Thursday, January 31, 2008

உயிர்த்தீ...... 10






நட்புக்கு ஏது பால்?
எல்லோரும் தாராளமாக
நட்பை காதல் செய்வோம்.

உன்னை நான் இங்கு
பத்திரமாக பாதுகாக்கிறேன்.
நானும் பாவம்.
என்னையும் அங்கு
பத்திரமாக பாதுகாத்துக்கொள்.

உலகில் எஞ்சி இருப்பது
நட்பு ஒன்று தான்.
நீயும் நானும்
கை கோர்த்தே சென்றால்
அந்த வானம் கூட
வெகு தூரமில்லைத்தான்.

உன் வருகைக்காக ஏங்கி நின்றேன்.
அருகில் உள்ள பூக்கள் எனைப்பார்த்து
ஏளனமாய் சிரிக்கின்றன.
நட்பு என்ன
கேட்டதும் கிடைத்து விடும் வரமா?!! என.

என்னோடு பேச
நீ எப்போதும் வேண்டும்.

நீ எனக்கருகில் இருந்தால்
துன்பமே நெருங்காது.


துன்பம் பலதை இறக்கி வைத்தேன்.
அதற்காய் நீ அவற்றை காவிச் செல்லாதே.

நான் விடும் பிழைகளை
அடிக்கடி நீ தட்டிக்கேட்டதால்
பிழைவிட போகிறேன் என
எப்படி என்னால்
அனு மானிக்க முடிகிறது இப்போ?!!
நன்றிடா செல்லம்.


மிகவும் கோபமாய்த்தான் இருந்தேன்
உன்னைக்கண்டதும் எப்படிப்போனது?

பார் இந்த மெழுகுதிரியை
அப்படித்தான் எனக்குள்ளும்
பிரகாசத்தை ஏற்றி வைத்தாய்.

இந்த அலைகளின் தழுவல்போல்
எப்படி எனக்குள்
அப்படி ஒரு சுகத்தை
உன்னால் தர முடிந்தது.


நீ சிரியாது என்னை
சிரிக்க வைக்கிறாய்.
உனக்குள் உள்ள
சோகத்தில் கொஞ்சத்தை
இறக்கி வையேன்.


என்னை சிரிக்க வைத்தது போதும்
விடைபெறுவோமா?

No comments: