Monday, May 19, 2008

பூக்கள் பேசிக்கொண்டால்.... ! (10)


*
வருவேன் என கூறிச்சென்றாய்.
வரவே இல்லை
என் நெஞ்சோரத்து கனவுகள்
யாவுமே பசுமை இழந்து.
பட்டமரமாய் நான்.

*
வராவிட்டால் என்ன..!
வசந்தங்கள்
தொலைந்தா போனது.
நீ தந்து சென்ற
சுவாசங்கள்
என்னை அழகு படுத்தும்.

*
நீ வராமல் இருப்பது
நல்லது....!
கவிதைகளுக்கான
விதையாய் நீ.
எனது கவிதை கூட
நீ காணாமல் போகும்
தருணங்களில் தான்
உத்வேகம் கொள்கிறது.

*
நாளைய சந்திற்பிற்காய்
என்ன பேசலாம் என
பல தெரிவுகளாய்.
"தேவையற்ற பேச்சு வேண்டாம் .
காலநிலை பற்றி பேசுங்கள்"
என கூறியது இப்போது உறைக்கிறது.

*
"இங்கு நல்ல மழை.
அங்கு என்னவோ?"
"நல்ல பனி
இந்த நேரத்தில் கேக்கும் கேள்வியா? "
நீ பேசியது
இன்று புரிகிறது.

நளாயினி.

பூக்கள் இன்னும் பேசும்.....

6 comments:

ரசிகன் said...

/நீ வராமல் இருப்பது
நல்லது....!
கவிதைகளுக்கான
விதையாய் நீ.
எனது கவிதை கூட
நீ காணாமல் போகும்
தருணங்களில் தான்
உத்வேகம் கொள்கிறது.
//

அடடா.. அருமை:)

ரசிகன் said...

//இங்கு நல்ல மழை.
அங்கு என்னவோ?"
"நல்ல பனி
இந்த நேரத்தில் கேக்கும் கேள்வியா? "
நீ பேசியது
இன்று புரிகிறது.
//

அக்கா.. எனக்கு புரியலையே.. ஒருவேளை அம்புட்டு பக்குவம் வரலியோ:P

ரசிகன் said...

//வராவிட்டால் என்ன..!
வசந்தங்கள்
தொலைந்தா போனது.
நீ தந்து சென்ற
சுவாசங்கள்
என்னை அழகு படுத்தும்.//

சூப்பர்:)

நளாயினி said...

vaanko baby ,, nalam thaane.

தமிழன்-கறுப்பி... said...

///வராவிட்டால் என்ன..!
வசந்தங்கள்
தொலைந்தா போனது.
நீ தந்து சென்ற
சுவாசங்கள்
என்னை அழகு படுத்தும்.///

ம்ம்ம்...

தமிழன்-கறுப்பி... said...

///நீ வராமல் இருப்பது
நல்லது....!
கவிதைகளுக்கான
விதையாய் நீ.
எனது கவிதை கூட
நீ காணாமல் போகும்
தருணங்களில் தான்
உத்வேகம் கொள்கிறது.///

என்னவோ தெரியவில்லை பிரிவின் பொழுதுதான் கவிதைகளும் பிரவகிக்கிறது காதலைப்போலவே அப்படித்தானே...:)