Wednesday, June 27, 2007

உயிர்த்தீ......8






பச்சைக் குழந்தையாய்
நான் இருந்த அழுகிறேன்.

என்னை நானே
அறைந்து கொள்ளலாம் போல்
இப்படித்தான் இப்போ
அடிக்கடி உணர்வுகள்
வந்து போகிறது.

எமது உணர்வுகளை
இரகசியமாக வைத்துக்கொள்.

யாரும் வந்து
கொச்சைப்படுத்தி விட்டு
போகக் கூடாது பார்.

நீயும் நானும்
எம்மை நாம்
உணர்ந்து கொண்டது
எத்தகைய உன்னதம்
தெரியுமா?!

வெறும்
காதலையும்
காமத்தையும்
உடலெங்கும் பூசிக்கொண்டு
வாழ்க்கை என்ற
போர்வைக்குள்
பதுங்கிக்கொள்ளும்
இந்த மானிடர்க்கு
எமது உறவும்
அப்படித் தெரியலாம்.

இது வெறும் பருவகால
சந்திப்புப்போல் அல்ல.
இது எத்தகைய தொரு
உன்னத பக்குவ நிலை தெரியுமா.

இதை எந்த
வார்த்தை கொண்டு
அழைக்கலாம்?

காமம் என்கின்ற
கருப்பொருளூடாக
மட்டுமே பார்க்க தெரிந்த
இந்த சமூக சாம்ராச்சியத்தால்
புணர்ந்து அழிக்கப்பட்ட
உள்ளங்களாய்.

அது சரி
இந்த பரந்த பூமியில்
எம்மைப்போல்
அங்கொன்றும் இங்கொன்றுமாய்
சில உள்ளங்கள் இருக்குமோ?!!

7 comments:

Anonymous said...

மிகவும் அற்புதமாக உள்ளது.

நளாயினி said...

nanre.

யோசிப்பவர் said...

//நீயும் நானும்
எம்மை நாம்
உணர்ந்து கொண்டது //
என்னங்க? ஒருமை பன்மை எல்லாம் கலந்து வருது?

//காமம் என்கின்ற
கருப்பொருளூடாக
மட்டுமே பார்க்க தெரிந்த
இந்த சமூக சாம்ராச்சியத்தால்
புணர்ந்து அழிக்கப்பட்ட
உள்ளங்களாய்.

அது சரி
இந்த பரந்த பூமியில்
எம்மைப்போல்
அங்கொன்றும் இங்கொன்றுமாய்
சில உள்ளங்கள் இருக்குமோ?
//
இது நல்லாயிருக்கு. ஆனால் மறுபடியும் சொல்கிறேனே என்று கோபப்படக்கூடாது. டோட்டலாவே கவித்துவம் மிஸ்ஸிங்!!!;(

நளாயினி said...

யோசிப்பவர் said...
//நீயும் நானும்
எம்மை நாம்
உணர்ந்து கொண்டது //
என்னங்க? ஒருமை பன்மை எல்லாம் கலந்து வருது?


இப்ப நோ நேரம். பிறகு வந்து அர்த்தம் சொல்லுறன். ஓகேவா.

நளாயினி said...

நீயும் நானும். தனித்தனிய இருந்தம். இப்ப ஒன்று சேர்வதால் நாமாகிறோம். நாமானால் எம்மை நம்மை என சேர்த்தேன். இனி நமது உணர்வுகள் தனித்தனிய இல்லை . அதாவது எனது உணர்வு உனது உணர்வு என பாகுபாடு இல்லை. அவை நமது உணர்வுகள். இப்ப புரிஞ்சிச்சா. நம்மை நாம் புரிதல் என்பதும் அதே தான்.

காரூரன் said...

*\\நீயும் நானும்
எம்மை நாம்
உணர்ந்து கொண்டது //
என்னங்க? ஒருமை பன்மை எல்லாம் கலந்து வருது?\\*

இப்படி "யோசிப்பவர்" கூறியிருந்தார்.

அவங்க ஊரில் எங்க காலேஜ் என்று சொல்லக்கூடாதாம். நம்ம காலேஜ் என்று சொல்லணுமாம். இப்படி சொன்னவர் ஒருவருக்கு தமிழ் நாட்டில் படிக்கும் போது விளக்கம் கூறியிருந்தேன். அதே குழப்பம் தான் இவருக்கு. இதாலை தான் பன்மை என்று குழம்பியிருக்கின்றார்.

புதுக்கவிதைக்கு வரைவிலக்கணம் தேவையில்லை, தொடர்ந்து எழுதுங்கள்.

நளாயினி said...

நன்றி காருரன். வருகைக்கும் தங்கள் உணர்வுக்கும்.