Wednesday, May 16, 2007

HYcoo poem.

1)உறவுகளை காணோம்.

மலர்க் கொத்துக்கள்.

முதியோர் இல்லம்.



2)ஈழ வான்பரப்பில்

இயந்திரப் பறவைகள்

தமிழின அறுவடை.


3)சிறகரிந்து

வீட்டில் கற்கும் கிளி

பெண்.


4)பசி

ஏப்பம் விட்டது

அம்மா தயே.


5)உழாது

விதைத்த நெல்மணி

சிசுக்கொலை.


6)முத்தம்

கலைத்த முகில்

கார் கூந்தல்


7)அம்மா திரித்த

கயிறு

தொப்புள் கொடி.



8)சூரியனின்

கை பிடித்துப் போகிறாள்.

சூரிய காந்திப்பூ



9)

மனிதம்

மண்டியிட மறுப்பு

போர்




10)சிவந்த விழி

கன்னத்தளும்பு

அராஜக கணவன்

ஆக்கம் நளாயினி தாமரைச்செல்வன்.

15 comments:

மாசிலா said...

//ஈழ வான்பரப்பில்

இயந்திரப் பறவைகள்

தமிழின அறுவடை.//

//பசி

ஏப்பம் விட்டது

அம்மா தயே.//

மனதில் நின்று மிகவும் சிந்திக்க வைத்த வரிகள்.

பகிர்ந்தமைக்கு நன்றி.

நளாயினி said...

நன்றி. மாசிலா

Anonymous said...

அடடாடா.. காணக் கிடைக்குது இல்லை..!
எங்கு போய்டீர்கள்?
என்னை ஞாபகம் இருக்கிறதா??

நன்றாக இருக்கிறது உங்கள்
மூன்று வரிகள்..!!

நேசமுடன்..
-நித்தியா

நளாயினி said...

உங்களைத்தான் காணக்கிடைக்குதில்லை தற்செயலாகத்தான் இன்று கண்டேன்.

Anonymous said...

//மனிதம்

மண்டியிட மறுப்பு

போர்//

இக்கவிதையின் அர்த்தம் மனிதன் போருக்கு புறங் காட்டக் கூடாது என்பது.

சரிதானே?

நளாயினி said...

மனிதநேயமற்றவர்களாலும போர் உருவாகிறது என்பதாகவும் எடுக்கலாம். நான் இதே கருத்துப்படத்தான் எழுதும்போது எழுதினேன்.ஒத்திசையாதவர்களாலும் விட்டுக்கொடுப்புகள் இன்மையாலும் தானே போர் குழப்பங்கள் உருவாகிறது. மனிதநேயம் அதிகமுள்ளவர்களால் அதை பற்றி இருப்பவர்களால் மனிதநேயத்தை வளர்த்தக்கொள்பவர்களால் குழப்பங்கள் ஏது? போர் ஏது.

நான் என்ற திமிரும் அகங்காரமும் உள்ளவர்களிடம் மனிதநேயமேது. அவர்களால் ஒருபோதுமே மண்டியிடமுடியாது. இவற்றை மனதில் கொண்டே இதை எழுதினேன்.நன்றி.

நிலாரசிகன் said...

2)ஈழ வான்பரப்பில்

இயந்திரப் பறவைகள்

தமிழின அறுவடை.


3)சிறகரிந்து

வீட்டில் கற்கும் கிளி

பெண். //

நச்சென்ற கவிதைகள். வாழ்த்துக்கள்.

நளாயினி said...

நன்றி நிலாரசிகன். நலம்தானே.

யோசிப்பவர் said...

எனக்கு ரசித்தவை - வரிசைகிரமமாக
//உறவுகளை காணோம்.

மலர்க் கொத்துக்கள்.

முதியோர் இல்லம்.
//

//மனிதம்

மண்டியிட மறுப்பு

போர்
//

//முத்தம்

கலைத்த முகில்

கார் கூந்தல்
//

//சூரியனின்

கை பிடித்துப் போகிறாள்.

சூரிய காந்திப்பூ
//


கவிதைகள் எழுதி ரொம்ம்ம்ம்ப நாட்களாகின்றன. இப்பொழுது மறுபடியும் எழுதலாமா என்று யோசிக்கிறேன்!!!

நளாயினி said...

எழுதினாப் போச்சு.

த.அகிலன் said...

இவ்வளவு பெரிசா இருக்கிற இந்த ரெம்லேற்ற மாத்தினா என்ன? உறுத்தலா இருக்கு..:)))))

வினையூக்கி said...

//ஈழ வான்பரப்பில்

இயந்திரப் பறவைகள்

தமிழின அறுவடை. //

அருமை ...

வொய் தலைப்பு இன் english.

நளாயினி said...

த.அகிலன் said...
இவ்வளவு பெரிசா இருக்கிற இந்த ரெம்லேற்ற மாத்தினா என்ன? உறுத்தலா இருக்கு..:)))))


ஓ அதுவா. வாழ்க்கை ஒரு முறை வாழ்ந்த பார் வீழ்ந்த விடாதே என்ற அழகிய எனது கவிதைக்கு ஓவியத்தின் மூலம் வர்ணம் கொடுத்திருக்கிறேன். அது நான் கீறியது. அதனால் தான் அதனைப்போட்டிருக்கிறேன். அதனை நீக்க மனசு வருதா என பார்ப்போம். கொஞ்ச அவகாசம் தாங்களன்.

நளாயினி said...

வினையூக்கி said...
//ஈழ வான்பரப்பில்

இயந்திரப் பறவைகள்

தமிழின அறுவடை. //

அருமை ...

வொய் தலைப்பு இன் english.

ஓ அதுவா தமிழில் எழுத எழுத்து தேடினேன். காணம். அது தான் ஆங்கிலத்திலேயெ எழுதினேன். அடடாh நீங்கள் மும் மொழிக்கலப்போ. ம்.. நல்லாத்தான் இருக்கு.

bales bala said...

Aha adputham!!!