Monday, December 08, 2008

உயிர்த்தீ......( 23------30)




*
மெதுவாகத்தான்
என் இதயம் திறந்துஉட்புகுந்தாய்.
ஆனால் இத்தனை
அதிர்வுகளை எனக்குள்
தருவாய் என
நான் அப்போ
நினைக்க வில்லை.
இது பற்றி உன்னோடு
கதைக்காமல் நான்
வேறு யாரோடு கதைப்பது.
நீ தானே என் நண்பனாச்சே.

*
எந்தப்பாதம் வைத்து
என் இதயத்துள்
புகுந்தாய்.!
அத்தனை உறுதியான
வருகை.
அது தான் கேட்டேன்.

*
கண் மூடி
துயிலுவோம்
என்றால்
அதென்னது
சிரிப்பு!
என் விழிகளைத் திறந்து.

*
இதயம் விட்டு விட்டு
துடிப்பதாக
எல்லாம் பொய்.
எமது சிரிப்பொலி அல்லவா
கேட்கிறது.

*
உன் அங்கவஸ்திரம்
கொண்டு என் உயிர்
பறித்தவனே!!
வாத்தியக்கருவி
ஒன்றை கண்டெடுத்தேன்.
அடடே!!
பார்த்துக் கொண்டிருக்கவே
எனக்குள் எத்தனை நாதம்.

*
எத்தனையோ செடி
வளர்க்கிறேன் வீட்டில்
தினமும் நீர் ஊற்றி
பசளை இட்டு
சூரிய ஒளிபட வைத்து.
அதெப்படி
சூரிய ஒளியில்
பச்சையமே தயாரியாது
என்னுள் இத்தனை
பசுமையாக வளர முடிகிறது
உன்னால்!

*
இதயத்துள்
சொல்லாமல்
கொள்ளாமல்
புகுந்து விட்டு
இத்தனை கலாட்டாவா?!!
குட்டிவிட்டனெண்டா.

*
மெல்லிய புன்னகையால்
தான் என்னை கவர்ந்தாய்.
இத்தனை வெரி சீரியஸ்சாக
சிந்திக்க வைத்து விட்டாயே.

Thursday, September 11, 2008

உயிர்த்தீ...... (18------22)


*
வாழ்க்கை அது
எத்தனை இன்பமானது!!
தெரியும் எனக்கும்.
ஆனாலும்
சுயநல கூடுகளுக்குள்
தெரியாமல்
மாட்டுப்பட்ட
அனுபவங்கள் தான்
எனக்கு அதிகம்.

*
கவிதையின்
தலைப்புக்கள்
பிடித்ததால்
படிக்க தொடங்கினேன்.
வரிவரியாய் பல
முனகல் சத்தங்கள்.
அத்தனை கவிதைக்குள்ளும்
ஒத்தடம் தேடும்மனசு

*

இந்த பூவுக்குள்ளும்
அழகியதான
ஒரு சின்ன மனசு
எத்தனை ஏக்கங்களை
சுமந்து இருக்கிறது என
எத்தனை பேருக்கு தெரியும்.

*

உயிரே சுவாலையாகி
எரிந்து நான் சாம்பராகும் முன்
உன்னைக் கண்டேன்.
அத்தனை வேகமாய்
எப்படி உன்னால்
அத்தீயை
நட்புடன் அன்பு கலந்து
அணைக்க முடிந்தது.

அன்பு வார்த்தைக்காய்
எத்தனை நாள் அழுதிருப்பேன்.

இந்த வார்த்தை போதாதென்று
நீயே தினம் அருகில் வேண்டும் என்றால்
என்ன மனசிது.!!


*
என் சுய நினைவை
இழக்க செய்தவனே!
படர்ந்திடு இனி என் மீது
நட்புக் கொடியாக.

Sunday, June 15, 2008

பூக்கள் பேசிக்கொண்டால்.... ! (11)


*
உனக்கான
கோபம் என்கானது தானே.
அந்த கோபங்களால் கூட
நான் மகிழ்ந்து தான் போகிறேன்.

