Friday, November 04, 2005

தேசியப் பண் எனது பார்வை.

சொல்லிக் கருக்கட்டவதில்லை கவிதை. அணுவணுவாக மனசு வதைத்து, பிழிந்து, உய்த்து, தொலைந்து, உயிர்த்து, கனத்து, உயிர்த்து, ததும்பி, வழிந்து, ஓடுவது தான் கவிதை.

அதுகும் இங்கே மிடுக்கோடு துள்ளல் நடையோடு உயர் விச்சோடு என்று வேறு சொல்லி இருக்கிறார்கள். கவிதை வரும் அத்தனை தன்மைகளோடு நாம் இது வரை அனுபவித்து எழுதி இராத வெற்றி வாகை இதுவரை சொல்லப்பட்டிராத மீடுக்குடன் என நான் நினைக்கிறேன் வீர ஆவேசம் பொங்கிய மகிழ்வை கூறும் கவிதையாக வரல் வேண்டுமென. அதை நினைத்ததும் எழுத முடியாது.

மிடுக்குடன் துள்ளல் நடையுடன் உயர் வீச்சுடன் என கூறுகிறபோது புலம்பெயர் மண்ணில் வாழும் என்னால் காத்தவராயன் கூத்தம் சூரன் போருமே மனக்கண் முன் வருகிறது.

அத்தனை போராட்டங்களிலும் அருகே இருந்தவர்களால் மட்டுமே இந்த பண்ணை உருவாக்க முடியும்.

நொந்து வெந்து வீழ்ந்து துவண்டு துடித்து அழுது புலம்பி அரற்றி ஆசவாசமாய் சமாதானமாகி இனியும் நாம் வீழ்ந்து போகக் கூடாது என நினைத்து திடீர் என எழும்பி மிடுக்குடன் துள்ளல் நடையுடன் வீர ஆவேசம் பொங்க நின்ற அனுபவம் உடையவர்களால் மட்டுமே துள்ளல் நடையுடன் வீறுகொண்ட உயர் வீச்சுடன் எழுதமுடியும். அது தான் உண்மை.

அத்தகைய தன்மை அனைத்து போராட்டங்களின் வெற்றி தோல்வி மரண ஓலம் ஒப்பாரி இவற்றிற்கு அருகிலிருந்தவர்களாலேயே எழுதமுடியும்.

எனது பார்வை முடிந்த முடிபல்ல.புலம்பெயர் தமிழர் யாராவது எழுதினாலும் எழுதிவிடலாம்.

நளாயினி தாமரைச்செல்வன்.

5 comments:

erode soms said...

மரணத்தை வென்று மாலைசூடி
ஆர்ப்பாட்டமில்லா அலையென
இராக்கால மின்மினியென
காயங்களில் பூத்த புதுமலரென
யுகங்களை புரட்டும் கதிரென
எழுக!!!

நளாயினி said...

உங்கள் வாழ்த்து உரியவர்களைப்போய் சேரட்டும். நன்றி சித்தன். தாங்கள் நலம்தானே.

Chandravathanaa said...

உண்மைதான் நளாயினி
சொல்லிக் கருக்கட்டுவதில்லை கவிதை

நளாயினி said...

அந்த பண்ணை யார் எழுதப்போகிறார்கள் எப்படி அமையும். அந்த உணர்வுமிக்க கவிதையை பார்க்க மிகுந்த ஆவலுடன் கூடிய ஒரு பரபரப்பு .

ரங்கா - Ranga said...

கவிஞரின் 'நீ மணி நான் ஒலி' கவிதையின் கடைசி பத்தி:
அனுபவித்தே தான் அறிவது வாழ்வெனில்
ஆண்டவனே நீ ஏனெனக் கேட்டேன்.
ஆண்டவன் சற்று அருகு நெருங்கி
அனுபவமே நான் தான் என்றான்.