Wednesday, December 12, 2007

பாலியல் வன்முறை.


ஓவியத்தின் மேல் கிளிக்செய்தால் பெரிதாக பார்க்க முடியும்.
Copyright © nalayiny

16 comments:

  1. ஓவியம் அருமையாக இருக்கிறது. ஆனாலும் என்னால் தலைப்போடு பொருத்திப் பார்க்க இயலவில்லை!

    ReplyDelete
  2. நல்ல பதிவுகள். தனது வாழ்க்கை பயணத்தின் சேமிப்பு. எங்கு இருந்து எடுக்கிறீர்கள்


    அன்புடன் ஜோதிபாரதி

    ReplyDelete
  3. Anonymous4:44 pm

    எப்படி இந்த படத்தை புருஞ்சுக்குறது-ன்னு சொன்னீங்கன்னா நல்லா இருக்கும். இதுபோல அடுத்த படங்களை புருஞ்சுக்குரதுக்கும் வசதியா இருக்கும்..
    புருஞ்சுக்காம படம் நல்லா இருக்குன்னு சொல்ல கஷ்டமா இருக்கு :).

    - நன்றி.
    நகுல்

    ReplyDelete
  4. குறிப்ப கொடுக்காம இருந்திருக்கலாம்..

    அக்கா.. படம் வேற பொருளை தருது..குறிப்பு சொல்லற மாதிரி எதுவும் தோனலை..

    ReplyDelete
  5. unmai than..ovium kooda pesu mendral athu than ithu
    Ungal valayil mudhal muraiyaga
    TC
    CU

    ReplyDelete
  6. என் வீட்டுக்கும் வாங்க.

    www.pudugaithendral.blogspot.com

    ReplyDelete
  7. மன்னிக்கனும்!
    ஒன்னுமே புரியலீங்க!

    :-(

    ReplyDelete
  8. Anonymous3:10 pm

    வலது:
    பாலியல் வன்முறைக்கு முன்.
    இடது:
    பாலியல் வன்முறைக்கு பின்.

    சரியா?
    சன்மானம் ஏதும் இல்லையா?
    ஏதோ எனக்கு புரிந்தது.

    ReplyDelete
  9. எல்லாவற்றையும் புரிந்துகொள்ள முயல்வது ஒரு மையத்துவ சிந்தனைப் போக்குதான். உங்கள் ஓவியங்கள் மிகவும் உணர்வைத் தூண்டக் கூடியவையாக உள்ளன. பாலியல் மிகைப்படுத்தல்களின் மற்றொரு விளைவு அதனை வன்முறைக் கொண்டு ஒடுக்குவதற்குதான். அதிகாரம் பாலியல் குறித்த பேச்சைப் பெருக்கிவிட்டு தனது ஆதிக்கத்தை நுணஅளவில் நடத்தி்க் கொண்டிருக்கிறது. உங்கள் ஓவியம் எனக்கு buggery குறித்த சமீபத்தில் படித்த ஒரு அரசியல் கட்டுரையை நினைவூட்டுகிறது. இது sodamite என்கிற பாலியல் முறையை வன்முறையாக குறிக்கிறதா? என்பது பிறிதொரு அரசியல் பேச்சாக மாறும். anal oral என்கிற கட்டங்கள் பற்றி பிராண்ட பேசுகிறார். அதில் அனல் என்பது ஆணிய பாலியலாகவும் ஒரலை பெண்ணிய பாலியலாகவும் வளர்த்தெடுக்கலாம். உங்கள் ஓவியம் anal பற்றியது எனில் அதனை ஆணிய பாலியல் வன்மறையாக சித்தரிப்பதாகக் கொள்ளலாம்.

    அருமையான ஓவியம். பல அர்த்தங்களை தருவதாக உள்ளது. பாராட்டுக்கள்.

    -ஜமாலன்.

    ReplyDelete
  10. 'anal oral என்கிற கட்டங்கள் பற்றி பிராண்ட பேசுகிறார்'

    இதனை

    'anal oral என்கிற கட்டங்கள் பற்றி பிராய்டு பேசுகிறார்'
    என திருத்தி வாசிக்கவும்.

    ஓவியத்தின் மற்றொரு பரிமாணம் சிறுமிகள் மீதான பாலியல் வன்முறை பற்றியதாக உள்ளது. முள்மரங்களில் கிடத்தப்பட்டு பாலியல் வன்முறையால் கிழித்தெறியப்படும் சிறுமிகள் என்பதாக இதனை வாசிக்க முடிகிறது.