*
எத்தனை கேள்விகளை
உன் முன்னே பரப்பியபடி.
அத்தனை கேள்விகளும்
மௌனமாய் நீ
காரணம் என்னவோ?
உனக்கும் அவை
பூர்த்தி செய்யப்படாத
கேள்விகள் என்றாவது
சொல்லித்தெலையேன்.
உனக்கு திமிர் அதிகம்
இல்லை என்றால்
சொல்லி இருப்பாயே.

*
உனது ஈகோவை விட்டிறங்கு.
அது தான்
நமது வாழ்க்கைக்கு நல்லது.


*
உனது பார்வையால் மட்டுமே
நான் மலர்ந்து கொள்கிறேனே.
அதெப்படி...!

*
உனது பார்வையில்தான்
எத்தனை சூரியர்கள்.
எனக்கு மட்டுமே தெரிந்த
புதிற்கான விடை இது.

*
மொட்டு பூப்பது இயல்பு .
எனக்கான மகரந்தங்களை
எடுத்து வந்தவன் நீ.

*
விழி திறந்து
மொழி பகர்ந்து
மௌனமொழி பேசி
ஆகா அற்புதமொழிகள் .
எம்மைப்போல் யாரும்
இவ்மொழிகள் உணர்ந்திரார்.


*
முத்தம் ஒன்று தந்தாய்
அதன் ஈரப்பதன்
அழியாமல் இன்றுரை.


நளாயினி.

பூக்கள் இன்னும் பேசும்.....

ஓவியம். 09/06/2008




ஓவியத்தின் மேல் கிளிக்செய்தால் பெரிதாக பார்க்க முடியும்.
Copyright © nalayiny

Monday, May 19, 2008

பூக்கள் பேசிக்கொண்டால்.... ! (10)


*
வருவேன் என கூறிச்சென்றாய்.
வரவே இல்லை
என் நெஞ்சோரத்து கனவுகள்
யாவுமே பசுமை இழந்து.
பட்டமரமாய் நான்.

*
வராவிட்டால் என்ன..!
வசந்தங்கள்
தொலைந்தா போனது.
நீ தந்து சென்ற
சுவாசங்கள்
என்னை அழகு படுத்தும்.

*
நீ வராமல் இருப்பது
நல்லது....!
கவிதைகளுக்கான
விதையாய் நீ.
எனது கவிதை கூட
நீ காணாமல் போகும்
தருணங்களில் தான்
உத்வேகம் கொள்கிறது.

*
நாளைய சந்திற்பிற்காய்
என்ன பேசலாம் என
பல தெரிவுகளாய்.
"தேவையற்ற பேச்சு வேண்டாம் .
காலநிலை பற்றி பேசுங்கள்"
என கூறியது இப்போது உறைக்கிறது.

*
"இங்கு நல்ல மழை.
அங்கு என்னவோ?"
"நல்ல பனி
இந்த நேரத்தில் கேக்கும் கேள்வியா? "
நீ பேசியது
இன்று புரிகிறது.

நளாயினி.

பூக்கள் இன்னும் பேசும்.....

Monday, May 12, 2008

பூக்கள் பேசிக்கொண்டால்.... ! ( 9)


*
உணர்வுகளில் கலந்த பின்
உனக்கும் எனக்குமான
இந்த இடைவெளி
தாமரை இலையின் மேல்
உருண்டோடும்
தண்ணீரை
ஒத்தது.

*
கோபமாக இருந்தாலும்
நினைவுகளால்
பேசிக்கொண்டு தானே
இருக்கிறோம்.
தென்றலில் கலந்து விட்ட
மலரின் நறுமணம் போல்.

*
தென்றலாய்த்தான்
என்னைத் தழுவினாய்.
புயலை பூகம்பத்தை
எரிமலையைக் கூட
என்னுள் உன்னால்
தோற்றுவிக்க முடிகிறதே..!!??

*
உனக்கும் எனக்குமான
இந்த கோபங்களால் தான்
காதல் நம்மை
விழுங்கிக்கொள்கிறது
என நினைக்கிறேன்.


நளாயினி.

பூக்கள் இன்னும் பேசும்.....

Sunday, May 11, 2008

வாழ்வுப்பயணத்தில் தம் முகமிழந்த அம்மாக்கள் அனைவருக்கும் இவ் ஓவியம் சமற்பணம்.

