Sunday, May 25, 2008

எங்கள் வலிகளை.......

Monday, May 19, 2008

பூக்கள் பேசிக்கொண்டால்.... ! (10)


*
வருவேன் என கூறிச்சென்றாய்.
வரவே இல்லை
என் நெஞ்சோரத்து கனவுகள்
யாவுமே பசுமை இழந்து.
பட்டமரமாய் நான்.

*
வராவிட்டால் என்ன..!
வசந்தங்கள்
தொலைந்தா போனது.
நீ தந்து சென்ற
சுவாசங்கள்
என்னை அழகு படுத்தும்.

*
நீ வராமல் இருப்பது
நல்லது....!
கவிதைகளுக்கான
விதையாய் நீ.
எனது கவிதை கூட
நீ காணாமல் போகும்
தருணங்களில் தான்
உத்வேகம் கொள்கிறது.

*
நாளைய சந்திற்பிற்காய்
என்ன பேசலாம் என
பல தெரிவுகளாய்.
"தேவையற்ற பேச்சு வேண்டாம் .
காலநிலை பற்றி பேசுங்கள்"
என கூறியது இப்போது உறைக்கிறது.

*
"இங்கு நல்ல மழை.
அங்கு என்னவோ?"
"நல்ல பனி
இந்த நேரத்தில் கேக்கும் கேள்வியா? "
நீ பேசியது
இன்று புரிகிறது.

நளாயினி.

பூக்கள் இன்னும் பேசும்.....

Monday, May 12, 2008

பூக்கள் பேசிக்கொண்டால்.... ! ( 9)


*
உணர்வுகளில் கலந்த பின்
உனக்கும் எனக்குமான
இந்த இடைவெளி
தாமரை இலையின் மேல்
உருண்டோடும்
தண்ணீரை
ஒத்தது.

*
கோபமாக இருந்தாலும்
நினைவுகளால்
பேசிக்கொண்டு தானே
இருக்கிறோம்.
தென்றலில் கலந்து விட்ட
மலரின் நறுமணம் போல்.

*
தென்றலாய்த்தான்
என்னைத் தழுவினாய்.
புயலை பூகம்பத்தை
எரிமலையைக் கூட
என்னுள் உன்னால்
தோற்றுவிக்க முடிகிறதே..!!??

*
உனக்கும் எனக்குமான
இந்த கோபங்களால் தான்
காதல் நம்மை
விழுங்கிக்கொள்கிறது
என நினைக்கிறேன்.


நளாயினி.

பூக்கள் இன்னும் பேசும்.....

Sunday, May 11, 2008

வாழ்வுப்பயணத்தில் தம் முகமிழந்த அம்மாக்கள் அனைவருக்கும் இவ் ஓவியம் சமற்பணம்.

ஓவியத்தின் மேல் கிளிக்செய்தால் பெரிதாக பார்க்க முடியும்.
Copyright © nalayiny