Friday, June 08, 2007

இலக்கு.( ஓவியமும் நானே. கவிதையும் நானே.)

ஓவியத்தின் மேலே கிளிக்செய்தால் நீங்கள் பெரிதாக பார்க்க முடியும்.




கால நகர்வில்

சிதைந்து போன

ஒற்றையடிப் பாதை.

நீண்ட தொடராய்.


பக்கமெல்லாம் முட்புதரும்

பாம்புப் புற்றும்.

ஆங்காங்கே

சிதறிக்கிடக்கும் பிணங்கள்.


நாயின் ஊளை

செவிகளை தாக்கி

திகிலை ஊட்டி -என்

நகர்வைத் தடுமாற வைக்கும்.


அக்கம் பக்கம் பார்த்து

திரும்பிப் பார்க்கிறேன்.

நான் மட்டும் தனிய.


மனதில் உறுதி

நடையில் வேகம்.
__________________
நளாயினி தாமரைச்செல்வன்.

4 comments:

Anonymous said...

ஓவியமும் கவிதையும் அருமை சகோதரி...நல்ல திறமைதான்...!!

இந்த வேர்டு வெரிப்பிக்கேஷனை கொஞ்சம் எடுத்துவிட்டால் பின்னூட்டம் போடுபவர்கள் எளிதாக போடுவார்கள் இல்லை...!!!

நளாயினி said...

நன்றி வருகைக்கும் ஆக்க பூர்வமான பாராட்டுதலுக்கும். தங்களின் ஆலோசனையை நடைமுறைப்படுத்துகிறேன்.

Anonymous said...

Nalayini, ungkal Varna kaRpanaikal siRappu. oru painting school pongka. konjsam forms and technic padiyungka. Nalla viLangkuvengka
V.I.S.Jayapalan(poet)

நளாயினி said...

nanre jayapalan.