ஓவியத்தின் மேல் கிளிக்செய்தால் பெரிதாக பார்க்க முடியும்.
Copyright © nalayiny

Tuesday, April 01, 2008

பூக்கள் பேசிக்கொண்டால்.... ! ( 8)


*
இதழுக்கு அடக்கமாய்
எத்தனை முத்தங்களை
கோர்த்து வைத்திருந்தேன்.
உன்னைக் கண்டதும்
எப்படி நழுவியது?

*
எங்கே தொலைந்தது என
தேடிக்கொண்டிருந்தேன்
என் நாணம் எனும்
மலர்த்தோட்டத்து
அடிவானில் அழகு காட்டி நின்றது.

*
என் அத்தனை முத்தங்களின்
கோர்ப்புத்தான் வானவில்லாய்.
வானவில்லே இத்தனை அழகென்றால்
என் முத்தம்
எத்தனை அழகாக இருக்கும்.?!!
அடடா..!
நீ யோசிப்பது தெரிகிறது.

*
வானவில்லின் அத்தனை குணங்களும்
என் முதத்தத்திற்கு உள்ளது
வரும் போகும்.
கண்கள் அதனை ரசிப்பதுபோல்
முதத்தையும் உடல் நரம்புகள் உணரும்.

*
முத்தத்தை
கொடுத்து விடு
கொடுத்து விடு
என உணர்வு மண்டலங்கள்
சொல்லிக்கொண்டாலும்
இந்த நாணத்தை வெல்லத்தான்
இன்னும் முடியவில்லை.

*
ஒவ்வொரு சந்திப்பின் போதும்
மூர்க்கத்தனமாக
சிந்தித்துக்கொண்டாலும்
சூரிய மறைவின் போது
வானம் தோன்றும்
காட்சி மாற்றமாய்
நணம் வந்து தொலைக்கிறது

*
நாணத்தை வெல்லுவதற்கு
ஏதும் ஐடியா கொடேன்.
இதைக் கூட சொல்ல முடியாமல்
என் தலை
சூரிய அஸ்த்தமனத்தின் போது உள்ள
சூரியகாந்திப் பூவைப்போல்
தலையை கவிழ்த்துக்கொள்கிறதே...!

நளாயினி.

பூக்கள் இன்னும் பேசும்.....

Monday, March 31, 2008

பூக்கள் பேசிக்கொண்டால்.... ! ( 7)



*
மர அடியில்
உதிர்ந்த இலைகள்.
நுனிப்பகுதியில்
இன்னும் பல இலைகளை
தளிர்க்கச்செய்தபடி
கவிதைகளாய்...!
அப்படித்தான் நீ எனக்குள்.

*
ஒரு பூவுக்கு
எப்படி மகரந்தம் அவசியமோ
அப்படித்தான் நீ எனக்கு.

*
வானம்
குளித்து முடித்து
இறுதியாய்
வீழ்ந்த மழைத்துளியில்
சிலிர்த்துக்கொண்ட
பூவைப்போல்
பிறந்தவர்கள் தான் நானும் நீயும்:

*
உன் கைப்பிடியின் மென்மை
அத்தனை இயற்கையையும்
நலம் விசாரித்துப்போவதாய் எனக்குள்.

*
இந்த இயற்கையின் அவசியம்
அத்தனை உயிர்க்கும் எப்படியோ
அதைப்போலவே எனக்கு நீ.

நளாயினி.

பூக்கள் இன்னும் பேசும்.....

Sunday, March 23, 2008

ஓவியம். 22/2/2008

ஓவியத்தின் மேல் கிளிக்செய்தால் பெரிதாக பார்க்க முடியும்.
Copyright © nalayiny

Thursday, February 14, 2008

உங்கள் காதலனுக்கோ காதலிக்கோ உங்கள் காதலை சொல்ல தயங்குகிறீர்களா.


