Monday, May 12, 2008

பூக்கள் பேசிக்கொண்டால்.... ! ( 9)


*
உணர்வுகளில் கலந்த பின்
உனக்கும் எனக்குமான
இந்த இடைவெளி
தாமரை இலையின் மேல்
உருண்டோடும்
தண்ணீரை
ஒத்தது.

*
கோபமாக இருந்தாலும்
நினைவுகளால்
பேசிக்கொண்டு தானே
இருக்கிறோம்.
தென்றலில் கலந்து விட்ட
மலரின் நறுமணம் போல்.

*
தென்றலாய்த்தான்
என்னைத் தழுவினாய்.
புயலை பூகம்பத்தை
எரிமலையைக் கூட
என்னுள் உன்னால்
தோற்றுவிக்க முடிகிறதே..!!??

*
உனக்கும் எனக்குமான
இந்த கோபங்களால் தான்
காதல் நம்மை
விழுங்கிக்கொள்கிறது
என நினைக்கிறேன்.


நளாயினி.

பூக்கள் இன்னும் பேசும்.....

6 comments:

cheena (சீனா) said...

தாமரை இலைத் தண்ணீர், தென்றலில் கலந்த நறுமணம், பூகம்பம் மற்ரும் எரிமலை, விழுங்கும் காதல் - அடடா - என்ன அழகான அடிகள் - அழகு தமிழில் எளிமையான உவமைகளைக் கொண்டு பூக்கள் பேசும் அற்புதத்தைப் படைத்ததற்கு பாராட்டுகள் - நல்வாழ்த்துகள்

தமிழன்-கறுப்பி... said...

///தென்றலாய்த்தான்
என்னைத் தழுவினாய்.
புயலை பூகம்பத்தை
எரிமலையைக் கூட
என்னுள் உன்னால்
தோற்றுவிக்க முடிகிறதே..!!?? ///

அதுதானே எப்படி முடிகிறது இப்படி காதல் ததும்ப எழுதுவதற்கு...

தமிழன்-கறுப்பி... said...

///உனக்கும் எனக்குமான
இந்த கோபங்களால் தான்
காதல் நம்மை
விழுங்கிக்கொள்கிறது
என நினைக்கிறேன்.///

சின்ன சின்ன கோபங்களில் நிறைந்து வழிவது காதல்...

காதல் பேசுகிற பூக்கள் இன்னும் மலரட்டும்...

அழகு...

ரசிகன் said...

//*
தென்றலாய்த்தான்
என்னைத் தழுவினாய்.
புயலை பூகம்பத்தை
எரிமலையைக் கூட
என்னுள் உன்னால்
தோற்றுவிக்க முடிகிறதே..!!?? //

அருமை..

ரசிகன் said...

//உனக்கும் எனக்குமான
இந்த கோபங்களால் தான்
காதல் நம்மை
விழுங்கிக்கொள்கிறது
என நினைக்கிறேன். //

ஊடலின் அவசியத்தையும் அழகா வர்ணிச்சிருக்கிங்க..:)

நளாயினி said...

எல்லோருடைய வருகைக்கும் மிக்க நன்றி. என்ன கொஞ்சம் பிசி. அவ்வளவு தான். அதனால் தான் இப்போதெல்லாம் அதிகம் எழுத முடிவதில்லை. தமிழ் மணத்திற்கும் வரமுடிவதில்லை. மிக விரைவில் பழு எல்லாம் முடிந்து வருவேன். எல்லோரும் நலம் தானே.