Wednesday, February 13, 2008

காதலர் தின ஸ்பெசல் கவிதை.


*
கண்ணிமைப்பொழுதில்
மின்னலாய் வந்து நீ தந்த முத்தம்
ஆகா முதல் முத்தம்
தெவிட்டாத தேன் தழிழாய்
இன்றும் கன்னத்தே ஒட்டி.
கனலாக்கும் என்னை.

*
மழைத்துளியாய்
எனக்குள் புகுந்து
என்னை பசுமையாக்குகிறாய்.
எப்படி முடிகிறது
உன்னால்
அத்தனை அன்பையும்
என் செல்களுக்குள் செலுத்த.

*
எனக்கு இதுவரை எதுவுமே
அழகாய் தெரிந்ததில்லை.
உன்னைப்படித்தேன்.
அடடே ..!
அழகிய கவிதை
எனக்கு நீ.

*
கவிதைகளை படிப்பதே
எனது மூச்சு.
உன் காதல்
எனக்கு கிடைத்ததும்
கவிதை படிப்பதையே
நிறுத்தி விட்டேன்.
நீயே எனக்கொரு
அழகியகவிதைதானே.

*
கவிஞர்களே..!
எனது காதலனைப்போன்ற
அத்தனை தன்மைகளையும்
கொண்ட கவிதையை
எனக்கு இனி நீங்கள்
ஒரு போதுமே தந்து விட முடியாது.

நளாயினி.

பூக்கள் இன்னும் பேசும்.....

8 comments:

pudugaithendral said...

காதலைப் பற்றி எத்தனை பேசினாலும், எழுதினாலும் அலுப்பதில்லை.

அருமையாக இருக்கு,

வாழ்த்துக்கள்.

குசும்பன் said...

கவிதைக்கு ஏற்ப உங்கள் ஸ்டைலில் ஒரு படம் போட்டு இருந்தால் இன்னும் மிக அருமையாக இருந்து இருக்கும். அருமை!

நளாயினி said...

தென்றல் தவழ்ந்திருக்கிறது என் வாசலில: நன்றி தென்றல்.

நளாயினி said...

வாங்கள் குசும்பன். எல்லாவற்றுக்கும் நிறைய படம் போட்டு பயமுறுத்த வேண்டாமே என விட்டுவிட்டேன்.

Anonymous said...

//கவிஞர்களே..!
எனது காதலனைப்போன்ற
அத்தனை தன்மைகளையும்
கொண்ட கவிதையை
எனக்கு இனி நீங்கள்
ஒரு போதுமே தந்து விட முடியாது//

அப்படியானால் அவன் உண்மைக் காதலனகாத்தான் இருப்பான். என் கண்ணனைப் போல..

நல்ல கவிதை

நளாயினி said...

oo! நன்றி நன்றி நன்றி நன்றி
நவன் .

erode soms said...

அனுபவக்காதல் துள்ளி வருகிறது

நளாயினி said...

துள்ளித் துள்ளி போகும் பெண்ணே சொல்லிக்கொண்டு போனால் என்ன கள்ளி (கள்ளா) உந்தன் பேரென்ன... ஓ சித்தானா வாங்க கருத்தக்கு அதாவது உண்மைக்கருத்தை தந்தமைக்கு மிக்க நன்றி.