Monday, July 02, 2007

கவிதையும் நானே. ஓவியமும் நானே. இருப்பு. 2பூக்கள் என்றான்
அலங்கரிக்க முடிந்தது.
மலர்கள் என்றான்
இறைவனை அர்ச்சிக்க முடிந்தது
பூவையர் என்றான்
மலர்களை சூட முடிந்தது.

மயில் என்றான்
தோகை விரித்து ஆடும் தகுதி
ஆண் மயிலுக்கானாலும்
மழையை ரசித்து ஆடுவதை
பார்க்க முடிந்தது.
குயில் என்றான்
கூவும் தகுதி ஆண் குயிலுக்கானாலும்
அந்த இசையை ரசிக்க முடிந்தது.

பெண்ணாக பிறந்ததனால்
வெறும் ஏற்றுமதிப்பண்டமாகி
வரவேற்பறையை அலங்கரிக்கும்
காகிதப்பூக்களாக
கண்களற்ற மயில்களாக
காதற்ற குயில்களாக
பூச்சாடியுள் வளர்க்கப்படும் செடிகளாக

ஓ... எம் வேர்கள் கிளைகள் கூட
அப்பப்போ வெட்டப்படும்.
மண் தனதியல்பிழக்க
புதிதாய் மாற்றப்படும்.
பல வேர்கள் அறுக்கப்படும்.
பன்னிரண்டு சென்ரிமீற்றர்
இருபத்து நான்கு சென்ரிமீற்றர் என
மாறுபட்ட சாடிகளில்
வளர்க்கப்படுகிறோம்.

எம் வேர்கள்
அதற்குள் உள்ள வளங்களை மட்டுமே உறிஞ்சி.
சூரிய ஒளி இல்லைத்தான்
ஆனாலும் கண்ணாடிகளுக் கூடாக வரும்
சொற்ப ஒளி கொண்டு
பச்சயத்தை தயாரித்து
வாழத்தான் துடிக்கிறோம்.

ஆனாலும் பல பூச்சாடி மரங்கள்
நீர் இன்றி
மண்மாற்ற ஆள் இன்றி
பச்சையம் தயாரிக்க வலுவின்றி
பட்டுத்தான் போகின்றன.

எங்கோ இரண்டொரு செடிகள் மட்டுமே
உயர்ந்து வளர்வதற்காய்
பனியிலும் வெய்யிலிலும்
பூத்து காய்த்து கனிந்து இலையுதிர்த்து
அத்தனை கால மாற்றத்திற்கும் ஈடு கொடுத்து
தனதிருப்பை இழக்காது
வாழ்ந்துகொண்டு தான் இருக்கின்றன.

நளாயினி தாமரைச்செல்வன்
9-12-2002
ஓவியத்தின் மேல் கிளிக் செய்தால் பெரிதாக பார்க்க முடியும்.

9 comments:

யோசிப்பவர் said...

பெண்ணீயத்தை ஆரம்பிச்சுட்டீங்களா?!?!;-(

நளாயினி said...

அப்பப்போ உணர்வு பேசும். ம்.. என்ன செய்வது. இது பழழழழழழழழசு. டோன் வொரி.


இன்னொரு நண்பரும் மெயில் போட்டிருந்தார் இலங்கையில் இருந்து. இதை விட்டா வேறு கவிதையே எழுத தெரியாதா என. ஆ ஊ எண்டா பெண்கள் இதைத்தான் எழுதுவீங்களா என்று. காதல் கவிதைகளே எழுத மாட்டீங்களா என்று. நான் நினைக்கிறன் எனது கவிதைகளை அவர் முழுமையாக பார்க்க வில்லை என.

குசும்பன் said...

அக்கா என்ன அடிக்க எடுத்த பிரஷ்ய கீழ வச்சுட்டீங்கதானே!!! :)
நம்ம இனி பிரண்ட்ஸ்...

அக்கா நீங்க சொல்லுற மயில், குயில், சொல்லாமல் விட்டம் யானையின் தந்தம், மான் கொம்பு எல்லாம் மிருகங்களுக்குதான் ஆனா மனிதன் என்று வந்து விட்டால் எல்லாம் பவரும் பெண்னுக்குதான்...அழகும் பெண்தான்

நளாயினி said...

