Thursday, September 20, 2007

சாட்சி.







என் வழக்கு
ஒத்தி வைக்கப்பட்டது.
வாய்க்குள்
துணி அடைத்து
கைகளை
துவக்கின்பிடியால்
அடித்து முறித்து
வன்புணர்வுக்காய்.

தப்பி ஓடி
என் உயிர் காக்க
தோட்ட வெளியுள்.

சன்னம் பட்டதில்
சரிந்து விழுந்தேன்
முட்புதர் பற்றையுள்.

மெல்லிய உணர்வை
முட்புதருள் வைத்தே
காமத்தால்
பலாத்காரம் செய்தனர்.

வழக்குத் தொடர்ந்தேன்
மெல்லிய உணர்வை
ரணப்படுத்தியதற்காய்.
என் வழக்கு
ஒத்திவைக்கப்பட்டது.


என் மன
எரிப்பிளம்பின்
கசிவும்
பூகம்ப அதிர்வின் பின்
மரணித்துக்கிடக்கும்
மக்களின்
உறவின்
வேதனையின் கசிவும்
உடல் வதையின்
ஆழ் மன பச்சையின்
தளும்பும்
சாட்சியாய் போதாதாம்.

என்க்கு நடந்த
கொடுமையின்
கோரத்தை
கண்ட சாட்சி
யாராவதுவாருங்கள்.


மீண்டும் என்னை
கூண்டினுள் வைத்து
வார்த்தையால்
வன்புணர்வு செய்து
என்னைகொல்ல.

நளாயினி

நன்றி தை
நன்றி சக்தி.

2 comments:

வத்திராயிருப்பு தெ. சு. கவுதமன் said...

/மீண்டும் என்னை
கூண்டினுள் வைத்து
வார்த்தையால்
வன்புணர்வு செய்து
என்னைகொல்ல.
//

வரிகல் அருமை மட்டுமல்ல... உண்மையும் கூட!
இதோடு முடியாது, அடுத்த நாள் காலைச் செஇதியில் தொடங்கி வார இதழ், மாத இதழ்வரை தொடரும்...

தமிழச்சி said...

//மெல்லிய உணர்வை
முட்புதருள் வைத்தே
காமத்தால்
பலாத்காரம் செய்தனர்.//

ரணப்பட்ட வார்த்தைகள்
அடங்காத துயரத்தின் ஊடே
வழக்கம் போல்
பெண்ணீன் பிதற்றல்....
பெண் இனத்திற்கு கிடைத்த சாபக்கேடு தான்
இந்த வன்புணர்ச்சி
வழக்கம் போல்
சொல்லிச் செல்கிறது
சமுதாயம்.

உங்களின் கவிதை அருமை