Tuesday, December 18, 2007

ஓவியம். 12/12/2007




ஓவியத்தின் மேல் கிளிக்செய்தால் பெரிதாக பார்க்க முடியும்.
Copyright © nalayiny

Monday, December 17, 2007

பூக்கள் பேசிக்கொண்டால்........! (4)


14)
உன் சிரிப்பினூடே வரும்
கன்னக்குழிகளால் தான்
நான் அதிகம்
தொலைந்து போகிறேன்.

15)
என் இதயம் எங்கும்
வியாபித்து இருப்பது
உன் விழிகளின்
உணர்வுகள் தான்.

16)
நேற்று நீ
வீட்டுக்கு வந்து போனதாய்
அம்மா சொன்னா.
எத்தனை நாள் தான்
முற்றம் பெருக்காமல்
உன் பாதச்சுவடுகளையே
அழகு பார்ப்பேன்.

நளாயினி.

பூக்கள் இன்னும் பேசும்.....

Wednesday, December 12, 2007

பாலியல் வன்முறை.


ஓவியத்தின் மேல் கிளிக்செய்தால் பெரிதாக பார்க்க முடியும்.
Copyright © nalayiny

Tuesday, December 11, 2007

The face of war.


ஓவியம். 24/11/2007

ஓவியத்தின் மேல் கிளிக்செய்தால் பெரிதாக பார்க்க முடியும்.
Copyright © nalayiny

அதன் வழி தனிவழி. இன்று தான் நிம்மதி.



Monday, December 03, 2007

பழசு ஆனா புதுசு.



நன்றி
http://udaru.blogdrive.com/archive/310.html

நன்றி திண்ணை.


சுவிசில் நளாயினியின் கவிதைநூல்கள் அறிமுகமும் கலை இலக்கிய ஒன்றுகூடலும்

ரவி




நேரம் 3 மணியை அண்மித்துக்கொண்டிருந்தது. ஞாயிற்றுக்கிழமை கடைதெருக்கள் வேலைத்தலங்கள் ஓய்வுற்றிருந்ததால் வீதிகள் நெரிசலற்று சுமுகமாய்த் தெரிந்தன. சூரிச் மாநகரம் மெதுவாய் இயங்கியது. நாம் போல்க்ஸ் கவுஸ் இன் ஒரு நடுத்தர மண்டபத்துள் கூடுகிறோம். சிறிய சந்திப்பகளிலிருந்து பெரும் சந்திப்புகளை நடத்துவதற்கான மண்டபங்களைக் கொண்டது இந்த போல்க்ஸ் கவுஸ். தமிழ்க் கடைகள் அவ்வப்போது மலிவுவிற்பனை மண்டபமாக இதை மாற்றுவதுண்டு. இங்குள்ள தமிழர்களுக்கு மலிவு விற்பனை நடக்கிற இடம் என்று அறிமுகப்படுத்திவிடுவது சுலபமாகக்கூடப் போய்விடுகிறது. பெரும்திரளாய்க் கூடுவர்... போவர்...வருவர் மலிவுவிற்பனைக்கு.


இன்று நாம் சுமார் 40 பேர்வரை நின்றோம். இலக்கியத்தில் ஆர்வமுள்ளவர்கள் வழமையாக வந்து கருத்துப் பரிமாறுவதில் இப்படியாய்த்தான் கூட்டம் சேரும். இந்தளவுக்கு சனம் சேருவது ஒரு பெரிய விடயம்தான் எம்மைப் பொறுத்தளவில். வரவிரும்பிய இன்னும் சில நண்பர்கள் தமது வரமுடியாமையை முதலிலேயே தொலைபேசியில் தெரிவித்துக் கொள்வதுகூட எமக்கு உற்சாகம் தரத் தவறுவதில்லை.


கதிரைகள் வரிசையாக ஒன்றன்பின் ஒன்றாக அடுக்கப்பட்டிருந்தது. குறும்படத்துக்கான திரையை கண்ணெதிரில் நிற்பாட்டினோம். கவிஞர் நளாயினி சற்று ஆசுவாசமாக இருந்ததாக எனக்குப் பட்டது. தனது படைப்பின் மீதான உழைப்பை தொகுப்புகளாக்குவதில் பலதரப்பட்ட எண்ணங்கள் தெரிவுகள் இடர்ப்பாடுகள் எல்லாம் நிலைநீங்கிய திருப்தி அவரது இடைவிடாத சிரிப்பில் தெரிந்தது. றஞ்சி தலைமையேற்று உசாராக தனது கருத்துகளை முன்வைத்தார்.


"இன்று நாங்கள் மீண்டும் ஒரு கலை இலக்கிய ஒன்றுகூடலில் பங்குகொள்கிறோம். கவிஞர் நளாயினி அவரது கவிதை வெளிப்பாட்டுக்கூடாக அனேகமாக எல்லோருக்கும் தெரிந்தவர். புலம்பெயர் இலக்கிய கவிஞர்களில் அவருக்கும் ஒரு தொடர்ச்சியான பங்கு இருக்கிறது. முக்கியமாக புலம்பெயர் வானொலிகளில் அவர் ஈடுபாட்டுடன் பங்குபற்றி கவிதைபாடிய காலங்கள் ஒன்று இருந்தது. இதன் மூலம் பலருக்கு வெளித்தெரிந்தார் நளாயினி. அத்தோடு பத்திரிகைகள் சஞ்சிகைகள் என்று நீண்டு இப்போ இணையத்தளங்களில் என தொடர்கிறது அவரது கவிதை முயற்சிகள். இன்று அவரது உழைப்பு தொகுப்புகளாக ஒன்றுதிரட்டப்பட்டிருக்கிறது. நங்கூரம் உயிர்த்தீ என இரு கவிதைத் தொகுப்புகள் அவரிடமிருந்து வந்திருக்கின்றன|" என்ற சிறு அறிமுகத்துடன் தொடர்ந்த றஞ்சியின் பேச்சு...


"கவிதை என்பது உணர்வு வெளிப்பாட்டுத் தளத்தில் நிகழ்த்தப்படும் ஒரு இலக்கிய வடிவம். பெண்களின் பிரச்சினைகளை ஆண் கவிஞர்கள் வெளிப்படுத்த முயன்ற நிலையிலிருந்து அதை பெண்களே வெளிப்படுத்தும் ஒரு காத்திரமான நிலை எண்பதுகளின் ஆரம்பத்திலிருந்து அதிகம் வெளிப்பட்டதாகக் கொள்ள முடியும். ஈழத்தின் தேசியவிடுதலைப் போராட்டக் களம் இதை ஈழத்தில் தீவிரப்படுத்தியது எனலாம். அரசியலில், பெண்விடுதலை நாட்டத்தில்... என அவை பயணிக்கவும் தொடங்கின.


புலம்பெயர்வாழ்வியலிலும் பெண்களின் எழுத்துக்கள் வெளிப்பட்டன. பெண் கவிஞர்களும் வெளித்தெரிந்தனர். அவர்களில் பெண்ணியம், அரசியல், கூட்டுவாழ்வின் பிரிவு, கலாச்சார முரண்கள்... என பல தளங்களில் கவிதை முயற்சிகள் வெளிவருகின்றன. நளாயினி இத் தளங்களில் வெளிவந்த ஒரு கவிஞர்தான். முக்கியமாக மனித உணர்வு உணர்ச்சிகளில் இழையோடும் காதல் பற்றியும் நட்புப் பற்றியும் இவரது பெரும்பாலான கவிதைகள் பேசுகின்றன. நங்கூரம், உயிர்த்தீ கவிதைத் தொகுப்புகளில் இதை நாம் காணலாம்."


றஞ்சியின் இந்த அறிமுக உரையைத் தொடர்ந்து கண்ணன், சுதா இருவரும் இரு முனைகளில் உட்கார்ந்து இருந்தது போன்றே கவிதைகள் பற்றிய பார்வைகளும் அமைந்திருந்தன என்று பருமட்டாகக் கூறலாம். மேலும் சில ஆர்வலர்கள் வந்து இணைந்துகொண்டிருந்தனர். இரு கவிதைத் தொகுப்புகளும் பலரின் கைகளில் இருந்தன. அவர்கள் இதை ஏற்கனவே வாசித்திருக்கவில்லை. கண்ணன் சுதா இருவரினதும் பார்வைகளில் அவர்கள் அதைத் தேடிக்கொள்ளும் ஆர்வத்தில் இருந்ததாக எனக்குப் பட்டது.


"நளாயினிக்கு என்ன துணிவப்பா. உண்மையிலை துணிஞ்ச ஆள்தான். ஒரே நேரத்திலை இந்த இரண்டு கவிதைத் தொகுப்புகளையும் கொணர்ந்திருக்கிறா" என்ற நயமான உரையாடலுடன் உயர்த்திய உயிர்த்தீ தொகுப்பை மேசையில் வைத்துவிட்டு தொடர்ந்தார் கண்ணன். சுவிஸ் கவிஞர் ஒருவரின் கவிதையை தமிழில் தந்து கவிதை உத்தி பற்றி சிலாகித்துவிட்டு நளாயினியின் கவிதைக்குள் சென்றார்.

நட்பு, காதல், பெண்ணியம் என நளாயினியின் கவிதைகள் பேசுவதை கவிதை வாசிப்பினூடாகவும் எடுத்துக் காட்டினார். அவர் ஒரு துணிந்த பெண்ணாக தன்னை நிலைநிறுத்தும் இடங்களைச் சுட்டிக் காட்டினார்.


"சராசரி மனிதருள்ளிருந்து மாறுபட்டு வாழவே ஆசைப்படுகிறேன்" என்ற கவிதை வரிகளை காட்டி நளாயினியின் நிலையை சுட்டிக்காட்டினார்.


மலர் என்று பெண்களை வர்ணிக்கும் நிலையை தலைகீழாக்கி காதலனை மலர் என்று மாற்றுகிறார். அதேபோன்றே காதலுக்கு ஏற்படும் தடையால் காதலன் "அரளிவிதை உண்டு சாகலாம் வா" என்று தற்கொலை செய்யும் மனோநிலைக்கு போவதுபோலவும், காதலி "இல்லை அந்த அரளிப் பூவை மாலையாகச் சூட்டி மணமுடிப்போம் வா" என்று துணிச்சலிடுவதுபோலவும் அமைந்த கவிதையையையும் வாசித்துக் காட்டினார் கண்ணன். பெண்ணியக் கவிதைகள் பற்றிய, பெண் கவிஞர்கள் பற்றிய தனது தெரிதல்களுக்குள் போய் தனது அறிமுக உரையை முடித்துக் கொண்டார்.


