Monday, July 02, 2007

பூக்கள் பேசிக்கொண்டால்........! (1)



ரகசியம் சொல்வதாய்
முத்தமொன்றை
வைத்து தொலைத்தேன்.
என்ன நீ....
ஒரு முத்தம் தானே.
அதற்கு இப்படியா யாரும்
முறைப்பார்கள்.
**

யோ பாவம் அந்த நகங்கள்.
அருகிருக்கும் செடிகள்.
என் வருகைக்காக
அவற்றை எவ்வளவு நேரம் தான்
பிய்த்து எறிவாய்..!
அட தூர நின்று
இதைக் கூடரசிக்காது விட்டால்
நான் உன் காதலியா என்ன.
**

தெப்படி உன் நெற்றியை
தடவிப்போகும் ஒற்றைத்தலைமுடி.
அதை நீ ஒதுக்கி ஒதுக்கி
கதைக்கும் போது
எத்தனை அழகு தெரியுமா.
**

ன்னை நான் கடக்கும் போது
அதெப்படி எனக்காக
இவ்வளவு அழகான பார்வையையும்
புன்னகையையும்பரிசளிக்கிறாய்..!
**

னது நண்பர்களோடு
இருக்கும் போது
என்னைக் கண்டதும்
ஒரு செருமல்.
அதெப்படி நண்பர்களுக்கேதெரியாமல்
என் செவி தடவிப்போகும்உந்தன் செருமல்.
**
பூக்கள் இன்னும் பேசும்.....

8 comments:

  1. காதலின் காத்திருப்புக்களையும், ரசிப்புக்களையும் சிலாகித்துச் சொல்லி இருக்கிறீர்கள். கவிதை நடை எளிமையாக இருக்கிறது. "அதெப்படி" என்ற வார்த்தையை திரும்பத்திரும்ப வலுக்கட்டாயமாகப் பயன்படுத்தி இருப்பது தான் கவிதையின் இயல்பைப் பாதிப்பதாக உணர்கிறேன்.

    ReplyDelete
  2. நீங்கள் சுட்டிக்காட்டிய போது தான் கவனித்தேன். ம்.. உண்மை தான். கவனத்தில் கொள்கிறேன். மிக்க நன்றி.

    ReplyDelete
  3. கருத்து கவிதையாக இருக்கிறது! கருத்து மட்டும்!!!;-)

    ReplyDelete
  4. யோசிப்பவர் said...
    கருத்து கவிதையாக இருக்கிறது! கருத்து மட்டும்!!!;-)


    சத்தியமா புரியேலை. பூரண விளக்கத்தோடு பதிவிடுங்கள். பிளீஸ்.

    ReplyDelete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete
  6. நன்றாக இருக்கிறது..

    வாழ்த்துக்கள்..

    சூர்யா
    துபாய்
    butterflysurya@gmail.com

    ReplyDelete
  7. நல்வாழ்த்துக்கள் நளாயினி. ஓவிய உலகத்துக்குள் காலடி எடுத்து வைத்திருக்கிறீர்கள். அல்ப்ஸ் மலத்தொடரின் அழகான பகுதியில் வசிக்கும் ஒருகலைஞருக்குள் ஓவியம் முளைப்பது இயல்பானதுதான். உங்கள் விருந்தினராக வலே வந்திருந்தபோது மீண்டும் எனக்கும் ஓவியத்தில் நாட்டம் ஏற்ப்பட்டது. வண்ணத் தெரிவுகளும் கற்பனா விநோதங்களும் நன்றாக உள்ளது. முறைப்படியான ஓவியப் பயிற்ச்சி பெற்றால் மேலும் சிறப்பீர்கள். மீண்டும் எனது நால்வாழ்த்துக்கள்.
    வ.ஐ.ச.ஜெயபாலன்

    ReplyDelete