Thursday, November 29, 2007

பூக்கள் பேசிக்கொண்டால்........! (3)




னது பெயரையே
உச்சரித்த உனக்கு
தண்டணை தந்தது யார்?
எனக்குத் தெரியும்.
உன் உயிரினுள்
நான் தான் இன்னமும்
கசிந்து கொண்டு
இருக்கிறேன் என்று.
**


ன் உள்ளம் கையை தா..
நான் கன்னம் வைத்து துயில.
அப்போதான் நான் அழுவதும்
சிரிப்பதும் உணர்வாய்.
என்னை
அரவணைத்து கொள்ளவும்
என்னோடு சேர்ந்து
சிரித்துக்கொள்ளவும்
பாவம் தலையணைக்குத் தெரியாது.
**


ஞ்சணைதான்
தூக்கம் இன்றி
உழல்கிறேன்.
என் இயல்பு
நிலையை எல்லாம்
களவாடிச்சென்றவன் நீ!!

நளாயினி.

பூக்கள் இன்னும் பேசும்.....

3 comments:

தமிழன்-கறுப்பி... said...

பல நாட்களுக்கு பின்னர் பூக்கள் பேசியிருக்கிறது பூக்கள் எப்பொழுது பேசினால் என்ன அவை இனிமையானவைதானே? (கவிதைகளுக்காக மட்டுமல்ல...)

ரசிகன் said...

// என்னை
அரவணைத்து கொள்ளவும்
என்னோடு சேர்ந்து
சிரித்துக்கொள்ளவும்
பாவம் தலையணைக்குத் தெரியாது.//

அருமை.. சூப்பர்.......
நீங்க இப்பிடியெல்லாம் கூட எழுதுவிங்களா?..
ரொம்ப புடிச்சிருக்கு இந்த வரிகள்.

நளாயினி said...

Thamilan... a dit...
பல நாட்களுக்கு பின்னர் பூக்கள் பேசியிருக்கிறது பூக்கள் எப்பொழுது பேசினால் என்ன அவை இனிமையானவைதானே?

காதல், காதல் பற்றி பேசுவதென்றாலே அது இனிமைநிறைந்ததுதானே.


ரசிகன் a dit...
"அருமை.. சூப்பர்.......
நீங்க இப்பிடியெல்லாம் கூட எழுதுவிங்களா?..
ரொம்ப புடிச்சிருக்கு இந்த வரிகள்."

என்ன இப்பிடிக்கேட்டுவிட்டீர்கள்..