Wednesday, July 18, 2007

காலத்துயர்.



நேற்று வீதியில் நடந்து போகும் போது
ஒரு குழந்தை ஓடிவந்து
தான் அழகாக இருக்கிறேனா என
என்னைக்கேட்டு ஓடி மறைகிறது
சிரிக்கும் விழிகளோடு.

எனது குழந்தை
இச்சு இச்சென முத்தம் வைத்து
கன்னம் நனைக்கிறாள்
நான் கேக்காமலே.

வாவிக்கரையில் மனதாற நடந்த போது
நீந்தியும் பறந்தும் வருகின்றன வாத்துக்கள்
எனக்கு சாகஐம் காட்டி

என்னடா இது பனிக்காலம்
நான் நினைத்த மறுநாளே
சூரியன் எனக்கு காட்சிதருகிறான்.

மரங்கள் எல்லாம்
பசுமை இழந்து இருப்பதாய்
சொல்லிப்போனது காற்று.

ஆனால் உனது தொலைபேசி அழைப்பு மட்டும்
நடந்தேறாமல் காலம் துயரோடு கடக்கிறது.


நளாயினி தாமரைச்செல்வன்.
18-07-2007

Wednesday, July 04, 2007

ஓவியம். (18/03/2007)

ஓவியத்தின் மேல் கிளிக் செய்தால் பெரிதாக பார்க்க முடியும்.

Monday, July 02, 2007

பூக்கள் பேசிக்கொண்டால்........! (1)



ரகசியம் சொல்வதாய்
முத்தமொன்றை
வைத்து தொலைத்தேன்.
என்ன நீ....
ஒரு முத்தம் தானே.
அதற்கு இப்படியா யாரும்
முறைப்பார்கள்.
**

யோ பாவம் அந்த நகங்கள்.
அருகிருக்கும் செடிகள்.
என் வருகைக்காக
அவற்றை எவ்வளவு நேரம் தான்
பிய்த்து எறிவாய்..!
அட தூர நின்று
இதைக் கூடரசிக்காது விட்டால்
நான் உன் காதலியா என்ன.
**

தெப்படி உன் நெற்றியை
தடவிப்போகும் ஒற்றைத்தலைமுடி.
அதை நீ ஒதுக்கி ஒதுக்கி
கதைக்கும் போது
எத்தனை அழகு தெரியுமா.
**

ன்னை நான் கடக்கும் போது
அதெப்படி எனக்காக
இவ்வளவு அழகான பார்வையையும்
புன்னகையையும்பரிசளிக்கிறாய்..!
**

னது நண்பர்களோடு
இருக்கும் போது
என்னைக் கண்டதும்
ஒரு செருமல்.
அதெப்படி நண்பர்களுக்கேதெரியாமல்
என் செவி தடவிப்போகும்உந்தன் செருமல்.
**
பூக்கள் இன்னும் பேசும்.....

கவிதையும் நானே. ஓவியமும் நானே. இருப்பு. 2



பூக்கள் என்றான்
அலங்கரிக்க முடிந்தது.
மலர்கள் என்றான்
இறைவனை அர்ச்சிக்க முடிந்தது
பூவையர் என்றான்
மலர்களை சூட முடிந்தது.

மயில் என்றான்
தோகை விரித்து ஆடும் தகுதி
ஆண் மயிலுக்கானாலும்
மழையை ரசித்து ஆடுவதை
பார்க்க முடிந்தது.
குயில் என்றான்
கூவும் தகுதி ஆண் குயிலுக்கானாலும்
அந்த இசையை ரசிக்க முடிந்தது.

பெண்ணாக பிறந்ததனால்
வெறும் ஏற்றுமதிப்பண்டமாகி
வரவேற்பறையை அலங்கரிக்கும்
காகிதப்பூக்களாக
கண்களற்ற மயில்களாக
காதற்ற குயில்களாக
பூச்சாடியுள் வளர்க்கப்படும் செடிகளாக

ஓ... எம் வேர்கள் கிளைகள் கூட
அப்பப்போ வெட்டப்படும்.
மண் தனதியல்பிழக்க
புதிதாய் மாற்றப்படும்.
பல வேர்கள் அறுக்கப்படும்.
பன்னிரண்டு சென்ரிமீற்றர்
இருபத்து நான்கு சென்ரிமீற்றர் என
மாறுபட்ட சாடிகளில்
வளர்க்கப்படுகிறோம்.

எம் வேர்கள்
அதற்குள் உள்ள வளங்களை மட்டுமே உறிஞ்சி.
சூரிய ஒளி இல்லைத்தான்
ஆனாலும் கண்ணாடிகளுக் கூடாக வரும்
சொற்ப ஒளி கொண்டு
பச்சயத்தை தயாரித்து
வாழத்தான் துடிக்கிறோம்.

ஆனாலும் பல பூச்சாடி மரங்கள்
நீர் இன்றி
மண்மாற்ற ஆள் இன்றி
பச்சையம் தயாரிக்க வலுவின்றி
பட்டுத்தான் போகின்றன.

எங்கோ இரண்டொரு செடிகள் மட்டுமே
உயர்ந்து வளர்வதற்காய்
பனியிலும் வெய்யிலிலும்
பூத்து காய்த்து கனிந்து இலையுதிர்த்து
அத்தனை கால மாற்றத்திற்கும் ஈடு கொடுத்து
தனதிருப்பை இழக்காது
வாழ்ந்துகொண்டு தான் இருக்கின்றன.

நளாயினி தாமரைச்செல்வன்
9-12-2002
ஓவியத்தின் மேல் கிளிக் செய்தால் பெரிதாக பார்க்க முடியும்.