தமிழகப் பெண் கவிஞர்களின் வார்த்தைப் பிரயோகங்கள் கவிதையில் ஒரு பாய்ச்சலை ஏற்படுத்தியதென்றும் இதைச் சகித்துக் கொள்ளாத ஆண்மனத்திற்கு உதாரணமாக "சண்டைக்கோழி" பட வசனகர்த்தாவுக்கும் குட்டிரேவதிக்கும் இடையிலான சர்ச்சையை குறிப்பாக்கினார் கண்ணன்.


இத்துடன் இணைப்பாக கருத்துக் கூறினார் றஞ்சி. "கலா 1997 இல் எழுதிய கோணேஸ்வரி கவிதையிலேயே பெண்களின் உறுப்புகளை வார்த்தைகளாக்கி எழுதிய சர்ச்சை ஆரம்பமானது. (குறிப்பு: மட்டக்களப்பில் கோணேஸ்வரியின் மீதான இராணுவத்தின் பாலியல் வன்முறையின் பின்னர் கொடுரமான செய்கைக்கு உட்படுத்தப்பட்டு கொல்லப்பட்டவர் கோணேஸ்வரி) பின்னர் மற்றைய பெண் கவிஞர்களின் எழுத்துகளில் அவை தாக்கம் புரிய ஆரம்பித்தன. போர்ச்சூழலில் வாழும் இலங்கைப் பெண் கவிஞர்களின் தாக்கம் இந்தியப்; பெண் கவிஞர்களின் கவிதைகளிலும் மாறுதலை ஏற்படுத்தியது என்ற கருத்தை புதியமாதவி போன்ற கவிஞர்கள் குறிப்பிடுகின்றனர்." என்றார். இலங்கையில் தாக்கமான கவிதைகளை எழுதிவரும் கலா, அனார், பஹீமா ஜகான், பெண்ணியா, சுல்பிகா, ஒளவை போன்றவர்களின் கவிதைகளை குட்டிரேவதி, புதியமாதவி போன்றோர் பெரிதும் சிலாகித்துப் பேசுவதையும் இடையீடாக வெளிப்படுத்தினார் றஞ்சி.


புகலிட பெண் கவிஞர்கள் என்று பார்க்கையில் சுவிசில் வெளிவரும் முதல் கவிதைத் தொகுப்புகளாக நளாயினியின் நங்கூரம், உயிர்த்தீ என்பன வெளிவந்திருப்பதாக நினைக்கிறேன் என்றார் றஞ்சி.


அடுத்து சுதா நங்கூரம் கவிதைத் தொகுப்பின் அட்டைப்பட ஓவியத்தை எமது கண்களில் ஒத்துவதுபோன்று அதில் தெரியும் பல முகங்களை உற்றுப்பார்க்க வைத்தார். (இந்த இரு கவிதைத் தொகுப்புகளினதும் ஓவியங்களை கனடாவில் வசிக்கும் ஓவியர் நந்தா கந்தசாமி படைத்திருந்தார்).


நங்கூரம் பெரும்பாலும் காதல் பற்றிய கவிதைகளை கொண்ட தொகுப்பு. கவிஞரின் துணிச்சலான வரிகளையும் காதலுணர்வு பற்றிய தாக்கமான வரிகளையும் வாசித்துக் காட்டினார் சுதா. அதேநேரம் இவற்றுக்கு முரணான விதத்தில் சினிமாப் பாணியிலான வர்ணிப்புகளும் தென்படும் வரிகளை சுட்டிக் காட்டினார். கவிதைகளின் காலம் குறிக்கப்படாததால் இது சிலவேளை அவரது ஆரம்பகாலக் கவிதையோ தெரியவில்லை என்று அதை விரித்துப் பார்த்தார். சுதாவின் அறிமுக உரை ஒரு விமர்சன உரைபோல் இருந்தது.


நேரம் எல்லோருக்கும் தெரியாமல் சத்தமின்றி காலடிவைத்துச் சென்றது. சுதாவின் அறிமுக உரையில் சிலருக்கு எழுந்த முரண்பாடு அறிமுகக் கூட்டமா விமர்சனக் கூட்டமா என்ற கேள்வியை எழுப்பியது. இதையொட்டி கருத்துகள்...


"விமர்சனம் என்பது நோயாளியைக் குணப்படுத்தம் மருந்தாக இருக்க வேண்டுமேயன்றி கொலைசெய்யும் மருந்தாக இருக்கக்கூடாது என்ற மாவோவின் கருத்தை மீண்டும் மீண்டும் நினைவுபடுத்த வேண்டியிருக்கிறது."


"தேவைப்படின் நோயாளியைக் குணப்படுத்த அறுவைச் சிகிச்சை செய்யப்பட வேண்டும் என்று மாவோ அதே புத்தகத்திலேயே குறிப்பிட்டுமிருக்கிறார். அதையும் நாம் கண்டுகொள்ள வேண்டும்"


"விமர்சனத் துறை தமிழ்ச் சூழலில் வளர்ச்சியடையாத நிலையிலேயே இருப்பதாக கைலாசபதி அன்று சொன்ன கருத்து இன்றைய காலத்துக்கும் பொருந்துவதாக உள்ளது"


"உண்மைதான். அதேநேரம் இதை சொல்லும் நாமும் இந்தக் குறைபாடுகளுக்கு உட்பட்டவர்தான் என்பதையும் மனதில் வைத்திருப்பது நல்லது. குறைபாடுகளுடனேயோ என்னவோ இதை நாம் செய்துதான் வளர்ச்சியடைய வேண்டும்"


"தலித்தியம் மற்றது பெண்ணியம் சம்பந்தமான விமர்சனங்கள் கறாராக இருப்பதை தவிர்த்து அவதானத்துடன் வைக்கப்பட வேண்டும்"


"விமர்சனங்களை முகம்கொடுக்கும் பக்குவம் படைப்பாளிக்கு இருக்கத்தானே வேண்டும்"


இப்படியாய் குழப்பமேதுமற்று தொடர்ந்த உரையாடல் குறுகிய நேரத்துக்குள்ளேயே நளாயினியின் கவிதைத் தொகுப்புக்கள் மீது மீண்டும் திருப்பப்பட்டது. இதற்கு நளாயினி தனக்கு விமர்சனங்களை முகம்கொடுக்கும் பக்குவம் இருப்பதால் தான் விமர்சனங்களை வரவேற்பதாகக் கூறி தன்நிலையை தெளிவாக்கினார்.


கவிதைகளின் காலம் தனித்தனி குறிப்பிடப் பட்டிருந்தால் கவிஞரின் படைப்பியல் மாற்றத்தை இலகுவில் புரிந்து கொள்ள முடியும். என்ற கருத்து முன்வைக்கப்பட்டது.

நங்கூரம் கவிதைகள் தான் ஆரம்ப காலங்களில் எழுதிய கவிதைகள் என்பதை நளாயினி குறிப்பிட்டார்.


"அதுதான் நளாயினி. உணர்ந்து அனுபவித்து எழுதிய கவிதைகள் என்பதால் அவை நல்லாக இருக்கின்றன. சிலவேளை சமூகநோக்கு பெண்ணியம் என்றெல்லாம் ஆணியடித்து மறிப்பிட்டிருந்தால் இவ்வாறான கவிதைகள் நன்றாக வர வாய்ப்பில்லாமலும் போயிருக்கலாம்"


"நளாயினி சமூக ஒடுக்குமுறைகளை வெளிப்படுத்தும் கவிதைகளையும் படைக்க வேண்டும்"


"நளாயினி இந்த ஒடுக்குமுறைகளை எதிர்த்து நெஞ்சை நிமிர்த்தியபடி போகிறார். முகம்கொடுக்கிறார். பின்வாங்கவில்லை. அந்தளவில் பாராட்டுகள்.

அதேநேரம் இந்த ஒடுக்குமுறைகளின்மீது (கவிதையினூடு) முஸ்டியை உயர்த்த வேண்டும். அதன்போது எழக்கூடிய பிரச்சார வாடை கோசங்களிலிருந்து கவிதையைத் தப்பவைக்கவும் வேண்டும். இன்றைய பெண்ணியக் கவிதைகளின் உடல்மொழிச் சர்ச்சை -பிரச்சாரம் கோசம் அற்ற- ஒரு உடைப்பின் அதிர்ச்சிதான். ஒரு முஸ்டி உயர்த்தல்தான்"


நளாயினி பதிலளிக்கிறார். தான் பிற்காலங்களில் எழுதிய பெண்ணியக் கவிதைகள் இனிவரப்போகும் தொகுப்பில் இடம்பெறும் என்றார்.


"நங்கூரம் கவிதைகள் காதல் கவிதைகளாக வகைப்படுத்தக்கூடியது. அதேநேரம் உயிர்த்தீ நட்புப் பற்றி சொல்ல வருகிறது. அதேநேரம் சில இடங்களில் நட்பாகப் புரிந்துகொண்டு செல்கையில் பிறகு காதலித்துப் பார் என்றமாதிரியான உணர்வைத் தந்துவிடுகிறது. சிலவேளை இது எங்களது ஆண்மனக் குறைபாடோ தெரியவில்லை."


நளாயினியை அதிகம் அலைக்கழிக்கும் கவிதைகள் உயிர்த்தீ தொகுப்பில் இருப்பதாக நான் கணிக்கிறேன். உயிர்த்தீயை அவரது நோக்கில் விமர்சனங்கள் எட்டியிருக்கவில்லை என்று அவர் கருதுவதுபோலவும் தெரிகிறது. இவை எனது அவதானிப்புகள் மட்டுமே.

உயிர்த்தீ கவிதைகள் ஒரு செஸ் விளையாட்டுப் பொன்ற நகர்வுகளை ஏற்படுத்தக் கூடியது என்ற அவரது விரல்நுனி சுட்டிக்காட்டுதல் எனது அவதானிப்பை ஆழமாக்கியது.


பலரும் உரையாடலில் பங்குபற்றியிருந்தது சிறப்பான அம்சம். கவிதைத் தொகுப்புகளின் முதல் பிரதிகளை அவரது உறவினருக்கு வழங்கி கௌரவித்தார் நளாயினி.


மண்டபத்தில் ஒரு முலையில் மேசையில் வடை கட்லற் கேக் என வாசம் வீசியதை இப்போ பலர் முகர்ந்துகொண்டிருக்க வேண்டும். ஒரு இடைவேளை விடலாமே என்றவாறான குரல் மறுப்பின்றி நடைமுறையானது. இன்னொரு மூலையில் நங்கூரம், உயிர்த்தீ, வகுப்பு குறும்படம், உயிர்மெய், உயிர்நிழல் சஞ்சிகைகள் என்பவற்றுடன் மெக்சிக்க விடுதலைப்போராட்ட அமைப்பின் துணைத்தளபதி மார்க்கோஸ் இன் "எதிர்ப்பும் எழுத்தும்", சேகுவேரா-வாழ்வும் மரணமும், க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி என்பவையும் மேலும் சில புத்தகங்களும் பரவியிருந்தன. சுவிசிலிருந்து மாதமொருமுறை வெளிவரத் துடித்துக்கொண்டிருக்கும் அல்ப்கோர்ண் தமிழ்க்குரல் இலவசம் என எழுதப்பட்டுக் கிடந்தது.