உங்கள் காதலனுக்கோ காதலிக்கோ உங்கள் காதலை சொல்ல தயங்குகிறீர்களா. இந்த மடல்களை அஞ்சல் செய்யுங்கள்.எல்லாம் ஒரு சின்ன கெல்ப்தான். நோ நோ தாங்ஸ் எல்லாம் எனக்கெதற்கு. நீங்கள் என்Nihய் பண்ணுங்க. அதுவே போதும். happy valentin .







Copyright © nalayiny


காதலர் தின ஸ்பெசல் ஓவியங்கள்.











ஓவியத்தின் மேல் கிளிக்செய்தால் பெரிதாக பார்க்க முடியும்.

Copyright © nalayiny

Wednesday, February 13, 2008

காதலர் தின ஸ்பெசல் கவிதை.


*
கண்ணிமைப்பொழுதில்
மின்னலாய் வந்து நீ தந்த முத்தம்
ஆகா முதல் முத்தம்
தெவிட்டாத தேன் தழிழாய்
இன்றும் கன்னத்தே ஒட்டி.
கனலாக்கும் என்னை.

*
மழைத்துளியாய்
எனக்குள் புகுந்து
என்னை பசுமையாக்குகிறாய்.
எப்படி முடிகிறது
உன்னால்
அத்தனை அன்பையும்
என் செல்களுக்குள் செலுத்த.

*
எனக்கு இதுவரை எதுவுமே
அழகாய் தெரிந்ததில்லை.
உன்னைப்படித்தேன்.
அடடே ..!
அழகிய கவிதை
எனக்கு நீ.

*
கவிதைகளை படிப்பதே
எனது மூச்சு.
உன் காதல்
எனக்கு கிடைத்ததும்
கவிதை படிப்பதையே
நிறுத்தி விட்டேன்.
நீயே எனக்கொரு
அழகியகவிதைதானே.

*
கவிஞர்களே..!
எனது காதலனைப்போன்ற
அத்தனை தன்மைகளையும்
கொண்ட கவிதையை
எனக்கு இனி நீங்கள்
ஒரு போதுமே தந்து விட முடியாது.

நளாயினி.

பூக்கள் இன்னும் பேசும்.....

Wednesday, February 06, 2008

உயிர்த்தீ...... 17



அழகிய ரம்மியம்
நிறைந்த மாலைப்பொழுதில்
புத்தகம் ஒன்றை
கையில் எடுத்து
வாசித்த போது தான்
தெரிந்தது
பல பக்கங்கள்
கிழித்தெறியப்பட்டதாய்.
புத்தகத்தை என்
நெஞ்சோடு அணைத்து
விரல்களால்
நீவி விட்டபடி
என்னை நானே
தேற்றிக்கொண்டேன்.
இதை விட என்னால்
என்ன செய்து விடமுடியும்
அந்த புத்தகத்திற்காய்.

Tuesday, February 05, 2008

உயிர்த்தீ...... 15 ,16




மனதை கவர்ந்த
பூவாய்.
கிட்டச்சென்று
அதன் அழகை
ரசித்த போது தான்
தெரிந்தது
என்னைப்போல்
சில இதழ்கள்
உதிர்ந்து போய்
இருக்கிறது என்பது.




உனக்குள்ளும் பல
கசங்கிய கவிதைகள்
எனக்குள்ளும் தான்.
அதனால் தான்
நாம் நட்பை
தேர்ந்தெடுத்தோமோ?

Monday, February 04, 2008

உயிர்த்தீ...... 15




நல்லதொரு
கவிதை வரியாய்
என் மனதுள்
தீ மூட்டிச்சென்றவனே!.
நான் எரிந்து
கொண்டிருக்கிறேன்
புரிகிறதா உனக்கு.

Sunday, February 03, 2008

உயிர்த்தீ...... 14




மனதை கவர்ந்த
புத்தகம் ஒன்றை
கண்டெடுத்தேன் .
பிரித்து படிக்க மனமின்றி
பார்த்துக் கொண்டு இருக்கிறேன்
பிரமை பிடித்த பைத்தியமாய்.

Saturday, February 02, 2008

உயிர்த்தீ...... 13




மூர்ச்சையாகும்
தறுவாயில்
ஒட்சிசனாய்
உன்னை நான்
சுவாசித்துக்கொண்டு
உயிர் பிளைத்தவள் .

