உன் பார்வையால்
என்னுள்
மின்னல் ஒன்று
எழுந்து ஓயும்.
உன் வார்த்தை ஜாலத்தில்
என் நாடி நரம்பெல்லாம்
வாத்தியமாகும்.
தெரியாதது போல்
உன் தேவை கருதி
நீ எனைத் தொடும் போது
என்னுள் மிருதங்க அதிர்வு
இப்படித்தான் இப்போ
மனசு உன்னை
அடிக்கடி
ஞாபகப்படுத்திக் கொள்கிறது.
அடடே!
இங்கே பாரேன்.
என்னையும் கேட்காமல்
உன்னையும் கேட்காமல்
என் இதயம்
அடிக்கடி
உன்னை வரைந்து பார்த்து
வர்ணம் தீட்டுகிறது.
நளாயினி தாமரைச் செல்வன்.
நளாயினி தாமரைச் செல்வன்.
6 comments:
அடடா எனக்கும் ஏதோ நினைவுகள்
சிறகடித்து மறைகின்றன
கானலாய் :'(
அடடாh..!! புரியுது புரியுது. பிறகு அதென்ன கானல் நீர் காயாத நீர் எண்டு கொண்டு. நோ குட்.
Naallaa Irukku!
nanre hameed. sukamaa erukereenkalaa? unkaluku blog ellaija? theedenan kaanam.
இதயம் வரைந்து பார்ப்பது சாத்தியமானது தான். அதனிடம் தான் கட்டிப்பிடிக்காத ரத்த வண்ணம் எப்பவும் ஓடிக் கொண்டே இருக்கிறதே...
நல்ல கவிதை, நளாயினி.
பாராட்டுகள்....
nanre nanpan.
Post a Comment