அடுத்து சுவிசில் எல்லோரும் அறிந்த நாடக, குறும்பட நடிகர் வா.வி.பாஸ்கர் குசினிப் பாத்திரங்கள் குசினிவேலையாள் சீருடை என தோன்றுகிறார். பின்னணி இசையின் அழைப்போடு தகிடுதத்தமாக நடனமாடியபடி பார்வையாளர்கள் பக்கமிருந்து முன்னாடி வருகிறார். இசையோடு அவரது தனிநடிப்பு பிணைந்து எமது புகலிட வாழ்வின் வேலைத்தலங்களுக்குள் எம்மை இழுத்துச் சென்றுவிடுகிறது. வாழ்வனுபவத்தின்மீது பாஸ்கரின் அதிர்வுக்குரல் உடலசைவு முகபாவம் எல்லோரையும் கட்டிப் போட்டது. யாரும் வேறுவேலைகள் பார்த்ததாய் எனது வலிந்த பார்வைக்கும் அகப்படவில்லை. முதலாளி தொழிலாளி இடையிலான உறவை ஒரு நாயை வரவழைத்து பின்னணி இசை காதுக்குள்ளால் ஓடவிட்டது. அற்பதமான படைப்பு உத்தி. தொழிலாளி நாயைப்போல் குழைந்து முனகும் சத்தத்துடன் இணைகிறான். முதலாளி கடிநாயின் விறைப்பான குரைப்புடன் இணைகிறான். சுமார் அரைமணி நேரத்துக்கு மேலாக பாஸ்கர் எமது நேரத்தை களவெடுத்துவிட்டு கனமாக எம்மிடம் திருப்பித் தந்தார். இதுபற்றிய உரையாடல் அவரை உற்சாகமடையச் செய்ததை அவரது முகம் இப்போ நடிப்பின்றி வெளிப்படுத்தியது.


அடுத்து வகுப்பு குறும்படத்துக்கான திரையொளிர்வுடன் மண்டபம் இருளடைந்தது. புகலிட வாழ்வில் இன்னொரு சிக்கலை பேசியது வகுப்பு குறும்படம். எமது பிள்ளைகளின் மீதான பாடசாலை படிப்பு குடும்பம் என்ற பிணைச்சலுள் ஒரு குழந்தையின் வாழ்வுச்சிக்கலை முன்னிறுத்திப் பேசுகிறது வகுப்பு.


தகப்பன் வேலைக்குப் போகிறார். தாய் வேலைக்குப் போகிறார். குழந்தையை காலையில் நேரத்துடனேயே எழுப்பி வெளிக்கிடுத்தி பாடசாலைக்குப் போகவேண்டிய நேரத்துக்கு அலார்ம் வைத்துவிட்டு போகின்றாள் தாய். திரும்பவும் கோழித்தூக்கம் போடும் குழந்தை அலார்ம் ஒலியில் விழுந்தெழும்பி பாடசாலைக்குப் போகிறது. மதியம் வீட்டுக்கு வருகிறது. இருப்பதை சாப்பிடுகிறது. மீண்டும் பாடசாலைக்குப் போகிறது. பாடசாலை முடிந்து வீட்டுக்கு வருகிறது. தனிமையில் விளையாடுகிறது. வெளியில் பல குழந்தைகள் விளையாடுவதைப் பார்க்கிறது. கையசைக்கிறது. தாய் வேலையால் வருகிறார். பிறகு சமையல். குழந்தை விளையாட அழைக்கிறது தாயை. தாய்க்கு நேரமில்லை. எழுந்தமானமாக அவர் சொல்கிறார். "விளையாடுறதை விட்டிட்டுப் படி. கொப்பியை எடுத்துக் கொண்டு வா. அம்மா அப்பா எழுது." குழந்தை இந்த காய்ந்த குழந்தைமையை அனுபவிக்கிறது.


"குழந்தைய வகுப்பில்" இருந்து (கிண்டர்கார்ற்றன்) நியமமான முதலாம் வகுப்புக்குப் போகமுடியாமல் தடைப்படுகிறது. தகப்பன் வைக்கும் தீர்வு தாயின் மீதான வற்புறுத்தலாகிறது. பிள்ளையை நாட்டுக்குக் கூட்டிப்போய் படிப்பி என்ற அவரது குருட்டுத் தீர்வு தாயின் விருப்பு வெறுப்புகளோடும் தாய்நாட்டின் வாழ்வியல் சூழலோடும் பொருந்த மறுக்கிறது. தகப்பன் ஆணதிகாரத்தின் பிசகாத பிரதிநிதியாய் வன்முறையை வெளிப்படுத்துகிறார். கோபம் எரிச்சல் விரக்திக்குள் குறுகிப் போகின்றனர் பெற்றோர். குழந்தைக்கான வெளி இந்தக் கூட்டிலிருந்து பிரிந்து பச்சைப் பசேலென விரியும் புல்வெளியும் பூமியைக் கரம்பற்றி அணைக்கும் மலைகள், உச்சியில் வெளிர்ந்துகொண்டிருக்கும் பனித்திரள், முகில்களின் ஓட்டத்தில் வானத்தின் நீலிச் சிரிப்புமாய்... விரிந்து விரிந்து செல்கிறது. நந்தகுமாரின் கமரா அள்ளுகொள்ளையாய் இந்தக் காட்சியை குழந்தைக்கான வெளியாய் ஓவியப்படுத்துகிறது.


மண்டபம் வெளிச்சம்கொள்கிறது. நெறியாளர் பாலகுமார் நடிகர் பாஸ்கர், இசைஞர் சுரேஸ்குமார் எல்லோரும் அபிப்பிராயங்களின் மீதான வேட்கையில் இருந்தனர்.


எடுத்துக்கொள்ளப்பட்ட கரு வரவேற்கப்பட்டது. பிரச்சினைகளை அதன் தொடர்ச்சியை பின்னிய விதம் - குறிப்பாக தகப்பனின் நிலை- அவை வார்த்தைகளோடு வெடித்துக் கிளம்பும் உளவியல் நிலை கதையமைப்பில் சிறப்பம்சமாகச் சுட்டிக்காட்டப்பட்டது.


குழந்தையின் நடிப்பு எல்லோராலுமே வியப்பாக பார்க்கப்பட்டது. குழந்தையின் நடிப்பாற்றலை வெளிக்கொணர்ந்ததில் நெறியாள்கை பாராட்டப்பட்டது. இசையமைப்புப் பற்றியும் அது இசைந்து செல்லும் தன்மையும் சில காட்சி உதாரணங்களோடு சிலாகிக்கப்பட்டது. பாலகுமாரின் முந்தைய படைப்பிலிருந்து மிகவும் முன்னேறிய நிலையில் இருப்பதை இப் படம் காட்டிநிற்பதாகவும் சொல்லப்பட்டது.


அதேநேரம் எமது பிள்ளைகள் பள்ளிவாழ்வில் பாதிக்கப்படுவது எமது தரப்பால்தால் என்ற வாதத்தை இப் படம் முன்வைப்பதுபோல் அமைந்துவிடுவதாகவும், இது எமது பிள்ளைகளின் மீதான அவர்கள் (பாடசாலை) தரப்பான பாகுபாடுகளை பொறுப்பின்மையை சொல்லாமல் விட்டுவிடுகிறது என்றும் விமர்சனம் முன்வைக்கப்பட்டது. இதனால் இன்று வெளிநாட்டவருக்கெதிரான சட்டங்களை இறுக்கமடையச் செய்யும் தற்போதைய அரசியல் சூழலுக்கு ஆதாரம் தந்துவிடும் அபாயத்தைக் கொண்டிருப்பதாகவும் இதுபற்றிய படைப்புகளைத் தருவதில் மிகவும் அவதானம் தேவை எனவும் காத்திரமான விமர்சனம் முன்வைக்கப்பட்டது.


இதேபோல் "சுவிஸ் நாசனாலிற்றி எடுத்து, கொஞ்ச காசும் சேர்த்துக் கொண்டுதான் நாட்டுக்குப் போவன்" என்ற தாயாரின் வசனம் மேலே சொல்லப்பட்ட சுவிஸ் அரசியல் சூழலுக்கு ஆதாரம் தரக்கூடிய இன்னொரு அம்சம் எனவும் கருத்துத் தெரிவிக்கப்பட்டது. ஒரு சமூகத்தின் இருப்பு சம்பந்தமான அக்கறை ஒரு கலைஞனுக்கு இருக்கவேண்டும் அதனால் இதைத் தவிர்த்திருக்க வேண்டும் என்ற வாதம் ஒருபுறமும் கலைஞனுக்கு தனது பார்வையை அப்படியே வெளிப்படுத்தும் சுதந்திரம் இருக்கிறது என்ற வாதம் இன்னொரு புறமும் சந்தித்து அமைதியுற்றன.


சுவிஸ் பிரசாவுரிமை பற்றிய வசனம் இப் படத்தைப் பார்த்த சுவிஸ்காரரிடம் ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளப்படவில்லை என்ற தனது அவதானத்தை பாலகுமார் சொன்னார். இருந்தாலும் இந்த விடயத்தில் வெளிப்பாட்டுத்தனத்தில் தான் இன்னமும் பொறுப்பாக இருக்கத்தான் வேண்டும் என்பதை அவர் ஏற்றுக்கொண்டார். உண்மையில் ஒரு ஆவணப் படத்துக்குள்தான் இப் பிரச்சினையின் உள்ளடக்கம் உட்படுத்தப்படக் கூடியது என்ற கருத்தும் முன்வைக்கப்பட்டது. படம் தமிழில் உரையாடுகிறபோது டொச் மொழியில் அடிக்குறிப்பில் மொழியாக்கம் செய்யப்படுவதும் டொச் இல் உரையாடுகிறபோது தமிழில் அடிக்குறிப்புமாக சுவிஸ் வாழ்வியலுக்குள் எல்லோருக்குமான படமாக முழுமைப்படுத்தப்பட்டுள்ளது.


