நட்பாய் எனக்கொரு நகல் எழுதேன்.
______________________________________________
சமூகத்தின்
வெறித்தனத்திற்கெல்லாம்
சாவு மணி அடிக்க
ஏன் தயங்கினோம்.?
உணர்வில் உயிரில்
கலந்த பின்
பிரிந்தோம் என்பது
வேதனை தான்.
மரணித்து
காதலை வளர்ப்போம்
என்றோம்.
எனக்குள் இருக்கும் நீயும்
உனக்குள் இருக்கும் நானும்
வாழ்ந்து கொண்டே
நினைவுகளில் வாழ்வோம்
என்கின்றனர்.
நீ தந்த சின்னச்சின்ன
பரிசுப்பொருளெல்லாம்
இன்றும் என்
தலை அணையின் கீழ்
ஒளித்து வைத்திருக்கிறேன்.
உன்னை எல்லாம் இப்போ என்
தொலை பேசி விசாரிக்கத்தவறுவதில்லை.
நமக்கு வயதாவது போல்
சமூக வெறிக்கும் வயதாகாதா என்ன?
புதிதாயல்லவா பிறப்பெடுக்கிறது.
சமூகம் திருந்தாது.
நாம் தான் மாற வேண்டும்.
காலம் போகிறது வயதும் போகிறது
வாயேன் ஓடிப்போய்
மாலை மாற்றுவோம்.
என் நாடி அடங்கு முன்
உனை ஒரு முறை
பார்த்திட வேண்டும்.
எங்கே இருக்கிறாய்.?
நட்பாய்
எனக்கொரு
நகல் எழுதேன்.
Monday, November 21, 2005
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
அழகான ஒரு பிரிவுப் பகிர்வு!
nanre senthilan. nalamaa?
Post a Comment