Sunday, February 06, 2011

வாருங்கள் சேர்ந்தே நடக்கலாம்.!!



படத்தின் மேல் சொடுக்கி பெரிதாக்கி பார்க்கவும்.


Copyright © nalayiny

Wednesday, February 25, 2009

அடங்க மறுத்தல்.





நன்றி புதினம்.

Monday, December 08, 2008

உயிர்த்தீ......( 23------30)




*
மெதுவாகத்தான்
என் இதயம் திறந்துஉட்புகுந்தாய்.
ஆனால் இத்தனை
அதிர்வுகளை எனக்குள்
தருவாய் என
நான் அப்போ
நினைக்க வில்லை.
இது பற்றி உன்னோடு
கதைக்காமல் நான்
வேறு யாரோடு கதைப்பது.
நீ தானே என் நண்பனாச்சே.

*
எந்தப்பாதம் வைத்து
என் இதயத்துள்
புகுந்தாய்.!
அத்தனை உறுதியான
வருகை.
அது தான் கேட்டேன்.

*
கண் மூடி
துயிலுவோம்
என்றால்
அதென்னது
சிரிப்பு!
என் விழிகளைத் திறந்து.

*
இதயம் விட்டு விட்டு
துடிப்பதாக
எல்லாம் பொய்.
எமது சிரிப்பொலி அல்லவா
கேட்கிறது.

*
உன் அங்கவஸ்திரம்
கொண்டு என் உயிர்
பறித்தவனே!!
வாத்தியக்கருவி
ஒன்றை கண்டெடுத்தேன்.
அடடே!!
பார்த்துக் கொண்டிருக்கவே
எனக்குள் எத்தனை நாதம்.

*
எத்தனையோ செடி
வளர்க்கிறேன் வீட்டில்
தினமும் நீர் ஊற்றி
பசளை இட்டு
சூரிய ஒளிபட வைத்து.
அதெப்படி
சூரிய ஒளியில்
பச்சையமே தயாரியாது
என்னுள் இத்தனை
பசுமையாக வளர முடிகிறது
உன்னால்!

*
இதயத்துள்
சொல்லாமல்
கொள்ளாமல்
புகுந்து விட்டு
இத்தனை கலாட்டாவா?!!
குட்டிவிட்டனெண்டா.

*
மெல்லிய புன்னகையால்
தான் என்னை கவர்ந்தாய்.
இத்தனை வெரி சீரியஸ்சாக
சிந்திக்க வைத்து விட்டாயே.

Thursday, September 11, 2008

உயிர்த்தீ...... (18------22)


*
வாழ்க்கை அது
எத்தனை இன்பமானது!!
தெரியும் எனக்கும்.
ஆனாலும்
சுயநல கூடுகளுக்குள்
தெரியாமல்
மாட்டுப்பட்ட
அனுபவங்கள் தான்
எனக்கு அதிகம்.

*
கவிதையின்
தலைப்புக்கள்
பிடித்ததால்
படிக்க தொடங்கினேன்.
வரிவரியாய் பல
முனகல் சத்தங்கள்.
அத்தனை கவிதைக்குள்ளும்
ஒத்தடம் தேடும்மனசு

*

இந்த பூவுக்குள்ளும்
அழகியதான
ஒரு சின்ன மனசு
எத்தனை ஏக்கங்களை
சுமந்து இருக்கிறது என
எத்தனை பேருக்கு தெரியும்.

*

உயிரே சுவாலையாகி
எரிந்து நான் சாம்பராகும் முன்
உன்னைக் கண்டேன்.
அத்தனை வேகமாய்
எப்படி உன்னால்
அத்தீயை
நட்புடன் அன்பு கலந்து
அணைக்க முடிந்தது.

அன்பு வார்த்தைக்காய்
எத்தனை நாள் அழுதிருப்பேன்.

இந்த வார்த்தை போதாதென்று
நீயே தினம் அருகில் வேண்டும் என்றால்
என்ன மனசிது.!!


*
என் சுய நினைவை
இழக்க செய்தவனே!
படர்ந்திடு இனி என் மீது
நட்புக் கொடியாக.

Tuesday, September 09, 2008

உள்ளேன் சகோதரர்களே. விடுமுறை முடித்து சந்தோசமாக சுவிஸ் வந்து சேர்ந்தோம். எப்படித்தான் இரண்டு மாதங்கள் பறந்தனவென்றே தெரியவில்லை. எல்லோரும் நலம் தானே.




Sunday, June 15, 2008

பூக்கள் பேசிக்கொண்டால்.... ! (11)


*
உனக்கான
கோபம் என்கானது தானே.
அந்த கோபங்களால் கூட
நான் மகிழ்ந்து தான் போகிறேன்.

*
எத்தனை கேள்விகளை
உன் முன்னே பரப்பியபடி.
அத்தனை கேள்விகளும்
மௌனமாய் நீ
காரணம் என்னவோ?
உனக்கும் அவை
பூர்த்தி செய்யப்படாத
கேள்விகள் என்றாவது
சொல்லித்தெலையேன்.
உனக்கு திமிர் அதிகம்
இல்லை என்றால்
சொல்லி இருப்பாயே.

*
உனது ஈகோவை விட்டிறங்கு.
அது தான்
நமது வாழ்க்கைக்கு நல்லது.


*
உனது பார்வையால் மட்டுமே
நான் மலர்ந்து கொள்கிறேனே.
அதெப்படி...!

*
உனது பார்வையில்தான்
எத்தனை சூரியர்கள்.
எனக்கு மட்டுமே தெரிந்த
புதிற்கான விடை இது.

*
மொட்டு பூப்பது இயல்பு .
எனக்கான மகரந்தங்களை
எடுத்து வந்தவன் நீ.

*
விழி திறந்து
மொழி பகர்ந்து
மௌனமொழி பேசி
ஆகா அற்புதமொழிகள் .
எம்மைப்போல் யாரும்
இவ்மொழிகள் உணர்ந்திரார்.


*
முத்தம் ஒன்று தந்தாய்
அதன் ஈரப்பதன்
அழியாமல் இன்றுரை.


நளாயினி.

பூக்கள் இன்னும் பேசும்.....

ஓவியம். 09/06/2008




ஓவியத்தின் மேல் கிளிக்செய்தால் பெரிதாக பார்க்க முடியும்.
Copyright © nalayiny

Sunday, May 25, 2008

எங்கள் வலிகளை.......