படத்தில் தகப்பன் வேலைத்தலத்தில் குசினிப் பாத்திரங்களுடன் மல்லுக் கட்டுவது, உணவு தயாரிப்பில் உதவிசெய்தல் என இயந்திரமாக சுழல்கிறான். வியர்வையால் நனைகிறான். மூடுண்ட வேலை உலகத்துள் அவனின் அவதி நன்றாகவே படமாக்கப்பட்டிருக்கிறது. வீதியில் அவன் விரைந்து வீடு வருவதுவரை அவனது உழைப்பைக் காட்டிய அளவுக்கு தாயாரின் வேலைத்தல உழைப்போ அல்லது வேலையின் பின்னான இடைவெளியற்ற அவளது சமையல், வீட்டை ஒழுங்குபடுத்தல் போன்ற வேலையையோ தன்னும் காட்சிப் படிமமாக பார்வையாளன் பெறவில்லை. இதன்மூலம் ஆண்நிலையில் நின்றே இப்படமும் எடுக்கப்பட்டிருப்பதாகவும் ஒரு பெண்நிலை விமர்சனம் முன்வைக்கப் பட்டது.


இந்த உரையாடலில் பாலகுமார் மிகவும் திருப்திப்பட்டவராகவே சிரித்தபடி இருந்தார். இந்த விமர்சனங்களை முந்தியடித்து தன்னை நியாயப்படுத்தும் நிலையை அவர் எடுக்கவேயில்லை.


நேரம் இரவு 8.30 மணியைத் தாண்டிக்கொண்டிருந்தது. ஞாயிற்றுக் கிழமை இன்று. மறுநாள் பாடசாலை நாள் என்பதால் இதுவே பிந்தியநேரமாகப் பட்டது பெற்றோருக்கு. வீடு செல்லும் அவசரம் பலரிடமும் தொனித்தது. ஒன்றுகூடலின் இறுதி காட்சிப்படுத்தலாக மட்டும் (அறிமுகம் என்றில்லாமல்) திட்டமிட்டபடி கிச்சான், பிரளயம், மழைநீர் குறும் படங்கள் திரையிடப்பட முடியாது போய்விட்டது. இறுதியாக இரண்டரை நிமிடம் மட்டுமேயான "பிஞ்சுமனம்" திரையிடப்பட்டது. (அஜீவனின் அமெரிக்க உலாவலின்போது அவர் நிகழ்த்திய பயிற்சி வகுப்பில் தீபா ராஜகோபாலினால் எடுக்கப்பட்ட படம் இது)


மீண்டும் மண்டபத்துள் வெளிச்சம். மூட்டைகட்டும் மும்முரம். மண்டபம் முன்புபோல் வெறுமையானது. வாங்கிய புத்தகங்கள் டிவிடிக்களுடன் ஆயத்தமானார்கள் எல்லோரும். அங்குமிங்கும் கூடிக் கதைத்து நட்பின் சந்திப்புகளை நிகழ்த்தியபடி கலை இலக்கிய ஒன்றுகூடல் முடிவுற்றது.

----------------------------------------------------------------------

ranr@bluewin.ch

Friday, November 30, 2007

பால் கடன்


2000 ஆம் ஆண்டு எழுதிய இந்த கவிதை தொலைந்து போய்விட்டதாய் நினைத்திருந்தேன். கிடைத்துவிட்டது. திண்ணைக்கு நன்றி.


என் மார்பின்
பால் வாசனையில்
கண்வளர்ந்தவளே!
இன்று நீ அகதியாய்
அன்னிய தேசத்தில்.
தொப்பிள் கொடி
இன்னமும் பச்சையாய்.

உன்னை நினைக்கும்
போதெல்லாம் -என்
கருப்பைச் சுவர் கூட
விம்மி எழுகிறது.

வயசு தான் போட்டுது
ஆனால் இன்னமும்
கருப்பைச்சுவர் உன்
இஸ்பரிசத்தை மறக்கவில்லை.

உன் உணர்வைச்
சுமந்து வரும் கடிதம் பார்க்க
கண் இசைவதில்லை.

உன் புகைப்படத்தை
பள்ளிக்கப்போகும் போது
உன்னை அழைத்துச்சென்ற
விரல்கள் தான் தடவிப்பார்த்து
மகிழ்ந்து கொள்கிறது.

படலைக்குள் அரவம் கேட்டால்
நீ வந்து நிற்பதாய்
ஓர் பிரமை.
பிறகென்ன கேக்கவே வேணும்.
கண்ணின் வில்லை கூட
உன் வரவுக்காய்
ஒருமுறை சுருங்கி விரியும்.

அன்று முழுவதும்
சொட்டுத் தண்ணி கூட
நாவிறங்கா.

ஊரில் எல்லோரும்
மகளின் வெளிநாட்டுக்காசில்
கிழடுக்கு உல்லாச வாழ்வு என்று
போற்றுவதாய் உமிழ்ந்து மெல்வர்.

முகம்மலர கேட்டுவிட்டு
உன் நினைவால் மனம்
பித்துப்பிடித்ததை யார் அறிவர். ?

சாவோ
என் வாசலில்
தலைவிரித்து நிர்க்கிறது.
உன் ஸ்பரிசம்பட்டால் தான்
இந்த அம்மா உயிர்போகுமம்மா.
ஓடோடி வந்து என்
பால்கடனைத்தீர்த்துவிடு.
__
நளாயினி
சுவிற்சலாந்து.
2001

nanre.
http://www.thinnai.com/?module=displaystory&story_id=30404019&format=html

Thursday, November 29, 2007

பூக்கள் பேசிக்கொண்டால்........! (3)




னது பெயரையே
உச்சரித்த உனக்கு
தண்டணை தந்தது யார்?
எனக்குத் தெரியும்.
உன் உயிரினுள்
நான் தான் இன்னமும்
கசிந்து கொண்டு
இருக்கிறேன் என்று.
**


ன் உள்ளம் கையை தா..
நான் கன்னம் வைத்து துயில.
அப்போதான் நான் அழுவதும்
சிரிப்பதும் உணர்வாய்.
என்னை
அரவணைத்து கொள்ளவும்
என்னோடு சேர்ந்து
சிரித்துக்கொள்ளவும்
பாவம் தலையணைக்குத் தெரியாது.
**


ஞ்சணைதான்
தூக்கம் இன்றி
உழல்கிறேன்.
என் இயல்பு
நிலையை எல்லாம்
களவாடிச்சென்றவன் நீ!!

நளாயினி.

பூக்கள் இன்னும் பேசும்.....

Wednesday, November 28, 2007

குளிக்கலாம் வாங்கோ.


சுடுகுதா, குளிருதா. ஆ... இந்த அம்மா எப்பவுமே இப்பிடித்தான்.






இப்படியா யாரும் முழுகவாக்கிறது மூச்செடுக்கவிடாமல்.


Monday, November 26, 2007

ஓவியம். 25/11/2007

The face of war.
ஓவியத்தின் மேல் கிளிக்செய்தால் பெரிதாக பார்க்க முடியும்.

Copyright © nalayiny


Sunday, November 25, 2007

ஓவியம். 18/11/2006

Any pain sharper than a cut we all understand is love.
ஓவியத்தின் மேல் கிளிக்செய்தால் பெரிதாக பார்க்க முடியும்.
Copyright © nalayiny

Thursday, November 22, 2007

good morning.


Copyright © nalayiny

Tuesday, November 20, 2007

...மடல்கள்.









Copyright © nalayiny

Monday, November 19, 2007

ஓவியம்.12/09/2007



ஓவியத்தின் மேல் கிளிக்செய்தால் பெரிதாக பார்க்க முடியும்.

Copyright © nalayiny

Thursday, November 15, 2007

கவிதை.....


காலத்தின் கடமையை
எட்டி உதைத்துவிட்டு
ஒராயிரம் மைல் கடந்தோம்.

எங்கள் வலிகளை
தூக்கி இறக்கி வைக்க
வலுவான வார்த்தைகள்
இல்லைத்தான்.

நறுமண ஞாபக
குவியல்களும்
உங்கள் வலிகளின்
முனகல்களும் தான்
எங்களை வாழச்சொல்கிறது.

முகாரிகளுக்குள்ளும்
உறைபனி முகடுகளுக்குள்ளும்
எம் உணர்வுகளை
முக்காடு போட்டு
மறைத்துக்கொண்டாலும்
எல்லாம் பொய்த்து விடுகிறது.


சில செயல்கள்
எதற்காக செய்கிறோம்
என்றே தெரியாமல்
பல தடவை செய்தாச்சு.

அடுத்த முறை இப்படி
செய்யக் கூடாது என
மனது சப்தமின்றி
சத்தியம் செய்தாலும்
ஏதோ செய்துதான்
தொலைக்கிறோம்.

வண்ணாத்துப்பூச்சியை
தும்பியைப்பிடித்து
சின்ன வயசில்
சிரச்சேதம் செய்தவர்கள்-நாம்

சின்ன குருவி ஒண்டு
சாகப்போறதைப்பார்த்து
காப்பாத்துங்கோ
காப்பாத்துங்கோ
என அரற்றிய என்னை
இழுத்துப்பிடித்து
என்ன நடந்தது உங்களுக்கு
என்கிற போது தான்
சுய நினைவுக்கு வந்திருக்கிறோம்

நறுமண ஞாபக குவியல்களுக்குள்
உங்கள் ஆறா வலி முனகலுக்குள்
அடிக்கடி மூழ்குவதால்
சுயநினைவை இழக்கின்றோம்.

ஆனாலும் என்ன
வண்டில்காரன் தூங்கிவிட்டால்
மாடு பத்திரமாய்
வீடுவந்து சேர்வது போல்
எம் நாளாந்த கடமைகள்
அத்தனையும் நடக்கத்தான்
செய்கிறது

அருகில் வந்து
யாரும் கதை கேட்டால்
உணராது
என்ன செய்கிறாய் என
கரம் ஒன்று தொடும்போது
மட்டுமே திடுக்கிட்டு
விழித்துநிற்போம்.
அழும் விழிகளுடன்.

பயத்தில் அழுகிறோமா?
நினைவால் அழுகிறோமா?
வலிமுனகலால் அழுகிறோமா?
இந்த வெள்ளையர்க்கு
எங்கள் சோகம் எப்படி
புரியும் என நினைத்து அழுகிறோமா?
தலைசாய்த்து நாம் ஆற அருகில்
ஓர் மடி இல்லையே என அழுகிறோமா?

எதற்கழுகிறோம்?
இன்னும்தான் புரியவில்லை.

நளாயினி

Sunday, November 11, 2007

ஓவியம்.5/8/2007




ஓவியத்தின் மேல் கிளிக்செய்தால் பெரிதாக பார்க்க முடியும்.

Tuesday, November 06, 2007

கவின் குறு நூறு. ( ஈரோடு தமிழன்பன்.) கவிதையோடு கரைதல்.


(மகள்.)

எனது கையில் ஈரோடு தமிழன்பனின் கவின் குறு நூறு என்ற கவித்தொகுதி கிடைத்த போது என்னடா இது ,கவிதைகள் எல்லாம் புதுவடிவம் பெற்றுவிட்டன என மனதில் ஒரு திகில்.

