
நேற்று வீதியில் நடந்து போகும் போது
ஒரு குழந்தை ஓடிவந்து
தான் அழகாக இருக்கிறேனா என
என்னைக்கேட்டு ஓடி மறைகிறது
சிரிக்கும் விழிகளோடு.
எனது குழந்தை
இச்சு இச்சென முத்தம் வைத்து
கன்னம் நனைக்கிறாள்
நான் கேக்காமலே.
வாவிக்கரையில் மனதாற நடந்த போது
நீந்தியும் பறந்தும் வருகின்றன வாத்துக்கள்
எனக்கு சாகஐம் காட்டி
என்னடா இது பனிக்காலம்
நான் நினைத்த மறுநாளே
சூரியன் எனக்கு காட்சிதருகிறான்.
மரங்கள் எல்லாம்
பசுமை இழந்து இருப்பதாய்
சொல்லிப்போனது காற்று.
ஆனால் உனது தொலைபேசி அழைப்பு மட்டும்
நடந்தேறாமல் காலம் துயரோடு கடக்கிறது.
நளாயினி தாமரைச்செல்வன்.
18-07-2007
6 comments:
good
thanks.
எதிர்பார்ப்பின் வலியை இயற்கையோடு, தன் சுற்றத்தோடு பொருத்தி வருந்துவது அழகு. இதுபோன்ற கவிதைகள் சங்க இலக்கிய அகநானூற்றில் படித்த நினைவு. தலைவனைப் பிரிந்த தலைவி வருந்துவதாக பல பாடல்கள் உள்ளன. வார்த்தைகளில் இன்னும் கொஞ்சம் சிக்கனம் பிடித்தால் இன்னும் நயமாக இருக்கும்.
karuthuku nanre.
evvalavuthan eluthinalum antha finishing touch than eluthupavarukku muhavari koduppathu, oru vasanam enralum unarvai uyirodu thravendum athuthan kavithai..athu unkalukku narakave varukirathu...(nice...)
எனது வலைத்தள வருகைக்கும் கருத்தக்கும் நன்றி sanjai.
Post a Comment