Sunday, September 18, 2005

காதல் செய்வோம் !




காதலின் பக்கங்களை புரட்டிப்பாற்கலாம் வாருங்கள். காதல் இன்றி வாழ்வேது......?!!!!!. காதலே எனது மூச்சாய். சூரியனோடு சண்டைசெய்பவள் நான். சூரியனையே எனது கைக்குள் அடக்க நினைப்பவள். காதலின்றி வாழ்வேது...!? காதலாகி கசிந்துருகி.....!!!!!!!!!! இன்னும் சொற்பமாய் மனிதமனங்களை ஒன்றிணைப்பது இந்த காதல் தானே..!.வாருங்கள்..! தாராளமாக காதல் செய்வோம். உணர்வுகள் இங்கே கவிதைகளாக; கட்டுரைகளாக;ஓவியங்களாக; நிழற்படங்களாக; நகைச்சுவைகளாக; சிறுகதைகளாக; வடிவம் பெறுகிறது.

வாழ்க்கை ஒரு முறை
வாழ்ந்து பார்.
வீழ்ந்து விடாதே.


தலையில் காக்கா எச்சம்
தற்செயல் நிகழ்வு
தடை தாண்டு.

மனிதருள் இறங்கு
மிரட்சி வேண்டாம்.
இயல்பறி.


வலைப்பூக்களின் வட்டத்தோடு இணைவதில் மட்டற்ற மகிழ்வு

நட்புறவோடு
உங்கள் நளாயினி
நளாயினி தாமரைச்செல்வன்.

21 comments:

இ.இசாக் said...

vaazthukal
thozhi.
thodarnthu sirappaaka ezuthunkal
anbu
Ishaq

நளாயினி said...

வாங்க இசாக். நலம்தானே.. நன்றி இசாக்.

நட்புடன் நளாயினி

அருள் குமார் said...

வாருங்கள் நளாயினி. வாழ்த்துக்கள். நானும் உங்கள் கட்சி தான். விரைவில் உங்கள் படைப்புகளை பதியுங்கள்.

நளாயினி said...

உங்களது அன்பான வரவேற்பு மகிழ்ச்சியை தருகிறது. நன்றி அருள்குமார் நன்றி மதன். ஓ நம்ம மதன். யாரடா என்று பாற்தேன்.

நட்புடன் உங்கள் நளாயினி

Anonymous said...

varungkaL akkaa thodarnthu eluthungkaL

Anonymous said...

மீண்டும் கண்டதில் மகிழ்ச்சி...

Suresh said...

வாங்க நளாயினி...

Ramya Nageswaran said...

வலைப்பூ உலகிற்கு வரும் உங்கள் வரவு நல்வரவாக வாழ்த்துக்கள்..

-/பெயரிலி. said...

வருக

வன்னியன் said...

நீங்கள் இப்பதான் வலைப்பதியத் துவங்கிறியளோ? இல்லாட்டி இது புதுப்பக்கமோ?
நீண்டகாலமா உங்கட பேர் வலைப்பதிவில அடிபட்டதே.
சரிசரி.
நானும் வருகவருகவெண்டு வரவேற்கிறன்.

நளாயினி said...

டஅனைவரது வருகைக்கும் மிக்க நன்றி.

U.P.Tharsan said...

நானும் என் பங்கிற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறேன். :-))

நளாயினி said...

பங்கிற்கெல்லாம் வேண்டாம் தர்சன். நட்போடு வாருங்கள். நட்போடு கரம்பிடித்து வரவேற்கின்றேன் தங்களையும்.

Chandravathanaa said...

வணக்கம் நளாயினி
உங்கள் மீள்வரவு கண்டு மகிழ்ச்சி.

பொல் கொண்டு தாக்கினாலும்
சொல் கொண்டு தாக்கினாலும்
பொருள் கண்டு வெல்லுங்கள்

நில் என்று கூவினாலும்
எள்ளி நகையாடினாலும்
மனந்தளராது நடை போடுங்கள்

வெல் என்று வாழ்த்தினாலும்
போலியாய் போற்றினாலும்
அவர் உள் கண்டு உறவாடுங்கள்

என்னென்ன வந்தாலும்
உங்கள் கொள்கையில் மாறாது
அன்பாலே கை கோருங்கள்.


நட்புடன்
சந்திரவதனா

நளாயினி said...

புரட்சிப் புதுமைக் கவியோடை வந்திருக்கிறியள். என் மனசெல்லாம் மத்தாப்பூ வணக்கம் சந்திரவதனாக்கா...! கிறுக்கல் மன்னனையும் அன்பாக கேட்டதாக சொல்லுங்கள்.

Anonymous said...

வணக்கம் நளாயினி அக்கா..
நலமா?

_______
Vasi

நளாயினி said...

ஓ...!!!! முந்தி என்னட்டை நிறைய செல்லக்கோவம் செல்லத்திட்டெல்லாம் வாங்கிக் கட்டீனீங்களெல்லா. உங்களை மீண்டும் கண்டதில் எனக்கு மிக்க சந்தோசம்.எப்பிடி சுகமா இருக்கிறீங்களா நீங்கள் ..? நாங்கள் நல்ல சுகம்.

Balamourougane said...

வாழ்த்துக்கள்

நளாயினி said...

வாங்க பாலமுருகன். நலமா நீங்கள். நான் நலம். சந்தோசமா இருக்கு.

நளாயினி said...

வணக்கம் காருண்யன். தங்கள் வருகைக்கு நன்றி. தங்கள் அறிவுரைகளை கவனத்தில் கொள்கிறேன். ஓ..! என்ன அடுத்த சிறுகதைத்தொகுதி வெளியீட்டு ஆயத்தங்களோ..¨?

ஜுனைத் ஹஸனி said...

தங்களின் சில கவிதைகளை மட்டும் படித்திருக்கிறேன். அனைத்தும் அருமை. அனைத்தையும் படித்துவிட்டு பின்னூட்டம் இடுகிறேன். நன்றி. junaid-hasani.blogspot.com