அதற்குள் கீறப்பட்டிருந்த ஓவியங்களை பார்த்தபோது ,எத்தனையோ நவீன ஓவியங்களை பார்த்து பார்த்து வியந்து போன எனக்கு ஓவியர் புகழின் ஓவியங்களில் பரீட்சயமில்லாததால் கோட்டோவியங்களை பார்த்ததும் எனக்கு ஆச்சரியமும் வியப்பும் ஏற்பட்டது.

பின்னர் எப்போதோ பார்த்த ஞாபகம் ஒவியர் புகழின் இணையத்தளம்.

http://www.oviarpugazh.com/

அதை முற்றிலுமாக முற்றுகையிட்டேன். அந்த ஓவியங்களை உணர முற்பட்டேன். அத்தனை உணர்வுகளையும் கோட்டோவியங்களுள்கொண்டு வந்து விடலாமா.! கொண்டுவந்திருக்கிறாரே புகழ்.அதன் பின்னர் கவின் குறுநூறை வாசிக்க தொடங்கினேன்.

கவின்குறுநூறை வாசிக்க வாசிக்க இரண்டு சகாப்தமாக இறுக மூடப்பட்ட பல கதவுகள் என்னுள் திறந்து முகம்காட்ட தொடங்கியது. இளமைக்கால ஞாபகங்கள் ,சிறுபராயத்தில் செய்த குறும்புகள், செய்து விட்டு கிடைத்த தண்டனைகள், பள்ளிப்பருவத்து குறும்புகள், தண்டனைகள், இப்படியாக சங்கிலித்தொடராக---- அப்பப்போ முறித்துக்கொண்டு தூக்கம் என்னைத்தழுவினாலும் தொடரத்தான் செய்தது.

இப்போதெல்லாம் நான் நினைப்பதுண்டு , நான் நினைப்பவற்றை எல்லாம் உடனுக்குடன் தட்டச்சு செய்ய ஏதாவது ஒரு கண்டு பிடிப்பை யாராவது செய்ய மாட்டார்களா என்று. ? பலதை எழுத வேண்டும் என ஏதேதோ எல்லாம் வந்து போகும் . அத்தகையவை வேலைப்பழு குhடிய நேரத்தில் தான் என்னுள் முகம் காட்டும். பின்னர் அது பற்றி எழுதுவோம் என நினைத்து ஞாபகக்கிடங்கில் பதிவு செய்து வைத்தாலும் ஏனோ பிறகு மறந்து போகிறது . அல்லது அது வேறுவடிவம் பெற்றுவிடுகிறது. அடடா..! சில சமயம் கனவில் குhட கவிதைகளை எழுதி முடித்திருப்பேன். எழும்பி எழுத முயற்சிக்கிற போது எந்த வரியுமே எனக்காக காத்திருக்காது மறைந்து போய்விட்டிருக்கும்.

ஓ--! எங்கே விட்டேன் ஆஆ! இளவயது குறும்புகளில். அதெல்லாம் இப்போது கிடைத்தற்கரியதாகிவிட்டது எனது தேசத்திலும் இப்புலம்பெயர்தேசத்திலும். உற்றாh,; உறவு, சுற்றம் என வாழ்ந்தது அது காலம்.ஒரு சின்ன குறும்பு, களவு, செய்தாலும் அக்கம் பக்கமெல்லாம் தெரிந்துவிடும்.

பெரியம்மா, பெரியப்பாலு மாமா, மாமி அன்ரி அன்ரியப்பா அப்புச்சி பெரியாச்சி அப்பாச்சி என வாழ்ந்த குடும்பம். அப்பா தடி எடுத்தால், அடிக்க முதலே அந்த வளவு முழுக்க ஓடி ஓ... என பெரிதாக அழுவேன் ".தனது தம்பி ஒரு நாளுமே மகளுக்கு அடிக்கமாட்டான்" என மாமிக்கு தெரியும். தெரிஞ்சாலும் (எனது மாமி தான் பக்கத்து வீடு) "டேய் தம்பி இளையாம்ப"p என தனது வீட்டுத் திண்ணையிலை நின்று குரல் கொடுப்பார். அவ்வளவு தான் அப்பா தடியை கீழ போட்டுவிடுவார். அப்பா போடேலையோ நான் திரும்பவும் பிலத்து அழுவேன். திரும்பவும் ஒரு டேய் வந்து விழும் அப்பாவின் காலடியில். அப்பா பிறகு தடியை எறிஞ்சிடுவார். அதோடை எனது அழுகையும் நின்றுவிடும். என்ன கொஞ்ச நேரத்துக்கு அப்பாக்கு கிட்ட போக மாட்N;டன். பிறகு இருவரும் எல்லாவற்றையும் மறந்துவிட்டிருப்போம்.

இதை எழுதுகிறபோது நெஞ்சை அடைத்துக்கொண்டு விழிகளில் நீர் திரையிடுகிறது. வாயில் கைவைத்து செருமிக்கொண்டு என்னை சுதாகரிக்க முயல்கிறேன் முடியவில்லை.விழிகள் நிரம்பி கண்ணீர் எனது கன்னக்கதுப்பை ஈரமாக்குகிறது. தட்டச்சு செய்ய முடியவில்லை. கதிரையில் இருந்த படியே சிறிது நேரம் அழுதேன். கண்களை துடைத்து விட்டுக்கொண்டு எழும்பி குளியலறை புகுந்து கண்ணாடியில் முகம் பார்த்தேன். ஏதோ மணித்தியாலக்கணக்காக அழுதுவடித்தது போன்று விழிகள் சிவந்து கிடந்தன. முகம் அதைத்தது போன்று காணப்பட்டது. குளிர் நீரில் முகம் கழுவிவிட்டு மீண்டும் வந்தமர்கிறேன் கணணிமுன்.

ஆனாலும் அப்பாவின் குரலை ஒருமுறை கேட்க வேணும் போல் மனசு துடித்தது. தொலைபேசி செய்து பாடும்படி கட்டளை பிறப்பித்தேன்.(எனது தந்தை சங்கீதபூஐணம்.) அம்மா சொன்னார் சாப்பிடுகிறார் அப்பா என்று. இப்ப பாடும்படி மீண்டும் கட்டளை. "சரி சரி வாறன் வாறன"; என்ற படி வாயினுள் திணித்த சாப்பாட்டோடு வந்தார்அப்பா."பொறுபிள்ளை கைகழுவிப்போட்டு வாறன்" என தொலைபேசியோடு குரல் தந்து விட்டு மீண்டும் சமயலறை புகுந்தார்.

குரலை செருமி சரி செய்தபடி "சரி என்னபாட்டு பாட" என கேட்டார் .பேசிட வாய்மணக்கும் செந்தமிழை பேசிட வாய்மணக்கும்....
அது முடிய ம்.. இன்னொண்டு. என நான் கட்டளை பிறப்பித்தேன். என்ன பிள்ளை சாப்பிட்ட குறை என்றார். இல்லை வந்துருத்தி பாடச்சொன்னன். சரி கொஞ்சம் எண்டிட்டு பாடினார். மனசு கனத்து உடல் களைத்துப்போகிற சமயங்களில், எல்லாம் அப்பாவின் பாடல் கேட்டால் அப்பாவோடு கதைத்தால் அத்தனை சொர்;க்கமும் எனக்குள் வந்திறங்கியதாய் ஒரு உணர்வு. அப்பாவின் மடியில் தலைவைத்து படுத்த சுகம்.அப்பா என்றால் அத்தனை பிரியம் எனக்கு. நினைவுகளில் கரைதல் என்பது எத்தனை இன்பமானது.

குழந்தைகள் என்றாலே எனக்கு அத்தனை பிரியம். எனது வீட்டைச்சுற்றி குழந்தைகளே பல வருடங்களாக இல்லை. அங்கு செய்த அட்டகாசம் முழுக்க நானும் எனது இரண்டாவது அண்ணாவுமாகத்தான் இருக்கும்.எனக்கு பதின்னான்கு பதினைந்து வயது வரைக்கும் என சொல்லலாம். பின்னர் எனது பக்கத்துவீட்டு மாமாக்கு திருமணமாகி அடுத்த வருடமே அழகியதொரு பெண்குழந்தை பிறந்தது. அத்தனை அழகையும் இறைவன் வஞ்சகமெதுவும் செய்யாமல் கொடுத்திருந்தார். தத்தி நடைபயின்ற காலம். தூக்கி கொண்டு வீடு வந்து விடுவேன். குழந்தைகளோடு பொழுது போக்குவதென்றால் காலநேரம் போவது தெரிவதில்லை.

பின்னர் யாழ்ப்பாணம் கொழும்பு இந்தியா என சென்ற போதெல்லாம் பிரிவுத்துயரமும் போர்க்கொடுமையும் தான் எனது மூளைப்பரப்பெங்கும் நிறைந்திருந்திருக்கிறது என்பதை இப்போது இதை எழுதும் போது தான் உணர்கிறேன். . எந்தக் குழுந்தையின் ஞாபகமும் இல்லை. பஸ்சில் றெயினில் விமானத்தில் அப்படி ஞாபகப்பதிவாய் எந்தக்குழந்தையுமா வந்து போகவில்லை எனது வாழ்வில். நினைத்துப்பார்க்கிறபோது மிகுந்த வேதனை அடைகிறது என் மனசு. ஞாபகத்தில் இருப்பதெல்லாம் பசிக்காக அழும் குழந்தைகளும், குண்டுவெடியில், செல் வீச்சில் சிதறிமாண்ட குழந்தைகளின் முகமிளந்த கோர சம்பவங்களும,; கை கால் ஊனமுற்ற குழந்தைகளின் உருவப்படங்களும் தான். நெஞ்சு கனக்கிறது.என்ன செய்து விட முடியும்? நம்மால் வேதனைப்பட்டு வேதனைப்பட்டு உருகி கருகுவதே ஈழத்தமிழன் விதியாச்சு.


பின்னர் Nஐர்மனி வந்திறங்கியபோது அண்ணாவின் இரு பிள்ளைகள். இருவருமே என்னை மிகவும் பாதித்த பிள்ளைகள். அப்படி பயங்கர சுட்டித்தனத்தோடு குhடிய குறும்புகள். பின்னர் எனது மகள் மகன். அப்பாடா எனது பிள்ளைகள் செய்துவிட்ட குறும்புகளுக்கு அளவே இல்லை. இப்படியாக பலதை இந்த கவின் குறு நூறு என்னுள் தோற்றுவித்துவிட்டிருந்தது.இரவில் எல்லோரும் தூங்கிய பின் கோல் முழுவதும் மெழுகுதிரிகளை ஏற்றி வைத்து விட்டு மூன்று முறை முழுமையாக படித்துமுடித்துவிட்டிருந்தேன்.அத்தகையதொரு ரம்மியப்பொழுதில் வாசிக்க வேண்டிய கவிதை. இப்போது கவிதைகளோடும் ஓவியத்தினோடும் என்னால் அழகாக கைகோர்த்து மனம் கோர்த்து செல்ல முடிகிறது.
தனது பேரனின் குறும்புகளை அணுவணுவாக ரசித்து எழுதியிருக்கிறார். ஈரோடு தமிழன்பன்.

