Saturday, October 22, 2005

எப்போ..!?


நீ என் உணர்வுகளை
உணர மறுத்துவிட்டு
உன் இஸ்டப்படி
வர்ணிக்கிறாய்.

என்னை பூ வென்பாய்
மரத்திலிருந்து
உதிருமுன்பே பறித்து
மாலையாக்குவாய்.

நிலவென்பாய்
நிலவை மறைக்கும்
கரு மேகங்களாய் நீ
தொல்லை தருகிறாய்.

எரிச்சலடைந்து
தேய்பிறை
வளர்பிறையாய் நான்.

பஞ்சுப்பதுமை என்பாய்
என்னை எங்கே
சுதந்திரமாய் உலாவரவிட்டாய்.
உனக்கு சுகம் தரவல்லா
எனை ஆக்கினாய்.

உன் வர்ணனை
எனக்கு வேண்டாம்.

என்னை நான்
இயல்பாய் உணர்ந்து
இயங்க வைப்பது எப்போ?
நளாயினி தாமரைச்செல்வன்.

6 comments:

Anonymous said...

Nntraaka irukku!

கொழுவி said...

அட நீங்கள் வேற.
இஞ்ச பொய்யோ உண்மையோ, வர்ணிக்காட்டி ஒண்டும் கிடைக்குதில்லை.
;-(

நளாயினி said...

ம்.. அவையும் தங்கடை உணர்வுகளை அடைவு வைச்சிட்டினம் உங்கடை வர்ணிப்புகளுக்கு. அதே மாதிரி நீங்களும் அவையை வர்ணிச்சு வர்ணிச்சே உங்கடை காரியங்களை படு கச்சிதமா நிறைவேற்றிக்கொண்டு போறியள். ஆனா இருவருமே உங்கள் உங்களுக்காக வாழ்ந்து பாருங்கோ. அதைப்போல ஒரு சந்தோசம் ஒரு நாளும் வராது. ( நான் பல இடத்தில் அவதானித்திருக்கிறேன். ஓ.. நீங்கள் நல்லா வடிவா இருக்கிறிங்கள் எண்டு யாரும் சொன்னா போதும். ஒரு மயக்க நிலைக்கு போய் விடுவார்கள் பெண்கள். இது குhடாது. இப்படியே சொல்லி சொல்லி பெண்களை ஏதும் செய்ய விடாமல் பண்ணிவிடுகிறார்கள்.பல பெண்களின் பலவீனம் இது. திரும்ப திரும்ப இந்த உலகு அதே பலவீனத்தில் வைத்து அழுத்திக்கொண்டே இருக்கிறது பெரும்பாலான பெண்களை. அந்த பலவினத்தை தாண்டி பெண்கள் வெளியில் வந்து விட்டால் இந்த பெண்களால் இன்னும் பலதை சாதிக்க முடியும்.

நளாயினி said...

ம்.. அவையும் தங்கடை உணர்வுகளை அடைவு வைச்சிட்டினம் உங்கடை வர்ணிப்புகளுக்கு. அதே மாதிரி நீங்களும் அவையை வர்ணிச்சு வர்ணிச்சே உங்கடை காரியங்களை படு கச்சிதமா நிறைவேற்றிக்கொண்டு போறியள். ஆனா இருவருமே உங்கள் உங்களுக்காக வாழ்ந்து பாருங்கோ. அதைப்போல ஒரு சந்தோசம் ஒரு நாளும் வராது. ( நான் பல இடத்தில் அவதானித்திருக்கிறேன். ஓ.. நீங்கள் நல்லா வடிவா இருக்கிறிங்கள் எண்டு யாரும் சொன்னா போதும்.ஒரு மயக்க நிலைக்கு போய் விடுவார்கள் பெண்கள். இது குhடாது. இப்படியே சொல்லி சொல்லி பெண்களை ஏதும் செய்ய விடாமல் பண்ணிவிடுகிறார்கள்.பல பெண்களின் பலவீனம் இது. திரும்ப திரும்ப இந்த உலகு அதே பலவீனத்தில் வைத்து அழுத்திக்கொண்டே இருக்கிறது பெரும்பாலான பெண்களை. அந்த பலவினத்தை தாண்டி பெண்கள் வெளியில் வந்து விட்டால் இந்த பெண்களால் இன்னும் பலதை சாதிக்க முடியும்.

நண்பன் said...

உங்களுடைய அழுத்தமான கருத்துகள் (இருமுறை கூறிய ) கவனம் கவர்கின்றன. நீங்கள் அழகாக இருக்கிறீர்கள் என்று சொல்லுவது மனதில் ஒரு தன்னம்பிக்கையை விதைக்கச் செய்யவேண்டும். ஆனால் நீங்கள் அழகாக இருக்கிறீர்கள் என்று கூறியவர்களிடத்தில் மயக்கத்தில் வீழ்வது பெண்களின் தவறே அன்றி அதை சொல்பவர்களின் தவறல்ல. அழகாக இருப்பவர்களை அவ்வாறு சொல்வதில் தவறென்ன இருக்கிறது.?

உணர்வு பூர்வமாக சிந்திப்பதை சற்று குறைத்து விட்டு அறிவு பூர்வமாக இயங்குவதை அதிகப்படுத்திக் கொண்டாலே போதும் - இந்த மயக்கத்திலிருந்து வெளிவர...

நளாயினி said...

பூவலை நண்பர் கொழுவி சொல்லியிருந்தார். பொய்யோ உண்மையோ இங்கை வார்ணித்தால் தான் எதுகும் கிடைக்குதென்று. அதற்கான பதில்தான் இது. நான் நினைக்கிறேன் அறிவு பூர்வமாகத்தான் சிந்தித்து எழுதினேன் என்று. அப்படியில்லையா கவிஞர் நண்பன் அவர்களே..?!

பெண்களின் தவறு என்று தானே கூறியுள்ளேன். உணர்வை விடுத்து அறிவுப+ர்வமாக செயல்படவிடு என்றுதானே கவிதையும் அமைகிறது.