    ReplyDelete
  11. யோசிப்பவர் a dit...
    "ஓவியம் அருமையாக இருக்கிறது. ஆனாலும் என்னால் தலைப்போடு பொருத்திப் பார்க்க இயலவில்லை!"

    ரசிகன் a dit...
    குறிப்ப கொடுக்காம இருந்திருக்கலாம்..

    அக்கா.. படம் வேற பொருளை தருது..குறிப்பு சொல்லற மாதிரி எதுவும் தோனலை..




    "எப்படி உங்களால் உணரமுடிகிறது. அதை சொன்னால் எனது ஓவியம் இன்னொரு திசையிலும் பயணிக்கிறதே என மகிழலாம் அல்லவா. தேடல்களும் வாழ்க்கை அனுபவங்களும் தானே பல திசைகளிற்கு நம்மை அழைத்துச்செல்கிறது.அNது போலத்தான் ஓவியமும்."

    ReplyDelete
  12. வாங்க Nஐhதிபாரதி நகுல். தென்றல் மாசிலா. வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நன்றி. கருத்துப்பகிர்வுதான் ஒன்றை புரிய முற்படுவதற்கான அடித்தளம். நிச்சயம் நீங்களும் ஓவியங்களை புரிந்துகொள்வீர்கள்.

    ReplyDelete
  13. வணக்கம் மாலன்.

    குழந்தைகள் பாலியல் வதைக்குள்ளாவதை சிறுகதை கவிதை சினிமா என யாவுமே சொல்லிச்செல்கிறது. இதனால் பாதிக்கப்படும் குழந்தை மனதில் சத்தமின்றி ஒரு யுத்தம் நடந்து கொண்டிருக்கிறது வாழ்நாள் முழவதும்.

    அதை விட இங்கு தினம் தினம் செய்திகளாக்கப்படும் குழந்தைகள் காணாமல் போதல். தந்தையாலேயே குழந்தைகள் கற்பமாதல் தொடர்பான செய்திகளும் வழக்குகளும். அதை விட கணவன்மார்களாலேயே பாலியல் வதைகளுக்கு உள்ளாகும் பெண்கள். போர்ச்சூழலில் இராணுவத்தால் பாலியல் வதைக்குள்ளாகும் பெண்கள் சிறுமிகள் ,சிறுவர்கள்.

    ( இதை விட அங்கொன்றும் இங்கொன்றுமாக ஆண்களாலேயே சிறுவர்களும் ஆண்களும் பாலியல் வதைக்குள்ளாவதையும் செய்திகளாக காணமுடிகிறது. அதே போல பெண்களால் பெண்களும் சிறுமிகளும் பாலியல் வதைக்குள்ளாவதையும் காணமுடிகிறது.)

    சேரிப்புற
    மக்களது வாழ்வை சித்தரிக்கும் ஒரு படம் பார்த்தேன். அதில் தாய் தந்தையின் உறவை காணும் குழந்தை மனதில் ஒரு

    வன்முறையாகவே பாலியல் சித்தரிக்கப்படுவதை காட்டுகிறது.முதன் முதலாக அதை காணும் குழந்தை அதனை ஒரு வன்முறையாகவே மனதில் கொள்ளும். இது யதார்த்தமே.

    இவை எல்லாம் என்னத்தை உணர்த்துகிறது.இயற்கைக்கு மாறான புணர்ச்சிப்பழக்கமள்ளவர்களைத்தானே. அதே போல இவையால் தான்இயற்கைக்கு மாறான புணர்ச்சிப்பழக்கம் உருவானது எனவும் கொள்ளலாம்.

    பாலியலின் தேவை அதன் உன்னதம் அதன் அழகு தெரியாதவர்களே இப்படிஅதனை சிதைத்துவருகிறார்கள்.

    அழகிய உலகை தரவேண்டுமானால் பாலியல் உணர்வு என்பது பாதுகாக்கப்படுவதோடு அழகாகக்கப்படலும் வேண்டும் தானே.

    அழகிய பாலுணர்வை சிதைத்தால் அழகிய உலகை, மக்களை நாம் உருவாக்கமுடியுமா? மூலவேரே ஆடி உலகம் சிதைந்துதானே போகும். ஒட்டமொத்தமாக இவற்றை உணர்த்தவே இதனை வரைந்தேன்.