குழல் இனிது யாழ் இனிது என்பர் தம் மக்கள்
மழலைக் குறும்பை உணர்ந்து இரசியாதோர்.

சொல்கிறார் கவிஞர் (பக் 38)

குறும்புகளின் உலகம்
குழந்தையைத்தான்
தியானிக்கிறது. அதன் மூலம்
கற்பனைச்
சுவற்கத்தின்
கனவுகளைத்திறக்கிறது.

குழந்தைகளின் உலகமே ஒரு தனியான உலகம் அதிலும் அவர்களின் ஒவ்வொரு படிநிலை வளர்ச்சி என்பது அவதானிப்போரை வியக்க வைக்கின்றது. நாம் குழந்தைகளிடமிருந்து நிறைய கற்றுக்கொள்ள வேண்டியவர்களாக இருக்கிறோம். குழந்தைகளால் தம்மை மாற்றி அமைத்தவர்கள் நிறையப்போ.; .அடிக்கடி எனது அம்மா குhறுவார் குடும்பத்தில் தாய் தந்தையரை மாற்றி அமைக்க கட்டாயம் ஒரு பிள்ளை பிறக்கும் என. தங்களை மாற்ற நான் பிறந்தேன் என அடிக்கடி குhறுவார். அதனை நான் பின்னாளில் எனக்கு குழந்தைகள் பிறந்த போது அனுபவித்திருக்கிறேன். தினம் தினம் நம்மை நாம் திருத்திக்கொள்ள வேண்டியவர்களாக இருக்கிறோம். அவர்களின் சிந்தனைகள் செயல்கள் குறும்புத்தனங்கள் எல்லாமே இந்த 2007 ஓடு ஒட்டி வளர்ந்து கொண்டே செல்கிறது.அவர்களுக்கான சிந்தனைகளுக்கும் கற்பனைகளுக்கும் நாம் வழி விட்டு இடம் கொடுக்க வேண்டியவர்களாக இருக்கிறோம். குழந்தைகள் நம்மை பக்திப்பரவசமாக்குவார்கள். காதலாகி கசிந்து கண்ணீர் மல்க வைப்பர்.

இப்படித்தான் ஒரு முறை எனது வேலைத்தளத்தில் முதலாளியோடு சின்ன மனஸ்தாபம். மனம் மிகவும் சோர்ந்து போயிற்று. பலத்த சிந்தனைக்கு ஆளானவளாக வீடு வந்தேன். நடந்த விடயத்தை பதின் மூன்றே வயதான மகளிடம் சொன்னேன். என்னை ஆதரவாக அணைத்து முத்தமிட்டிட்டு அம்மா தேனீர் போடுகிறேன் என தேனீர் போட்டார். சுடச்சுட . உடலுக்கும் மனசுக்கும் புத்துணர்வு வந்தது போல் இருந்தது. பிறகும் நடந்த சம்பவத்தையே கதைத்துக்கொண்டிருந்தேன்.

மகள் ஓர் பெரிய மனிசியாகி தனது உடலை அற்றென்சனாக்கி கைகளை உயர்;த்தி எனக்கு ஆலோசனை குhறினார்உரத்த தொனியில்.பட பட என பொழிந்து தள்ளினார்.நான் பிரமித்தே போனேன். இத்தனை வயதில் இதனை வெரி சீரியஸ்சாக எடுக்காத போக்கு எனக்கு பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அவர் பின்வருமாறு குhறுகிறார். " அம்மா ஒவ்வொருவரும் ஒவ்வொரு புத்தகம் மாதிரி. ஒவ்வொரு நாளும் அந்த புத்தகத்தின் ஒவ்வொரு பக்கம் மாதிரி. திரும்ப திரும்ப அதே பக்கத்திலையே நிண்டா எப்பிடி.? அடுத்த பக்கத்தை புரட்டிப்போடுங்கோ. இல்லையோ நாளும் காலமும் நேரமும் உங்களுக்காக நில்லாது. .சும்மா நடந்ததையே நினைச்சுக்கொண்டு.-- என ஒரு விறைப்போடு சொல்லி முடித்தார். எனக்குள் பல அதிர்வலைகள். எண்ண ஓட்டங்கள். ஒரு புது விதமாக உரோமங்கள் சிலிர்த்துக்கொண்ட உணர்வு. இதுவரைகாலமும் உணராத பல புதுப்புது உணர்வுகள் இன்னதென்று குhறமுடியாத இன்னதென்று வரையறுக்க முடியாத உணர்வுப்பெருக்கம் என்னுள் எழுந்தது.

குறும்புக்குள் நுழைகிறேன்.பலதை வாசித்தபோது என்பதை விட அந்த குறும்புகளை ரசித்தபோது உண்மையில் நான் வாய்விட்டு சிரித்த அனுபவங்கள் தான் நிறைய.

எதைக்கொடுத்தம்
சமாதானம் ஆகாது
அழுத கவின்
சமாதானம் ஆனான்
பாட்டியும்
சேர்ந்து அழுதபோது. (பக் 10 )

வண்ண எழுதியை
எடுத்துக்கொடுத்து
வானில் உள்ள
இளம்பிறை காட்டி
அப்பாவிடம் சொன்னான்
அதை முழுசா வரை.! (பக் 13)

நீ உன் மாமா மாதிரி
போக்கிரியாகத்தான்
வரப்போகிறாய் என்ற
அம்மாவிடம்
அவன் கேட்டான்
அப்படீன்னா
நீ யார் மாதிரி போக்கிரி.? (பக் 14)

பூங்காத் தடாகத்தில்
வாத்து பார்த்து வந்த
கவின்
முற்றம் முழுக்க
கொட்டினான் தண்ணீர்.
பொம்மை வாத்து நீந்த வேண்டுமே. (பக் 19)


பூங்கா தடாகம், வாத்து, இந்த கவிதையை பார்த்த போது எனது மகளின் சிறுவயதுக் குறும்பு ஒன்று ஞாபகப்பதிவில். ஒன்றரை இரண்டு வயதுக்குள் தான். எப்போ நாம் எமது பார்வையை தன்னில் இருந்து விலத்துகிறோமோ அதை உணர்ந்த அந்தப்பொழுதில் கண்மூடி திறப்பதற்குள் என்பார்கள் அப்படி குளிர்சாதனப்பெட்டியை திறந்து குறைந்தது 5 முட்டைகளையாவது தூக்கி கீழேபோடாமல் இருந்தது கிடையாது. குளிர்சாதனப்பெட்டியை திறக்கும் சத்தம் கேட்டு சிந்தாம்மா என உறுக்கியபடி ஓடுவதற்குள்ளாக இவை நடந்து முடிந்துவிடும். என்னை விட அத்தனை வேகம்.

உடைத்துவிட்டு துள்ளி துள்ளி கைதட்டி சிரிப்பார். என்னை அப்போ சிந்திக்க வைத்த விடயம் இது. நான் முட்டை வாங்கி வந்து குளிர்சாதனப்பெட்டியில் வைத்ததை அவதானித்திருப்பது, அதை போட்டு உடைப்பதற்கென காலம் நேரம்பார்த்துது காத்துநிற்பது, . .. அட அட பிரமித்துப்போன குறும்புகளில் இதுவுமொன்று. இப்போது தான் நினைக்கிறேன். சிரிப்பு வருகிறது. தொலைக்காட்சியில் ரொம் அன் nஐரி நன்றாக பார்ப்பார் வாய் பிளந்தபடி அத்தனை உன்னிப்பாக பார்ப்பார். அதில் எல்லாம் முட்டைகள் உடைந்து குஞ்சுகள் வெளியே வரும். ஓடும். குளிர்சாதனப்பெட்டியுள் உள்ள முட்டைகளையும் உடைத்தால் அதிலிருந்து கோழிக்குஞ்சுகள் வெளியேறி ஓடும் என நினைத்தாரோ...! எத்தனை விடுதலை உணர்வு அவருக்குள் அந்தவயதில் இருந்திருக்கிறது என்பதை இப்போது நினைக்கிறபோது பெருமிதமாக இருக்கிறது. குழந்தைகளின் ஒவ்வொரு செய்கைகளுமே அவர்களின் எதிர்காலத்தை பிரதிபலிப்பவை என நான் அதிகம் நம்புபவள். அதனால் தான் எனது மகளுக்குள் அத்தகையதொரு விடுதலை உணர்வு என குhறினேன்.

இதை எழுதிவிட்டு குறும்புகளுள் திழைக்கிறேன். எனது மகளுக்குள் உள்ள விடுதலை உணர்வை இந்த குழந்தையிடமும் காண்கிறேன்.

படமாய் பட்டாம் பூச்சி.
சட்டையில்.
பறக்கச்சொல்லி
கவின்
சட்டையோடு அதைச்
சன்னலுக்கு
வெளியே விட்டான்.

குழந்தைகளை நாம் ஏமாற்றிவிட முடியாது. அத்தனையும் அவர்களின் உலகில் புரிந்து கொண்டே அவர்கள் வளர்கிறார்கள். அவர்களின் சிந்தனைவளர்ச்சிக்கு ஏற்ப நாம் அவர்களுக்கு செய்யும் பொய்மைத்தனத்தை அவர்கள் புரிந்தே வைத்திருக்கிறார்கள். ஒரு குழந்தையை பாருங்கள் எழுந்து நடக்க தொடங்கும் போது எத்தனை லாவகமாக பக்குவமாக எழுந்து நிற்க முயல்கிறது என்று. அதே போல மேசைகளுக்குள் தவழும் போது தலையில் இடித்து விடுமே என அதில் குhட அதிக கவனமாக இருக்கிறார்கள். விழப்போகிறார்கள் என தெரிந்து எத்தனை பக்குவாமாக தம்மை தரையில் இருத்திக்கொள்கிறார்கள். நாம் தான் ஆ ஊ ஐயோ விழப்போகுது பிள்ளை என கத்தி பயப்பிடுத்தி விடுகிறோம். அந்த குழந்தையின் துடினத்தை அடக்கி விடுகிறோம்.இந்த அடக்குதல் என்பது குழந்தையின் இயல்பான சிந்தனைக்கு தடைக்கல்லாக அமைகிறது என்பதை பல பெற்றோர் அறிவதே இல்லை.

