Tuesday, October 25, 2005

உயிர்த்தீ......2

கானல் நீரா?!
காவியமா?!
கடுகதியாய் போகும்
எண்ண ஓட்டமா?!
நினைவுகளுக்கு
சக்கரம் பூட்டிய வேகமா..`!
குழந்தைத்தனத்துள்
தெரியும் குதூகலமா....?!
இதுவரை யாருமே
வெளிக்காட்டாத
உயரிய சிந்தனையா..?
யாருமே அனுபவித்திராத
இன்ப ஊற்றா?!

என்னவென்றே
இனம் காணமுடியாத
ஒரு தளுவல் !!
காற்றில் பறக்கும் அனுபவம்
மலையின் உச்சியை
தொட்டுவிட்ட அனுபவம்
யாரும் அருகில் இருப்பதை கூட
மறந்த நிலை:

இவை எல்லாம்
சின்னத்தனமாய்
தெரியவில்லை.
ஆனாலும்
சமூகத்திற்கு பயந்த
சாபக்கேடாய்
மனதுள் தொட்டுவிட்ட
தொட்டாச்சினுங்கியாய்
தன்னை மறைத்துத்தான் கொள்கிறது.

அப்பப்போ தன்னை இனம் காட்டும்
அந்த தொட்டாச்சினுங்கிக்கு
உள்ள மனசு கூட
பாவம் மனித மனசுக்கு
தனக்குள் இருக்கும் மனசை காட்ட
சந்தற்பம் கிடைக்காமலே போகிறது.
நளாயினி தாமரைச்செல்வன்.
31-12-2002

2 comments:

Chandravathanaa said...

அதுவும் பெண்ணாய் பிறந்து விட்டால்.....

நளாயினி said...

என்ன இப்பிடி சொல்லிவிட்டீர்கள். சொல்லிப்போட வேண்டியது தானே.