Tuesday, August 14, 2007

பூக்கள் பேசிக்கொண்டால்........! (2)



னது நண்பர்களோடு
இருக்கும் போது
என்னைக்கண்டதும் ஒரு செருமல்.
அதெப்படி நண்பர்களுக்கே தெரியாமல்
என் செவி தடவிப்போகும்
உந்தன் செருமல்.

***


ந்தன் கைவிரல்களோடு
எந்தன் கைவிரல்களை
பிணைத்துக் கொள்வதில் தான்
எனக்கு எத்தனை ஆனந்தம்.
அவை கூட உந்தன் மனசைப்போல்
அத்தனை மென்மை.

***


ன்பெயர் சொல்லி
அழைக்கும் போதெல்லாம்
என் விழிகள் தான்
உன் பெயர் சொல்வதாய் நீ..!
அட..! என் விழிகள்
எப்போது போச கற்றுக் கொண்டன. .!

***


ன் நாக்கு உச்சரிக்கும்
வார்த்தைப்பூக்களை
எவ்வளவு அழகாக
விழாது பாதகாத்து
என் செவி சேற்கிறது
உந்தன் உதடுகள்.

***


தடுகள் நோகாமல்
எப்படி உன்னால் பேச முடிகிறது.
ஆராய்ச்சி செய்து
என் விழிகள் சோர்ந்து விட்டன.
மின்னலாய் சில கதிர் கற்றைகள்.
உந்தன் பற்களில் இருந்து
என் கண் சேர்ந்த ஒளிக் கீற்றுகள்.

***


ன் வருகைக்காக காத்திருந்தேன்
இருள் எனைச்சூழ.
தூர உன் வருகையை
ஏனோ உடனமே உணர்ந்து விடுவேன்.
என்னைச்சூழ அழகிய பலஒளிவண்ணம்.

***
நளாயினி.

பூக்கள் இன்னும் பேசும்.....

10 comments:

காட்டாறு said...

அருமை அருமை. அத்தனையும் அருமை.

முனைவர் ப. குமார், சென்னை said...

கவிதை மிக நன்றாக உள்ளது. தமிழகத்திலுள்ளவர்களைக் காட்டிலும் தமிழை மிகச்சிறந்ததொரு ஊடகமாகப் பயன்படுத்துபவர்கள் புலம்பெயர்ந்தத் தமிழர்களே என்பதற்கு இதுவும் மிகச் சிறந்தவொரு சான்று.

உங்களுக்கு எனது தாழ்வான கருத்து என்னவென்றால், பிழை இல்லாமல் படைப்புகளைப் பதிவு செய்யவும்.

அன்புடன், ப. குமார், சென்னை.

நளாயினி said...

உண்மைதான் .வேலைப்பழு இயந்திர உலகம் பிள்ளைகள் மனசுக்கு பிடிக்காத இரண்டு நேர வேலை 9.00-2-30 பின் 17.00 - 22.30 இப்படி எல்லாம் கதை விட ஆசையாகத்தான் இருக்கு. ஆனா தமிழாச்சே.பதிவிற்கு நன்றி.

ஆதிபன் சிவா said...

akka sukama

நளாயினி said...

nalla sukam.neekal nalamthaane.

தறுதலை said...
This comment has been removed by a blog administrator.
N Suresh said...

அன்புள்ள திருமதி நளாயனி,

உங்களின் இந்த கவிதை வாசித்தேன், ரசித்தேன்... வாழ்த்துக்கள்...ஒவ்வொரு பத்திக்கு கீழும் எனது புரிதலின் வெளிப்பாடுகளை பதித்திருக்கிறேன்.

//உ
னது நண்பர்களோடு
இருக்கும் போது
என்னைக்கண்டதும் ஒரு செருமல்.
அதெப்படி நண்பர்களுக்கே தெரியாமல்
என் செவி தடவிப்போகும்
உந்தன் செருமல்.//

இது போன்ற நுன்னிய விஷயங்களை சொல்லவும் முடியுமென்று அறிந்து வியந்து போனேன்!

***

//உ
ந்தன் கைவிரல்களோடு
எந்தன் கைவிரல்களை
பிணைத்துக் கொள்வதில் தான்
எனக்கு எத்தனை ஆனந்தம்.
அவை கூட உந்தன் மனசைப்போல்
அத்தனை மென்மை.//


மென்மையான வரிகள்....


//உ
ன்பெயர் சொல்லி
அழைக்கும் போதெல்லாம்
என் விழிகள் தான்
உன் பெயர் சொல்வதாய் நீ..!
அட..! என் விழிகள்
எப்போது போச கற்றுக் கொண்டன. .!//

விழிகள் பேசுமென்பார்களே...அது தானோ இது....

***

//உ
ன் நாக்கு உச்சரிக்கும்
வார்த்தைப்பூக்களை
எவ்வளவு அழகாக
விழாது பாதகாத்து
என் செவி சேற்கிறது
உந்தன் உதடுகள்.//

செவிகளில் பெண்கள் பூவைக்க ஆரம்பித்தது இதன் அடிப்படையில் தானோ!!!

***

//உ
தடுகள் நோகாமல்
எப்படி உன்னால் பேச முடிகிறது.
ஆராய்ச்சி செய்து
என் விழிகள் சோர்ந்து விட்டன.
மின்னலாய் சில கதிர் கற்றைகள்.
உந்தன் பற்களில் இருந்து
என் கண் சேர்ந்த ஒளிக் கீற்றுகள்.//

மின்னலடிக்கும் பற்கள்...:-)

***

//உ
ன் வருகைக்காக காத்திருந்தேன்
இருள் எனைச்சூழ.
தூர உன் வருகையை
ஏனோ உடனமே உணர்ந்து விடுவேன்.
என்னைச்சூழ அழகிய பலஒளிவண்ணம்.//

ஆகா!

***

//பூக்கள் இன்னும் பேசும்.....//


பூக்களோடு பூக்கள் பூக்களேந்தி தொடர்ந்து பேச வாழ்த்துக்கள்.

தொழமையுடன்
என் சுரேஷ்
nsureshchennai@gmail.com

நளாயினி said...

உண்மையில் மனசெல்லாம் பூரிப்பு. அணுவணுவா ரசிச்சிருக்கிறீங்கள். நன்றி சுரேஷ்.


என் சுரேஷ்... said...
//உ
ன் நாக்கு உச்சரிக்கும்
வார்த்தைப்பூக்களை
எவ்வளவு அழகாக
விழாது பாதகாத்து
என் செவி சேற்கிறது
உந்தன் உதடுகள்.//

செவிகளில் பெண்கள் பூவைக்க ஆரம்பித்தது இதன் அடிப்படையில் தானோ!!!


இதனால்தானாக்கும் எல்லோரும் அனேகமாக சொல்லும்வார்த்தை எப்பவோ எனக்கு காதிலை பூவைச்சாச்சு என அல்லது காதிலை பூ சுத்தினது காணும் எண்டிறவையாக்கும்.:-)
:-)

தமிழன்-கறுப்பி... said...

pathilukku nanri...
ivatrai kavithaikal enpathilum
kathal varikal enral narayirukkum
nan unarkinra vidayankalai kavithaikalaka solliyirukkireerkal
nanri...
(oruvelai ungalukkum anupavamo...)

நளாயினி said...

உணர்வுகள் தானே கவிதை. உணர்வுகள் அனுபவத்தின் வாயிலாகத்தானே கிடைக்கிறது.