(மகன்)



இப்படித்தான் எனது மகன் அப்போ எட்டு மாதம் அவருக்கு. சோபாவில் இருத்திவிட்டு நான் எனது அலுவல்களை செய்தபடிக்கே இருப்பேன்.இந்த செய்கை எனது வீட்டு வேலைகளை இலகுவாக சீக்கிரமாக முடிக்க சுகமாக இருந்தது. அவரால் சோபாவில் இருந்து இறங்க முடியாது. இறங்க முனையும் போது ஆ ஆ.. நோ நோ. விழப்போறீங்கள் என எனது விரல்கொண்டு விழிகொண்டு மிரட்டுவேன். அமைதியாக இருப்பார். இதுவே எனக்கு வழக்கமாகிவிட்டது. இந்த அம்மா என்னை நெடுக வெருட்டுறாவே இவவை என்ன செய்யலாம் எனது மகன் நினைத்திருக்கலாம் போலும் அவரின் குழந்தை உலகு குறும்புலகு. பிறகு என்ன தொண்டை அடிக்குரலில் வாயிலிருந்து நீர் வடிய சிரித்தபடிக்கு தான் செற்றியில் இருந்து இறங்குவதாக பாவனை செய்து என்னை வெருட்ட தொடங்கிவிட்டார். எனக்கு அந்த செய்கை அம்மா நான் விழுறன் விழுறன் என்ற உணர்வை தோற்றுவித்தது. என்னை ஒரு வீட்டு அலுவலுமே செய்யாமல் செய்து விடுவார். அப்படி பயமுறுத்தியபடி . நெஞ்சையே பதை பதைக்க வைப்பார். பிறகென்ன. மகனின் டோச்சர் தாங்க முடியாமல்
எனது மனசு பதைபதைத்தது தான் மிச்சம். பிறகு ஆளை இறக்கியே விட்டு விட்டேன். சோபாவில் இருத்துவதே கிடையாது.

(மகன்)


அதன் பிறகு அவருக்கு ஒரே உல்லாசம் தான். தவழுவதும் இருப்பதும் தவண்டு தவண்டு பலவற்றை எடுத்து வைத்து ஆராய்வதுமாய் எழுந்து நிற்பதற்கான முயற்சிகளுமாய்அவரின் உலகு பரந்து விரியத்தொடங்கியது. குழந்தைகளுக்கு நாம் ஒன்றை செய்தோமானால் அவர்கள் நம்மை சிந்திக்க வைப்பதோடு நம்மை திருத்தியும் விடுகிறார்கள். இனிமேல் எனக்கு இப்படி செய்யாதே என செய்கைகளால் நிரூபித்தம் விடுகிறார்கள்.

அதையே இந்த குறும்பில் காணமுடிகிறது.

இரண்டு மிட்டாய் தானே.
வேணும்.
இதோ என்று ஒன்றையே
உடைத்து
இரண்டாக்கி தந்தார் அப்பா.
அடுத்த நாள்
ஒன்றுக்கு இரண்டு பேனா
மேசைமேல்.
அவன் அப்பா பார்த்தார்.
வாசலில் விழையாடிக்கொண்டிருந்தான்
அவன்.


அந்தந்த வயதிற் குரிய காலத்தில் அவரவருக்கான உலகம் விரிந்து பரந்து செல்கிறது. அவரவர்கேயான சிந்தனை செயல் திறன் ஆராய்வு சுதந்திரம் அனுபவம் .. இப்படியே குhறிச்செல்லலாம் . ஆனாலும் இந்த குழந்தைகளின் உலகம் எப்படி இருக்கும் அவர்களின் சிந்தனை செயல் எப்படியானவை இது பற்றி நாமெல்லாம் பெரிதாக அலட்டிக்கொள்வதில்லை.பெற்றோரே தமக்கே தமக்கான சிந்தனைகளை மட்டுமே அவர்களுக்குள் திணித்துக்கொண்டிருப்போம். அவர்களின் சிந்தனை செயல் சுதந்திரத்திற்கெல்லாம் பயங்கர முள் வேலி போட்டுவிடுவோம். ஆக மிஞ்சி மிஞ்சிப்போனா ஒரே வார்த்தையில் வாயை மூடலாம் என சிந்தனை செயல் எல்லாவற்றுக்குமே முட்டுக்கட்டை போட்டுவிடுவோம்.

ஒவ்வொன்றையும் புதிது புதிதாக அறியும் குழந்தைகள் தாம் அறிந்தவற்றோடு அதனை தொடர்பு படுத்தி பார்க்க முயல்கிறது. அன்றி நாம் திணித்த கருத்துக்களோடு ஒப்பிட்டு பார்க்க முயல்கிறது. அப்படி ஒப்பிட்டு பார்க்க முயல்கிறபோது பெரிய குழப்ப நிலை தோன்றுகிறது குழந்தை மனசில். அத்தகையதொரு சிக்கலான உணர்வு இந்த குழந்தைகள் உலகத்தில் உள்ளது என்பதை எத்தனை அழகாக குறும்பாக்கி உள்ளார் கவிஞர்.

நீண்ட பலூனை
கவின் பின்பக்கமாக செருகி
உனக்கு வால் முளைத்துவிட்டது பாற்தாயா
என்றாள் அம்மா.
மறுநாள்
குரங்கைப் பாற்ததும்
கவின்
அடம் பிடித்தான்
அந்த பலூனை வாங்கிக்கொடு.!(பக்28)

கொஞ்சம் தண்ணீரைக் கொட்டினாலும்
கோபிக்கிறாளே அம்மா.
எவ்வளவு தண்ணீரை
இப்படிக்கொட்டுது வானம்.?
ஏன் கேட்கவில்லை?
ஏன் கோபிக்கவில்லை? (பக்32)

குழந்தைகளின் சிந்தனைகள் செயல்கள் கேள்விகள் மிகவும் விசித்திரமானவை. பல கேள்விகளுக்கு நம்மிடம் உடனடிப்பதில்களே இராதவையாக இருக்கும். எப்பிடி சொல்லலாம் என்னமாதிரி புரியவைப்பது என சிந்திப்பதற்குள் அவர்களின் உலகத்தில் அவர்களிற்கு பதில் கிடைத்து விடுமோ என்னவோ..!!? அவர்கள் வேறு சிந்தனை ஓட்டத்திற்கும் தமது தேடலுக்குமாக தம்மை தயார்படுத்திக்கொண்டு சென்றுவிடுவார்கள்.

(அவர்களின் உலகம் தான் எத்தனை துடுக்குத்தனமும் துடினமும் சுறுசுறுப்பும் நிறைந்த உலகம்.) இல்லையோ ஓ இந்த பெரியவர்களுக்கே இந்த கேள்விக்கு பதில் தெரியாமல் இருக்குமோ என்னவோ என தமக்குள் சிரித்தபடியே போய் விடுவார்களோ என்னவோ..? இப்படியாக நாம் சிந்திக்கிறபோது ஆச்சரியத்தையும் இன்னும் பலதை இந்த குழந்தைகள் உலகத்திடம் இருந்த அறியவேண்டும் என்ற ஆவலையும் தூண்டுகிறது.

குருவி நம்மைப்போல்
பொங்கல் கொண்டாடுமா?
கேட்ட குழந்தைக்கு
அம்மாவிடமிருந்து
பொங்கல் தான் கிடைத்தது.
பதில் கிடைக்கவில்லை.! (பக் 33)

அப்பாவிடம்
கவின் கேட்டான்
ஆகாயத்தில்
சூரிய விளக்குக்கு
சுவிட்ச்
எந்த இடத்தில் இருக்கிறது? ( பக் 34)

உலகிலேயே அழகிய மொழி குழந்தைகளின் மொழி தான்.

பாப்பி- பால்
ஆமி- மாமி.
டண்டா நந்தா
பிறறு-பிறகு.
கடவு. கதவு.
ஆனான விமனயம்.- ஆகாய விமானம்.
அம்மா கீக்கை கடிங்கோ- அம்மா ஐPன்சை கழட்டிவிடுங்கோ.
பிறிஞ்சுப்பை- பிறின்சிப்பல்.
அப்பா அம்மா அடி- அப்பா அம்மா அடிச்சுப்போட்டா.
அம்மா டட்டா. அம்மா வெளியில் போவம்.

இவை எனது மகளின் மகனின் மொழிகள். இப்படியாக சொல்லிக்கொண்டே போகலாம்.

குழல் இனிது யாழ் இனிது என்பர் தம் மக்கள் மழலைச்சொல் கேளாதோர்.



அதை அழகாக சொல்லி இருக்கிறார் கவிஞர்.

குழந்தையின்
மழலையை கற்பதற்கு
எந்த மொழிக்கு தான் ஆசை இருக்காது.?

எனக் குhறிய கவிஞர் தனது பேரனின் மொழியை எமக்கெல்லாம் கவிதையின் ஊடே தந்துள்ளார்.

மாப்பழத்தை
மாயிம்
என்றான் கவின்.
மாந்தோப்புக்கள்
உடனே அதைத் தம்
பிஞ்சுகளுக்கெல்லாம்
சொல்லிக்கொடுத்து
நெஞ்சம் மகிழ்கின்றன.(பக் 41)

குழந்தைகளின் செயல்களிற்கு நாம் தடைவிதிக்கிறபோது அவர்கள் அதை பெற அல்லது செய்ய முயன்று கொண்டே இருக்கிறார்கள் இருப்பார்கள் நம்மை ஏமாற்றியபடிக்கு.அது தான் உண்மை. அதை அழகா சொல்லி இருக்கிறார் கவிஞர்


எட்டாத
உயரத்தில் எல்லாவற்றையும்
வைத்தாயிற்று.
கவின் கையில்
இப்போது
ஒட்டடைக் கொம்பு.


(மகள்.)



குழந்தைகளின் விழிகள் எதையாவது தேடல் செய்து ஒளிவீசியபடியே இருக்கும் துறு துறு என எல்லாவற்றையும் ஒரு சேர தமக்குள் உள்வாங்கியபடியே இருப்பார்கள். அதனால் தான் குழந்தைகளின் விழிகளில் என்னேரமும் ஒரு பிரகாசம் தோன்றியபடியே உள்ளது. அதை அழகாக கவிஞர் குhறிஉள்ளார்.

பகலில் நட்சத்திரங்கள்
பளிச்சிட்டு மின்னுமா?
மின்னுகின்றனவே கவின் கண்களில்.!

குழந்தைகள் எப்போதுமே தங்களின் குறும்புகள் மூலம் நம்மை மகிழ்விக்கிறார்கள் தொல்லை தருகிறார்கள் குறும்பு செய்யாதபோது என்ன சத்தத்தையே காணம் என திடுக்கிட வைக்கிறார்கள். எங்காவது நம்மை ஏமாற்றிவிட்டு அமைதியாக ஒரு மூலையிலோ அல்லது கதவின் பின்னாலிருந்தோ ஏதாவது பெரியதொரு ஆராய்ச்சியில் எதையாவது பிய்த்து அல்லது உடைத்து அல்லது கலைத்து இப்படியாக எதையாவது பிரமிக்கத்தக்கதாகவும் கோபம் வரவழைக்க தக்கதாகவும் செய்தபடியே இருப்பார்கள். அதை எல்லாம் அழகாக தனது கவின் குறு நூறு மூலம் வெளிக்கொணர்ந்திருக்கிறார்.

