Friday, September 30, 2005

உணர்வும் மனசும்.


நினைவுக் கவலைகளை
மூட்டை கட்டிவைத்துவிட்டு
இன்று மட்டும்
மனதுக்கு அமைதி வேண்டி
மலைப்பகுதி ஒன்றில்.
யாரும் இல்லை.
ம்! றிலாக்சாய் மனசு.

இனிமை இனிமை
ஆகா இன்பப்பொழுது.

வேலைப்பழு
குழந்தைகள் சினப்பு
கணவனின் அன்புத்தொல்லை
இன்னுமே வாசிக்காத
ஊரில் இருந்து வந்த கடிதம்
எல்லாம் விலத்தி
ஆகா இன்பம் இன்பம் .

கீச் கீச் என என்
காதுவரை தடவிபோகும்
குருவிகளின் சங்கீதம்.

எறிந்து விட்ட
சில்லறையாய்
மரக்கிளைகளுக்கால்
தெரியும் சூரியனின்
ஒளிக் கதிர்கள்.

பச்சைப் பசுமையாய்
இதம் தரும் குளிர் ஒன்று
என்னை படர்வதாய்.
சுகமான அனுபவம் தான்.
நீண்ட நேரமாய்.

நிலவுக்கு பயந்து
பரதேசம் போனதாய்
என்னிலை ஆனது.
ஈ ஒன்று
ஈஈ என்று
இன்னல் செய்து
என் அமைதியை
குழப்பி நின்றது.

கையை ஓங்கினேன்
அடித்துக்கொல்ல

மின்னலாய் மனதுள்
பாவம் பாவம் ..
அதுவும் உயிர்தானே.

கொல்வதை நிறுத்தி
ஈயை ரசிக்க
மனசு இசைந்தது.

பறப்பதும்
தன் ஈர உதடு பதித்து
முத்தமிட்ட படி
என்னில் அமர்வதும்
கிசுகிசுத்து
கதைகள் பல
என்காதில் சொல்வதும்.

என்ன சொன்னது
என உணர முயன்ற எனக்கு
இடியொன்று
என்னுள் இறங்கியதாய்.
ஆ பாவம்...
இத்தனை நேரமும்
ஈஈ என்று
தனக்கே உரிய
எத்தனை துன்பத்தை
எனக்கு சொன்னதோ..........?
நளாயினி தாமரைச்செல்வன்.
15-6-2000

5 comments:

erode soms said...

இன்பதுன்பங்கள்
எல்லா உயிருக்கும்
சமமெனச்சாற்றியுள்ளீர்
உண்மை

Anonymous said...

ஈஈ என்று -கேள்விகளற்ற- தமிழர் இழிச்சவாயர் என்று சொல்லவந்ததோ ஒருவேளை நளாயினி. மனிதநேயத்தை இறுதிவரை பற்றிப்பிடிக்குமோர் கவிதை பசுமை கொள்கிறது தொங்கவிடப்பட்டுள்ள நிழற்படம்போலவே. மனசை மேய்கிறது. றிலக்ஸாய்...… இயல்பற்று சொருகிக்கிடக்கிறது கவிதையுள் இந்த வார்த்தை என்கிறது என் வாசிப்பு. எதிர்மறை அம்சங்கள் துரத்தும்போதுதான் நாம் தனிமையை நாடுகிறோம். குழந்தையின் நச்சரிப்பு என்பதும் கணவனின் அன்புத் தொல்லை என்பதும் -தனிமைக்கான- முரணாய் இல்லையா?

Anonymous said...

கவிதை என்றால் இவ்வளவுதானா என்று கேட்க வைத்தது...

நளாயினி said...

வணக்கம் ரவி. நலமா? நான் மிக்க நலம். நீங்கள் சொன்னபின் தான் தெரிகிறது றிலாக்ஸ்தொடர்பாக. எதிர்மறை அம்சங்கள் நம்மை துரத்துகிறபோது தான் நாம் அமைதியை நாடுகிறோம். அதே போல இயந்திரத்தனவாழ்வுள் சிக்குண்ட நாம் கொஞ்ச நேரம் அமைதியாக சத்தம் சலார் இன்றி இருக்க ஆசைப்படுவதும் உண்டு. அடுத்து குழந்தைகளின் நச்சரிப்பு கணவனின் அன்புத்தொல்லை முரணாக தெரிகிறது ஆனாலும் நான் எழுதியது மறைபொருளாக இருக்கிறது. கணவனது அன்பு அரவணைப்பு காதல் பாசம் இவற்றை சொல்ல வந்தேன். எதிர்மறையான சம்பவங்கள் நம்மை துரத்தும் போது கணவனின் இத்தகைய அன்பு பாசம் அரவணைப்பு அதிகமாவது வழமை தானே. அதைக் குhட சில சமயம் இந்த எதிர்மறையான விடயத்தின் தாக்கம் கணவனைக் குhட விட்டு விலத்தி தனிமையை நாடச்செய்து விடுவதும் உண்டு தானே.?

நளாயினி said...

வாங்க சத்யா..ஹ நீங்கள் குhறுவது எனக்கு புரியவில்லை