குசும்பா ..! கடம்பா இது தானே வேண்டாம் எண்டிறது. உங்களுக்காக எனது கருத்தை மாற்ற முடியுமா..? எனக்கு ஆண்கள் தான் அழகாக தெரிகிறார்கள். விலங்கினத்தில் இருந்து மனிதர் வரை. பவரை பெண்கள் பறிக்கிறதாலை அல்லது பிறாண்டி ஆண்களிடத்தில் இருந்து எடுக்கிறதாலை ஆண்கள் சிலசமயம் அழகில்லாமல் தெரியலாம். பவரை கொஞ்சம் ஆண்களுக்கும் கொடுத்தால் அல்லது அவர்களிடத்தில் இருந்து பிறாண்டி எடுக்காமல் இந்த பெண்கள் இருந்தால் ஆண்கள் தான் பேரழகு. ஆண்களுக்கு அழகே பவர் தானே. பவறையும் புடுங்கி இந்த ஆண்களைப்போட்டு சிப்பிலி ஆட்டுற பெண்களை நிறைய பாத்திருக்கிறன்.

யோசிப்பவர் said...

//ஆண்கள் தான் பேரழகு//
புல்லரிக்குதுங்க. இதையே நான் சொன்னா யாராவது கேட்கிறார்களா?

நளாயினி said...

ஒன்றுமே இல்லாத பெண்களுக்குப் பின்னால் அலைய வேண்டியது. பிறகு உங்கடை எல்லாப் பவரையும் அவர்களுக்கு கொடுக்க வேண்டியது அல்லது பறிக்கிறபோதெல்லாம் ஓகே சொல்லி ஊமை மாடுகள் மாதிரி தலையாட்டுறது பிறகு கிடந்து புலம்ப வேண்டியது. தலைக்கு மேலை வைச்சு ஆடுறதும் தப்பு. காலுக்கு கீழே போட்டு மிரிக்கிறதும் தப்பு. அவரவர் பவரை காப்பாத்திக்கிட்டு வாழுறது தான் வாழ்க்கை. ஊமை மாடுகள் நிறையப்பேரை தினம் தினம் சந்திக்கிறன்.

MATHARASI said...

ஆனுக்கு ஆன் அளகாக தெறிஞ்சுகிட்டா அப்பிடி இண்டுவாங்க

பென்ணுக்கு பென் அளகா தெறிஞ்சுகிட்டா இப்படி இண்டுவாங்க

ஆணுக்கு இஞ்சூண்டு பென் தன்மயும் பெண்ணுக்கு இம்மாதுண்டு ஆன் தனமயும் கலவையாக இருந்து கிட்டால் தான் அளகு என்னு ஆரோ சொன்னாங்க

யோசிப்பவர் said...

//ஒன்றுமே இல்லாத பெண்களுக்குப் பின்னால் அலைய வேண்டியது. பிறகு உங்கடை எல்லாப் பவரையும் அவர்களுக்கு கொடுக்க வேண்டியது அல்லது பறிக்கிறபோதெல்லாம் ஓகே சொல்லி ஊமை மாடுகள் மாதிரி தலையாட்டுறது பிறகு கிடந்து புலம்ப வேண்டியது. தலைக்கு மேலை வைச்சு ஆடுறதும் தப்பு. காலுக்கு கீழே போட்டு மிரிக்கிறதும் தப்பு. அவரவர் பவரை காப்பாத்திக்கிட்டு வாழுறது தான் வாழ்க்கை. ஊமை மாடுகள் நிறையப்பேரை தினம் தினம் சந்திக்கிறன். //

அக்கா,

யாருக்கு பதில் சொல்லியிருக்கீங்க? எனக்கில்லைல?;-)

நளாயினி said...

யோசிப்பவர் said...

அக்கா,

யாருக்கு பதில் சொல்லியிருக்கீங்க? எனக்கில்லைல?;-)

11:36 AMஇல்லையண்ணா நானேன் உங்களுக்கு சொல்லுறன். சும்மா சொன்னன். தொப்பி அளவான ஆக்களுக்கு உதவுமே என.