(மகள்.)



பரிசளிக்கத்தக்க
குற்றங்கள்
குழந்தையிடம் பிறக்கின்றன
குறும்புகளாய்.( பக் 47)

எந்தக் குறும்பும்
செய்யாத நேரத்தில் தான்
அதிகம் கவலை.
எந்தக் குறும்புக்கு கவின்
யோசனை செய்கின்றானோ
என்று. (பக் 37)

கவினிடம்
உடைபடுவதில் கிடைக்கும் இன்பம்
எந்தப்பொருளுக்கும்
அதைப் பத்திரப்படத்தும்
யாரிடமிருந்தும்
கிடைப்பதில்லையே!(பக் 39)


என்
கவிதையிலிருந்த
வார்த்தைகளை
ஒரு சேர அள்ளி வெளியே
கொட்டியவன்
தன் வார்த்தைகளை
நிரப்பி வைத்தான்.
படித்து முடிக்கவில்லை
என்
தாயின் எழுதப்படாத கவிதையில்
வார்த்தைகளாய்க் கிடந்தேன் நான்.( பக் 19)

கலைத்தெறிகிறான் கவின்
காணாமற் போகின்றன பல.
கலைத்தெறிகிறான் கவின்.
காணாமல் போன பல கிடைக்கின்றன.
கலைத்தெறிகிறான் என்னைக் கவின்.
காணாமற் போவேனோ?
கிடைப்பேனா? ( பக் 5)

இறுதியாக இந்த கவின் குறு நூறு குறும்பகளைச்சொன்னாலும் கவிஞரே தனது பேரனின் குறும்பொன்றின் மூலம் சொல்கிறார் இப்படி...

சன்னல் வழியாக
பூட்டைத்
தூக்கிப்போட்டான்
குழந்தை.
யார் மண்டை திறந்ததோ? ( பக் 61)

எமது சமூகத்தில் குழந்தைகளை கையாளும் முறையே மிகவும் மோசமானது. அதை எல்லாம் விடுத்து குழந்தைகளின் குறும்புகளுக்குhடாக அவர்களை நாம் வழிநடத்துகிற போது நல்லதொரு குழந்தைகள் உலகத்தை நம்மால் உருவாக்கமுடியும் என்பதை சொல்லிச்செல்கிறார். என்னைப்பொறுத்தவரை இக் கவித்தொகுதி குழந்தைகளின் உளவியலை சொல்லிச்செல்கிறது. நல்லதொரு குழந்தை வளர்ப்பை சொல்லிச்செல்கிறது எனவும் எடுத்தக்கொள்ளலாம். தனது பேரனின் குறும்பு மூலம் பல சிந்தனைச்செல்களை புதிது புதிதாக நமதகத்துள் உருவாக்கி உள்ளார் கவிஞர்.



72 வது பக்கத்தோடு கவினது குறும்புகள் முடிந்ததா என கவலை என்னை ஆட்கொண்ட படிக்கு அவர் எழுதிய கவிதைக்கே மீண்டும் செல்கிறேன்.

முகவரி
தவறிய குறும்புகள் எல்லாம்
கவின் ஆதரவில்
வளர்கின்றன எங்கள் இல்லத்தில். ( பக் 41)

இன்று இதை எப்படியாவது எழுதி முடித்து விட வேண்டும் என்ற ஆவலில் ஓர் விடுமுறை நாள் பார்த்து அமர்ந்தேன் கணணிமுன். முடிந்து என்னடா எனது பிள்ளைகளின் சத்தம் சலாரை காணவில்லையே என்றபடிக்கு கிச்சனுள் நுழைகிறேன். கிச்சன் மேசை யாரோ தூரிகை கொண்டு பல வர்ணக்கலவையை கலந்தது போல் காட்சி தந்தது. சத்தம் வந்த திசை பார்த்தேன். வரவேற்பறை. கதவு மூடி இருந்தது. கதவை திறந்தபோது விழிகள் ஆச்சரியத்தில். கைகளால் முகத்தை பொத்தியபடிக்கு நான். விரல் இடுக்குகளுக்கால் பார்வை செல்கிறது. வரவேற்பறை பல கோணங்களில் பல வர்ணங்களில் நவீன ஓவியம் போல காட்சி தந்தது அயண்பண்ண என வைத்த உடுப்புகளால்.வரவேற்பறையுள் இருந்த பொருட்களுக்கெல்லாம் இன்று நல்ல கொண்டாட்டம். எப்படி கவின் எனது பிள்ளைகளோடு வந்து சேர்ந்தார் என எண்ணியபடிக்கு கவினை வீடெங்கும் தேடலானேன்.



குழந்தைகளை நேசி
குதூகலம் கொள்.
மூப்பைத்தள்ளிப்போடு.





நளாயினி
சுவிற்சலாந்து.
10/9/2007

Tuesday, October 23, 2007

வண்ணக்கலவை எண்ணம்போல்.

ஓவியத்தின் மேல் கிளிக்செய்தால் பெரிதாக பார்க்க முடியும்.

உயிர்த்தீ...... 9



புரண்டு புரண்டு
படுக்கிறேன்.
தூக்கமே வரவில்லை.
எங்கே போய் தொலைந்தது
என தேடிக்கொண்டிருந்தேன்.
அட உன் நினைவுகளோடு
தூக்கத்தை தேடுவது
மெது மெதுவாக
புரிந்தது எனக்கு.

தூக்கமே வரவில்லையா?!
உன் நினைவால் தான்
தூக்கம் தொலைந்ததா?!
தூக்கம் வரவில்லையே
என நினைத்த எனக்குள்
உன் ஞாபகம் வந்து
ஒட்டிக்கொண்டதா?!

விடை தேட முயன்றேன்.
விடையாக விரிந்தது மனதில்.

தூக்கம் வரவில்லையே
என நினைத்த எனக்குள்
உன் ஞாபகம் வந்து
எனக்குத் துணையாக
புகுந்து கொண்டது.

இது தான் நட்பின் உன்னதம்.
இப்படியான ஒரு இன்ப அனுபவத்தை
எத்தனை பேர் உணர்ந்திருப்பர்.!

Tuesday, October 16, 2007

நவீன ஓவியங்கள் பற்றி சுகாவின் பார்வை.

மேலதிக விபரங்களிற்கு இதனை கிளிக்செய்யவும்.

http://sukas.blogspot.com/2007/08/blog-post_16.html

ஓவியம். 18/08/2006


ஓவியத்தின் மேல் கிளிக்செய்தால் பெரிதாக பார்க்க முடியும்.

Monday, October 15, 2007

ஓவியம். 17/06/2007


ஓவியத்தின் மேல் கிளிக்செய்தால் பெரிதாக பார்க்க முடியும்.

Saturday, October 13, 2007

ஓவியம். 08/06/2007

ஓவியத்தின் மேல் கிளிக்செய்தால் பெரிதாக பார்க்க முடியும்.

Thursday, October 11, 2007

ஓவியம். 05/04/2007


ஓவியத்தின் மேல் கிளிக்செய்தால் பெரிதாக பார்க்க முடியும்.

Thursday, October 04, 2007

ஓவியம். 28/05/2007



ஓவியத்தின் மேல் கிளிக்செய்தால் பெரிதாக பார்க்க முடியும்.

Friday, September 28, 2007

மழையில் குளித்த இயற்கை எத்தனை அழகு; எத்தனை பசுமை ;எத்தனை குளிர்மை..!!










எனது வீட்டைச்சுற்றிய பகுதி.


Wednesday, September 26, 2007

மலையின் உச்சியில் விலங்கொன்றின் இருப்பு.!


படத்தின் மேல் கிளிக்செய்யுங்கள்.

Tuesday, September 25, 2007

பேரொளி.











Friday, September 21, 2007

நிழலில் மொழி எழுதி...




Thursday, September 20, 2007

சாட்சி.







என் வழக்கு
ஒத்தி வைக்கப்பட்டது.
வாய்க்குள்
துணி அடைத்து
கைகளை
துவக்கின்பிடியால்
அடித்து முறித்து
வன்புணர்வுக்காய்.

தப்பி ஓடி
என் உயிர் காக்க
தோட்ட வெளியுள்.

சன்னம் பட்டதில்
சரிந்து விழுந்தேன்
முட்புதர் பற்றையுள்.

மெல்லிய உணர்வை
முட்புதருள் வைத்தே
காமத்தால்
பலாத்காரம் செய்தனர்.

வழக்குத் தொடர்ந்தேன்
மெல்லிய உணர்வை
ரணப்படுத்தியதற்காய்.
என் வழக்கு
ஒத்திவைக்கப்பட்டது.


என் மன
எரிப்பிளம்பின்
கசிவும்
பூகம்ப அதிர்வின் பின்
மரணித்துக்கிடக்கும்
மக்களின்
உறவின்
வேதனையின் கசிவும்
உடல் வதையின்
ஆழ் மன பச்சையின்
தளும்பும்
சாட்சியாய் போதாதாம்.

என்க்கு நடந்த
கொடுமையின்
கோரத்தை
கண்ட சாட்சி
யாராவதுவாருங்கள்.


மீண்டும் என்னை
கூண்டினுள் வைத்து
வார்த்தையால்
வன்புணர்வு செய்து
என்னைகொல்ல.

நளாயினி

நன்றி தை
நன்றி சக்தி.

Wednesday, September 19, 2007

மனசின் வழி..




இரவின் நிழலாய்

நீள்கிறது விழிப்பு.


கதவுகளற்ற

யன்னல் கம்பிகளினூடே

ஒளிரும் விழிகளுடன்

கரும் பூனை ஒன்று

பாய்ந்து மறைகிறது.



கண்களை மூடுகையில்

இனம்காணமுடியா

சின்னதும் பெரியதுமாய்

மீன்குஞ்சுகள்

நீந்திப்பரவுகிறது.


குருவி ஒன்றின்

கீத ஒலி

ஸ்வரசச்ரமாய்

இறங்குகிறது உடலுள்.


உணர்வுகள் தோறும்

மெதுமெதுவாய்

பூக்கள் முகையவிழும் ஓசை


எரிவுடன்

விழிவழியே

திரள்கிறது கண்ணீர்.


போர்வையை

ஒருக்கழித்து எழும்புகையில்

வானத்தில் விடிவெள்ளி.


சூரியன் தனது பயணத்திற்காய் மீண்டும்.


நளாயினி
10- 08-2007

Sunday, September 16, 2007

ஓவியம். 09/06/2007


ஓவியத்தின் மேல் கிளிக்செய்தால் பெரிதாக பார்க்க முடியும்.