சாவின் எல்லை வரை
நான் சுவாசிப்பதற்கு
உன் அனுமதி தேவை .

இல்லை என்றால்
சொல்லிவிடு
நான் உயிர் துறக்க.

Friday, February 01, 2008

உயிர்த்தீ...... 12




என் நினைவெல்லாம்
அள்ளிப்போனவனே!
என் சுய புத்தியையாவது
திருப்பி தாவேன்.

Thursday, January 31, 2008

உயிர்த்தீ...... 11




இருட்டறையுள்
எப்படியோ ஊடறுத்து
உட்புகுந்த ஒளிக்கற்றையாய் -நீ
அது சரி என்னை
என்ன செய்யப் போகிறாய்?!

உயிர்த்தீ...... 10






நட்புக்கு ஏது பால்?
எல்லோரும் தாராளமாக
நட்பை காதல் செய்வோம்.

உன்னை நான் இங்கு
பத்திரமாக பாதுகாக்கிறேன்.
நானும் பாவம்.
என்னையும் அங்கு
பத்திரமாக பாதுகாத்துக்கொள்.

உலகில் எஞ்சி இருப்பது
நட்பு ஒன்று தான்.
நீயும் நானும்
கை கோர்த்தே சென்றால்
அந்த வானம் கூட
வெகு தூரமில்லைத்தான்.

உன் வருகைக்காக ஏங்கி நின்றேன்.
அருகில் உள்ள பூக்கள் எனைப்பார்த்து
ஏளனமாய் சிரிக்கின்றன.
நட்பு என்ன
கேட்டதும் கிடைத்து விடும் வரமா?!! என.

என்னோடு பேச
நீ எப்போதும் வேண்டும்.

நீ எனக்கருகில் இருந்தால்
துன்பமே நெருங்காது.


துன்பம் பலதை இறக்கி வைத்தேன்.
அதற்காய் நீ அவற்றை காவிச் செல்லாதே.

நான் விடும் பிழைகளை
அடிக்கடி நீ தட்டிக்கேட்டதால்
பிழைவிட போகிறேன் என
எப்படி என்னால்
அனு மானிக்க முடிகிறது இப்போ?!!
நன்றிடா செல்லம்.


மிகவும் கோபமாய்த்தான் இருந்தேன்
உன்னைக்கண்டதும் எப்படிப்போனது?

பார் இந்த மெழுகுதிரியை
அப்படித்தான் எனக்குள்ளும்
பிரகாசத்தை ஏற்றி வைத்தாய்.

இந்த அலைகளின் தழுவல்போல்
எப்படி எனக்குள்
அப்படி ஒரு சுகத்தை
உன்னால் தர முடிந்தது.


நீ சிரியாது என்னை
சிரிக்க வைக்கிறாய்.
உனக்குள் உள்ள
சோகத்தில் கொஞ்சத்தை
இறக்கி வையேன்.


என்னை சிரிக்க வைத்தது போதும்
விடைபெறுவோமா?

Thursday, January 24, 2008

ஓவியம். 08/01/2008




ஓவியத்தின் மேல் கிளிக்செய்தால் பெரிதாக பார்க்க முடியும்.

Copyright © nalayiny

Tuesday, January 08, 2008

பூக்கள் பேசிக்கொண்டால்.... ! ( 5)



1 7)

ன் விழிகளே
இவ்வளவு கதைகளைச்
சொல்லும் போது
நீ கூட
நல்ல ஒரு
எழுத்தாளன்
ஆகலாமே.

18)

ட்பு என்பதை
உணர்வு பேசும்
காதல் என்பதை
இதயம் பேசும்.
எனக்குள்ளும்
உனக்குள்ளும்
உணர்வும்
இதயமும
ஒன்றாய் கலந்து
பேசுகிறது.

19)

ன் விழிகள் சொல்லம் ஐhலம்
என் முத்தத்தின் ஊற்று.
உன் விழிகள் சொல்லும் கதைகள்
என் முத்தத்தின் அத்திவாரம்.
உன் விழிகள் சொல்லும் தாபம்
என் முதத்தத்தின் சத்தம்.


நளாயினி.

பூக்கள் இன்னும் பேசும்.....