Saturday, June 09, 2007

உயிர்த்தீ......7




நாம் எல்லாம்
காதலை மட்டுமே
சுவாசித்து பழகியவர்கள்.
ஆண் பெண் நட்பை
சுவாசிக்க பழக்க வேண்டும்.

நான் இங்கு சொல்வது
சில சமயம்
பைத்தியக்காரத்தனமாக தெரியலாம்.
காதலைப்போன்ற
அத்தனை உணர்வும்
நட்புக்குள்ளும் உண்டு.

பிரிவு ஏக்கம்
இன்பம் துன்பம்
சல்லாபம் தழுவல்
குழந்தை தனம் எல்லாம்.

காதல் தனது ஆட்சியை
பள்ளியறையில்
முடித்துக்கொண்டு
மூச்சடங்கிப்போகிறது.

நட்பு அப்படியல்ல
இதயத்தின் இதயத்துள்
உணர்வின் உணர்வுள்
புதுப்புது அர்த்தங்களை
வாழ்வின் எல்லை வரை
தருவதாய்.

ஆண் பெண் நட்பை
இதுவரை சுவாசிக்க தவறியவர்க்கு
இது புரிய சந்தர்ப்பமேது?

9 comments:

sankar dubai said...

நட்புக்கு ஒரு இனிய கவிதையை மருளியுள்ளிர்கள்.மிகவும் ரசிக்கும் கவிதையாக காட்சியளிக்கிறது.

நளாயினி said...

nanre.

யோசிப்பவர் said...

மன்னிக்கனும். இது கவிதையாகத் தெரியவில்லை. உரைநடையாகவே இருக்கிறது

நளாயினி said...

நீங்கள் சொன்னா அதற்கு மறுப்பேது. அப்போ எனது உயிற்தீ கவிதைத்தொகுதி முழுக்க முழுக்க உரைநடைதான்.

Geetha Sambasivam said...

தி.ஜானகிராமன் எழுதிய "உயிர்த்தீ" பற்றிய விமரிசனமோன்னு நினைத்தேன். நீங்க கவிதைன்னு சொன்னாலும், இதை உரைநடைக் கவிதைனே சொல்லலாம்னு நினைக்கிறேன்.

நளாயினி said...

உயிர்த்தீ அனைத்தும் எனது ஆத்மாவில் இருந்து எழுந்த அப்பழுக்கற்ற உண்மையையே பேசுகின்ற உணர்வுகள். அதற்கு கவிதை என பெயர் வைத்தேன். உயிர்த்தீ எனது உயிர். உயிருக்கு வடிவமிருக்கா என்ன. நான் அதற்கு கவிதை என வடிவம்கொடுத்தேன். வசனநடை கவிதை என நீங்கள் சொல்கிறீர்கள். ஒருவருக்கு பல செல்லப்பெயர்கள் இருப்பது போல்.

நளாயினி said...

நன்றி கீதா சாம்பசிவம் தங்களது வருகைக்கும் பதிவுக்கும்.

காரூரன் said...

நளாயினி,

எனக்கும் மிகவும் பிடித்த உங்களின் உயித்தீ இது. மிகவும் இலகுவான நடையில் வார்த்தைகளை கோர்த்திருக்கின்றீர்கள். யாரோ ஒருவர் உரை நடை என்று கூறியுள்ளார்கள். இதில் எனக்கு உடன் பாடில்லை.
கலைஞரின் உரை நடையில் வந்த வரிகள்,
புலி மானை வேட்டையாடுமிடம் காட்டில்,
மான் புலியை வேட்டையாடுமிடம் கட்டில்.

இதை கவிஞர் பா. விஜய் கூறியதால் கவிதை வரிகளாகிவிட்டது.

பார்ப்பவர்களின் கோணத்தில் தான் எதுவுமே தங்கியுள்ளது. தொடர்ந்து எழுதுங்கள்.

வாழ்த்துக்கள்.

நளாயினி said...

mm. nanre.