Monday, December 08, 2008

உயிர்த்தீ......( 23------30)




*
மெதுவாகத்தான்
என் இதயம் திறந்துஉட்புகுந்தாய்.
ஆனால் இத்தனை
அதிர்வுகளை எனக்குள்
தருவாய் என
நான் அப்போ
நினைக்க வில்லை.
இது பற்றி உன்னோடு
கதைக்காமல் நான்
வேறு யாரோடு கதைப்பது.
நீ தானே என் நண்பனாச்சே.

*
எந்தப்பாதம் வைத்து
என் இதயத்துள்
புகுந்தாய்.!
அத்தனை உறுதியான
வருகை.
அது தான் கேட்டேன்.

*
கண் மூடி
துயிலுவோம்
என்றால்
அதென்னது
சிரிப்பு!
என் விழிகளைத் திறந்து.

*
இதயம் விட்டு விட்டு
துடிப்பதாக
எல்லாம் பொய்.
எமது சிரிப்பொலி அல்லவா
கேட்கிறது.

*
உன் அங்கவஸ்திரம்
கொண்டு என் உயிர்
பறித்தவனே!!
வாத்தியக்கருவி
ஒன்றை கண்டெடுத்தேன்.
அடடே!!
பார்த்துக் கொண்டிருக்கவே
எனக்குள் எத்தனை நாதம்.

*
எத்தனையோ செடி
வளர்க்கிறேன் வீட்டில்
தினமும் நீர் ஊற்றி
பசளை இட்டு
சூரிய ஒளிபட வைத்து.
அதெப்படி
சூரிய ஒளியில்
பச்சையமே தயாரியாது
என்னுள் இத்தனை
பசுமையாக வளர முடிகிறது
உன்னால்!

*
இதயத்துள்
சொல்லாமல்
கொள்ளாமல்
புகுந்து விட்டு
இத்தனை கலாட்டாவா?!!
குட்டிவிட்டனெண்டா.

*
மெல்லிய புன்னகையால்
தான் என்னை கவர்ந்தாய்.
இத்தனை வெரி சீரியஸ்சாக
சிந்திக்க வைத்து விட்டாயே.

12 comments:

நாகை சிவா said...

நல்லா இருக்கு :)

ஹரிணி அம்மா said...

எத்தனையோ செடி
வளர்க்கிறேன் வீட்டில்
தினமும் நீர் ஊற்றி
பசளை இட்டு
சூரிய ஒளிபட வைத்து.
அதெப்படி
சூரிய ஒளியில்
பச்சையமே தயாரியாது
என்னுள் இத்தனை
பசுமையாக வளர முடிகிறது
உன்னால்!

ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க!!!

காரூரன் said...

குளிர் நாட்டில் இருந்து
குளிர்மையான நினைவுகளை
அசை போடும் உங்களுக்கும்
உங்கள் குடும்பத்தாருக்கும்
மனமுவந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்!

cheena (சீனா) said...

நன்று நன்று நல்ல கவிதை - அக்டோபர் 2005 முதல் தேதியில் ஆரம்பித்த உயிர்த்தீ இன்னும் கனன்று கொண்டுதான் இருக்கிறது. அருமையாக இருக்கிறாது கவிதை.

Anonymous said...

உங்கள் கவிதை சூப்பர். இன்னும் நிறையா எழுதுங்கள். எனக்கும் கவிதை எழுதுவது மிகவும் விருப்பம். என்னுடைய தளம் ourtamil2009.blogspot.com

நட்புடன் ஜமால் said...

\\மெதுவாகத்தான்
என் இதயம் திறந்துஉட்புகுந்தாய்\\

ஆரம்பமே அருமை

நட்புடன் ஜமால் said...

\\இது பற்றி உன்னோடு
கதைக்காமல் நான்
வேறு யாரோடு கதைப்பது.
நீ தானே என் நண்பனாச்சே.\\

அருமை அருமை

மிக அருமை

நட்புடன் ஜமால் said...

\\எந்தப்பாதம் வைத்து
என் இதயத்துள்
புகுந்தாய்.!
அத்தனை உறுதியான
வருகை.
அது தான் கேட்டேன். \\

மறுபடியும் கிளாஸ்

வரிகளை தாண்டி பயனிக்க முடியவில்லை

கட்டிபோடுகிறது வரிகள்

நட்புடன் ஜமால் said...

\\இதயத்துள்
சொல்லாமல்
கொள்ளாமல்
புகுந்து விட்டு
இத்தனை கலாட்டாவா?!!
குட்டிவிட்டனெண்டா.\\

தூள்

நட்புடன் ஜமால் said...

\\மெல்லிய புன்னகையால்
தான் என்னை கவர்ந்தாய்.
இத்தனை வெரி சீரியஸ்சாக
சிந்திக்க வைத்து விட்டாயே. \\

ஹா ஹா ஹா

ஃபைனல் டச்சா

நல்லா இருக்கு

குடந்தை அன்புமணி said...

//மெதுவாகத்தான்
என் இதயம் திறந்துஉட்புகுந்தாய்.
ஆனால் இத்தனை
அதிர்வுகளை எனக்குள்
தருவாய் என
நான் அப்போ
நினைக்க வில்லை.//

காதலின் வீரியம் அதுதானே! வாழ்த்துக்கள் பல...

தினமலர் said...

மிகவும் நன்றாக உள்ளது :)