங்களேன்.

    ReplyDelete
  8. //யோசிப்பவர் வந்து நரகவாடை என சொல்லி உள்ளார் அவரின் அந்த சொல்லின் விளக்கத்திற்கு பின்னர்//

    //ஆனாலும் பல ஓவியங்களிற்கு கருத்த எழுதியவர். ம்... பார்க்கலாம். ஏதாவது தவறு நடந்திருக்கலாம்.நரகம் என்ற சொல்லின் அர்த்தம் சரியாக தெரியாமல் சொன்னாரோ தெரியவில்லை. . ஒவ்வொருவரின் கருத்த சுதந்திரம் தானே."
    //

    நீங்கள் ஏதோ நான் சொன்னதை தவறாக புரிந்து கொண்டிருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.

    எனக்கு இந்த ஓவியத்தில், ஒரு உயரமான இருட்டு அறையும், உயரத்தில் சின்ன இடைவெளியில் தெரியும் மெல்லிய ஒளியும், வலது புறத்தில் கொழுந்து விட்டு எரியும் தீயில் தெரியும் நாயின் உருவமும், அடியில் தோன்றும் ஒரு முகமற்ற விலங்கின் உருவமும், எனக்கு நரகம் என்ற ஒரு இடத்தைதான் ஞாபகப்படுத்தின. அதைத்தான் சொல்லியிருந்தேன். இன்னும் ஒருசில படங்கள்(முன்பு வரைந்தது) கூட இதே போன்று தோன்றியதால்தான் அப்படி கேட்டேன்.!!!;-)

    //நரகம் என்ற சொல்லின் அர்த்தம் சரியாக தெரியாமல் சொன்னாரோ தெரியவில்லை//
    நரகம் என்ற சொல்லுக்கு எனக்கு அர்த்தம் தெரியுமென்றே நினைக்கிறேன்!!!;-))

    ReplyDelete
  9. ஓ ..! நானும் என்னவோ ஏதோவோ என .. ம்.. சரி சரி. எனது ஓவியத்தை பார்த்த பலர் றொமான்ரிக்கான நிறத்தெரிவும் ஓவியங்களும் என சொன்னார்கள். நான் இங்கு போட்டது கொஞ்சம் தான். அவை சிலசமயம் அப்படி தெரிந்திருக்கலாம். நவீன ஓவியம் என்றாலே ஒவ்வொருவரது பார்வைக்கு ஒவ்வொருமாதிரி தெரிவது தானே. நீங்கள் இருவருமே கேட்ட கேள்விக்கான பதிலை ஒரு பதிவாகவே போடலாம் என இருக்கிறேன்.பலருக்கும் உதவும் என நினைக்கிறேன். விடுமுறைக்காலம் இப்போ. வேலைத்தளத்தில் மாறி மாறி ஒவ்வொருவராக விடுமுறையில் போவதால் கொஞ்சம் வழமைக்கதிகமான வேலைப்பழுவும் வேலை அலுப்புமுண்டு. மிக விரைவில் பதிவிட முயற்சிக்கிறேன்.

    ReplyDelete
  10. கொழுந்து விட்டெரியும் இடத்தில் ஒரு பெண் அல்லது ஒரு ஆண் கைகளை உயர்த்தியபடிக்கு அதுவும் அழகாக நிர்வாணமாக நிற்பது உங்கள் கண்ணுக்கு தெரியவே இல்லையா. அத்தோடு சைற்றாக பார்க்கிறபோது ஒரு இரட்டைச்சடைபோட்ட பெண் படுத்திருந்தபடி கால்களை பின்னியபடி இருப்பது தெரியவே இல்லையா. நடுவில் கத்தரிப்பூ நிறத்தில் இருவர் முத்தமிடும் காட்சி. ஐயோ எனக்கு ஓவியம் மறந்தே போகும் போலை இருக்கு. ( சும்மா சும்மா.) யாரும் கோபித்துவிடக் குhடாது.

    ReplyDelete
  11. ஒன்னுமே புரியல உலகத்துல!! என்னமோ நடக்குது மர்மமா இருக்குது!!

    மழையில ஓவியம் நனைஞ்சி போச்சா!!

    நல்லா இருக்குங்க!!

    ReplyDelete
  12. குட்டிபிசாசு said...
    மழையில ஓவியம் நனைஞ்சி போச்சா!!

    +நீங்கள் குடை பிடிச்சதாலை கொஞ்சம் தப்பிச்சு.+

    குட்டிபிசாசு said...
    நல்லா இருக்குங்க!!

    nanre.

    ReplyDelete
  13. படத்துக்கு பாகம் குறித்து விளக்கம் சொல்லி ஒரு பதிவு வேணும் :)

    சீரியஸ்லி, Did you decide this is going to the output,before you started?

    ReplyDelete
  14. பார்த்தேன்...
    ஓரளவு ஊகிக்க முடிகிறது
    ரசிக்கத்தான் முடியவில்லை...
    உங்கள் உழைப்பு தெரிகிறது
    வியக்கத்தான் முடிகிறது...

    எனக்கான உங்கள் பதிலையும் நானே கவிதை வடிவில் சொல்கிறேன்...
    இதோ:

    கற்றுக்குட்டியே!
    சற்றுநேரம்
    உற்றுப்பாரடா...
    கோடுகள் வளைவுகள்
    சிதறல்கள் அனைத்தையும்
    வளைந்து நெளிந்து
    வெறித்துப் பாரடா...
    எதுவும் தெரியலயா...
    கூட்டம் விலக்கி
    ஓவியக்கூடம் விலகி
    வெளியே வா
    வானம் பார்...
    மேகச்சிதறலை
    வேடிக்கை பார்...
    ஓவியம் தேடு...
    இதுதான் ரசிப்பின் முதல்படி!

    ReplyDelete
  15. //வெளியே வா
    வானம் பார்...
    மேகச்சிதறலை
    வேடிக்கை பார்...
    ஓவியம் தேடு...
    இதுதான் ரசிப்பின் முதல்படி!
    //

    நன்றாக ரசித்தேன் கவுதமன் - உங்கள் கவிதையை!!!

    ReplyDelete
  16. //நன்றாக ரசித்தேன் கவுதமன் - உங்கள் கவிதையை!!! //

    நன்றி. இந்த ஓவியத்தைப் புரிந்து கொள்ளும் பக்குவம் எனக்கு இல்லை... அதனால்தான் கவிதை எழுதி மனதைத் தேற்றிக்கொள்கிறேன்!

    ReplyDelete