    இந்த ஓவியத்தின் மூலம் இன்னும் நிறைய பயணிக்க முடியும். ஓவியத்தோடு ஒன்றித்து பயணித்து கருத்துக்களை தந்தமைக்கு நன்றி மாலன்.

    ReplyDelete
  14. //ஓவியத்தோடு ஒன்றித்து பயணித்து கருத்துக்களை தந்தமைக்கு நன்றி மாலன்.//

    மன்னிக்கவும். மாலன் என்று நீ்ங்கள் குறித்திருப்பது எழுத்தாளர் திசைகள் மாலனை மனதில் வைத்து என்றால் திருத்திக் கொள்ளவும். எனது பெயர் ஜமாலன். எழுத்தாளர் மாலனின் திசைகளைப் பார்த்து எழுத வந்ததால் எனது பெயரை ஜமாலன் என்று வைத்தக் கொண்டேன்.

    //இயற்கைக்கு மாறான புணர்ச்சிப்பழக்கமள்ளவர்களைத்தானே. அதே போல இவையால் தான்இயற்கைக்கு மாறான புணர்ச்சிப்பழக்கம் உருவானது எனவும் கொள்ளலாம்.//

    இக்கருத்துடன் என்னால் முழுமையாக உடன்பட முடியவில்லை. காரணம் பாலியில் என்பது இயல்புணர்ச்சி இவ்வுணர்ச்சி கலாச்சாரத்தால் மடைமாற்றம் செய்யப்படுகிறது. பசியும் (பொருளாதாரம் - உடல் வலு) பாலுணர்வு (பாலியல் - உடல் மறுஉற்பத்தி) அடிப்படையான உடல்களின் இயக்கமாகும்.இதுதான் புணர்ச்சி இயற்கையானது என்பதற்கு எந்நதவித அடிப்படைகளும் இல்லை என்பதே எனது நிலைபாடு. இயற்கைக்கு மாறாறனதாக இவை ஒடுக்கப்பட்டதின் விளைவே இன்று இவை குற்றவியலாக வடிவமைக்கப்பட்டு இத்தகைய மன வக்ர்களாக மாறி உள்ளது. அதனால் இத்தகைய குற்றங்களை நான் ஆதரிக்கவில்லை. இவை நமது கலாச்சார ஒடுக்குமுறையின் ஒரு பக்கவிளைவு என்பதே. இது குறித்து இங்கு நான் மேலதிகமாக விளக்க முயன்று அது தனிப்பதிவாகிவிடும்.


    //பாலியலின் தேவை அதன் உன்னதம் அதன் அழகு தெரியாதவர்களே இப்படிஅதனை சிதைத்துவருகிறார்கள்.//

    இப்படி பாலியலை அதன் இயல்பிற்கும் அதிகமாக உன்னதப்படுத்துவது மற்றுமொரு கட்டற்ற பாலியல் சுதந்திரம் என்கிற நிலைக்கு இட்டுச் செல்லக்கூடியது. பிரச்சனை பாலியலை ஒடுக்காமல் வெளிப்படுத்துவதற்கான ஒரு வெளி இருந்தால் அது ஒரு பேசுபொருளாக இல்லாமல் ஆகிவிடும். அதிகாரம் இதனை ஒரு பேசுபொருளாக வைத்திருப்பதையே கலாச்சாரம் என்கிற பெயரில் பல ஆண்டகளாக காத்துவருகிறது. பாலியலை புழங்கவிட்டு கண்காணித்து ஒடுக்குவதே அதிகாரத்தின் நுண் அரசியல் விளையாட்டு. மற்றபடி உங்களது ஓவியம் பாலியல் வன்முறை குறித்து தரவேண்டிய உணர்வுகளை தருகிறது.

    இவை விரிவாக எழதப்பட வேண்டியவை என்பதுடன் முடித்துக் கொள்கிறேன்.

    ReplyDelete
  15. இரண்டு மாலனுக்கும் வித்தியாசம் தெரியுமே. கவலை வேண்டாம்.ஐமாலன் என அழைக்கும் போது ஏதோ நெருக்கமில்லாதமாரிதிரி ஒரு உணர்வு. .

    ReplyDelete
  16. புரியவில்லை - புரிந்து கொள்ள முயற்சிக்கிறேன்.

    ReplyDelete