Monday, December 17, 2007

பூக்கள் பேசிக்கொண்டால்........! (4)


14)
உன் சிரிப்பினூடே வரும்
கன்னக்குழிகளால் தான்
நான் அதிகம்
தொலைந்து போகிறேன்.

15)
என் இதயம் எங்கும்
வியாபித்து இருப்பது
உன் விழிகளின்
உணர்வுகள் தான்.

16)
நேற்று நீ
வீட்டுக்கு வந்து போனதாய்
அம்மா சொன்னா.
எத்தனை நாள் தான்
முற்றம் பெருக்காமல்
உன் பாதச்சுவடுகளையே
அழகு பார்ப்பேன்.

நளாயினி.

பூக்கள் இன்னும் பேசும்.....

8 comments:

  1. // உன் சிரிப்பினூடே வரும்
    கன்னக்குழிகளால் தான்
    நான் அதிகம்
    தொலைந்து போகிறேன்.///

    சூப்பருங்க அக்கா.. இப்பிடியெல்லாம் கூட எழுதுவிங்களா?..

    கலக்கலா வந்திருக்கு
    கன்னக்குழியில் தடுக்கி விழுந்த காவியம்..:)

    ReplyDelete
  2. //நேற்று நீ
    வீட்டுக்கு வந்து போனதாய்
    அம்மா சொன்னா.
    எத்தனை நாள் தான்
    முற்றம் பெருக்காமல்
    உன் பாதச்சுவடுகளையே
    அழகு பார்ப்பேன்.//

    இது ரொம்பவே அருமையா இருக்கு...

    ReplyDelete
  3. கடைசி கவிதை நல்லாவே ரசிக்கும் படி இருந்தது.. :)

    ReplyDelete
  4. மிக ரம்மியமான
    எனக்கும் அவளுக்கும் இடையிலான
    நெருக்கமான பொழுதுகளின்
    உணர்வுகளை....
    தந்திருக்கிறது உங்களுடைய கவிதைகள் - அதாவது
    என் நாட்குறிப்பின் பக்கங்களை
    ஞாபகப்படுத்தியிருக்கிறது...

    நன்றி நளாயினி...
    எனக்கு இன்னுமொரு தூங்க முடியாத இரவை கொடுத்ததற்காக...

    ReplyDelete
  5. ரசனையான கவிதை

    ReplyDelete
  6. பெரும் பாலும் பெண்களின் கன்னக் குழிகள் ஆண்களை மயக்கும். முற்றம் பெருக்காமல் பாதச்சுவடுகளை அழக் பார்த்தல் - வித்தியாசமாக சிந்திக்கிறீர்கள் - அருமை - அருமை.

    பூக்கள் தொடர்ந்து பேசட்டும்.

    ReplyDelete
  7. //உன் சிரிப்பினூடே வரும்
    கன்னக்குழிகளால் தான்
    நான் அதிகம்
    தொலைந்து போகிறேன்.//

    "கன்னக்குழிகளில்" என்று இருந்தால் இன்னும் நன்றாக இருக்குமோ ? கவிதைகள் அருமை.

    ReplyDelete
  8. எல்லொருடைய வருகைக்கும் நன்றி. கொஞ்சம் பிசியானதாலை பின்னுர்ட்டமிட முடியவில்லை.

    ReplyDelete