நங்கூரம் கவிதைத்தொகுதி பலவகையான காதலை சொல்லிச்செல்கிறது. காதல் மொழிகள் கூட ஆண்களுக்கே உரியதாக . அவர்களால் மட்டுமே உச்சரிக்கும் வாசகங்களாக. அதனை மாற்றும் பயனாகவே எனது காதல் கவிதைகள் ஆரம்பமானது எனலாம்.
அதில் ஒருதலைக்காதல், இருதலைக்காதல், பெற்றோரால் பிரிந்து போயிருக்கும் காதல், ஏமாற்றுக்காதல், இன மத பேதங்களால் பிரிந்து நிற்கும் காதல், மொழியால் இனத்தால் பிரிந்த நிற்கும் காதல், மனதுள் மட்டுமே பூத்துவிட்டு உதிர்ந்த காதல், எனது கணவரை எப்படி காதலித்தேன் என்பதனைக் கூட எழுதி இருக்கிறேன். இப்படியாக விரிகிறது நங்கூரம்.
ஒவ்வொருவரது காதல் மனநிலையையும் தமிழ்க்கயிறேறி கட்டி இழுத்து வந்து கவிதையாக்கி உள்ளேன் .
மொத்தம் 31 கவிதைகள் அதில் உள்ளன. இந்த புலம்பெயர்வாழ்வும் அதிக வேலைப்பழுவும் தனிமையும் என்னை நங்கூரத்தின் தொடர்ச்சியாக உயிர்த்தீ என்பதை எழுதிமுடித்தேன். அதன் நீட்சியாக பூக்கள் பேசிக்கொண்டால் அமைகிறது. அதன் நீட்சியாக உயிர்கொண்டு திளைத்தல் அமைகிறது.
முதலில் நங்கூரத்தையும் உயிர்த்தீயையும் கொண்டு வந்த பின் பூக்கள் பேசினால் என்ற தலைப்பை கொண்டு வரலாம் என நினைக்கிறேன். அதன் பின் உயிர்கொண்டு திளைத்தல் கவித்தொகுதியாகும்.
கவிஉலகுள் நான் பிரவேசித்தது எனது பதினேழு பதினெட்டு வயதில் என நினைக்கிறேன். போராட்ட சூழலும் இடப்பெயர்வும் பதுங்குகுளிவாழ்வும் எனது எழுத்தை தொடரவிடவில்லை.
புலம்பெயர்ந்த பின் எனது கணவரின் ஊக்கமும் எனது தாய்தந்தையரின் ஊக்கமும் எழுதவைத்தது எனலாம்.
பின்னர் வானொலிகள் தொடங்கிய காலம் எனது எழுத்து அதிக உத்வேகமானது என கூறலாம். புலம்பெயர் சகல தமிழ்வானொலிகளிலும் எனது கவிதைகளை பாடி இருக்கிறேன்.
எனது கவிதைகள் யாழ் இணையத்தளம், திண்ணை, திசைகள், பதிவுகள், வார்ப்பு, தமிழமுதம், தமிழ் மன்றம்; ஊடறு,சூரியன் இணையத்தளம் ஆகியவற்றில் வெளியாகி உள்ளன.
பதிவேடுகள் என பார்த்தால் சக்தி, ஈழநாடு, வடலி, ஊடறு, பெண்கள் சந்திப்பு மலர், அவள் விகடன், பூவரசு ஆகியவற்றில் வெளியாகி உள்ளன.
எனது கவிதைகளை வாசித்து அப்பப்போ உற்சாகமும் நிறைகுறைகளை பகிர்ந்து கொண்ட வாசக உள்ளங்களுமே என்னை மேலும் எழுதவைத்தனர் எனலாம். புத்தகத்தொகுதிகள் உங்கள் கை கிடைத்ததும் ஆக்க பூர்வமான விமர்சனங்களை தந்துதவுங்கள்.
என்றும் எழுத்துலக நட்புடன்
நளாயினி தாமரைச்செல்வன்.
Wednesday, November 23, 2005
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
வாழ்த்துக்கள் நளாயினி
மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
என் கவிஞ்ரின் தொகுப்பு வெளிவந்துவிட்டதா?
நூல் சிறப்பாக உள்ளதா..
எந்த பதிப்பகம்.
தொடர்ந்து எழுத வாழ்த்துகள்
புத்க அலுவலாக இருந்து விட்டேன். உடனடியாக பதில் எழுதாததற்கு குறை நினைத்துக்கொள்ள வேண்டாம்.நன்றி சந்திரவதனாக்கா.
வருகிற தைமாதம் வெளிவர உள்ளது.மனுஸ்யபுத்திரனின் மேற்பார்வையில் சகலதும் நடைபெறுகிறது.நன்றி இசாக்.
Post a Comment