Wednesday, October 12, 2005

தேதி ஒன்று குறிங்கையா...

புத்தகம் திறந்தாலும்
புழுதி மண்ணில் நடந்தாலும்
புளுகித்திரிய மனசில்லை
இந்த பொண்ணு மனசில் நீதானையா.

வெக்கம் வெக்கம் எண்டு
மனசு அடிச்சாலும்
உதடு எப்பவும்
உங்க பெயரைத்தான்
உச்சரித்து பார்க்கிறது.

படிப்பம் படிப்பம் எண்டு
மனசு சொன்னாலும்
புத்தகத்துள் ஒளித்து வைத்த
உங்க புகைப்படம் தான் பார்க்கிறேனே.

படுப்பம் படுப்பம் எண்டு
பாய் விரிச்சு போட்டாலும்
கள்ள மற்ற உங்க சிரிப்பு
கண்ணுறங்கையிலை வந்து நிக்குமையா.

சேவல் கூவையிலும்
உறக்கம் தான் வருகுதில்லை.
சிவப்பழகன் நீங்கதாங்க
கண்ணுக்குழிக்கை நிக்கிறீங்க.

புற்தரையில் நடந்தாலும்
ஒக்காந்து இருந்தாலும்
மவராசன் நடந்து வரும்
மாதிரித்தான் இருக்கிறது.

உறக்கம் கொண்டாத்தான்
கனவு வருமையா.
உறங்கி நாளாச்சு
கனவும் வந்ததில்லை.
உங்க குறும்புகளை
நெஞ்சுக்குழிக்கை வைச்சதாலை
நெனைச்சே நெனைச்சே
இந்த மவராசி உசிரு மருகுதையா.

நீங்க நடந்து போனா
புல் பூச்சி சாகாதையா
இந்த புள்ளை மனசை மட்டும்ஏ
னையா கசக்கி புழிகிறீக.

உசிரும் உசிரும் உரசி
ஊசிரே வலிக்குதையா.
ஊரறிய மாலையிட
தேதி ஒன்று குறிங்கையா.
நளாயினி தாமரைச்செல்வன்.
1997

13 comments:

நிலவு நண்பன் said...

மண்வாசைனையுடைய காதல் கவிதை..

பேஷ் பேஷ் ரொம்ப நன்னாயிருக்குஇதயம் நெகிழ்வுடன்

ரசிகவ் ஞானியார்

வசந்தன்(Vasanthan) said...

;-)
;-)

கொழுவி said...

//தேதி ஒன்று குறிங்கையா.//


வாற மாதம் பத்தாம் திகதி.

நளாயினி said...

அடடே...! எனது காதல் பூங்காவிற்கு வராதவங்களெல்லாம் வந்திருக்கிறீங்கள். வாங்கோ வாங்கோ. என்ன நிலவு நண்பன் பேஸ் பேஸோடை வந்திருக்கிறிங்க. நன்றி.
ஆ .. அதென்னது சிம்பல் புரியவில்லை வசந்தம்.

பிளீஸ் கொழுவி கல்யாணத்தை முதலாம் தேதிவையுங்களன். கவிதையை கண்டதுமே முதலாம் தேதி என தீர்மானிச்சாச்சு. ( 01-11.......) பத்தாம் திகதி எல்லாம் ரூ லேற். சரி முதலாம் தேதி எல்லாரும் வந்திடுங்கோ. கார்த்திகை முதலாம் திகதி மறந்து போக வேண்டாம்.

kanagasubramaniyan said...

excellent words.i am going to be ur fan of poems...erally ur words are excellent

பழூர் கார்த்தி said...

கலக்குறீங்க நளாயினி :-)

கவிதை நடையும், கருப்பொருளும் கலக்கல் :-)

நிறைய கவிதைகளை எதிர்பார்க்கிறோம்

Maravandu - Ganesh said...

அன்புள்ள கவிதா(நளா)யினி

கவிதை நன்று
என்னைப் பார்த்து எந்தப் பெண்ணும் இதே மாதிரி கவிதை பாடியதில்லை :-(

மேல இருக்குற போட்டாவில் உள்ள, ரெண்டு கைகளும் , பெண்ணின் கைகள் மாதிரித் தான் தெரியுது

கொழுவி said...

//மேல இருக்குற போட்டாவில் உள்ள, ரெண்டு கைகளும் , பெண்ணின் கைகள் மாதிரித் தான் தெரியுது //

இல்லை. கீழிருப்பது ஆணின் கை. மேலிப்பது பெண்ணின் கை. இப்படத்தின்மூலம் ஆண்கள் பெண்களுக்குக் கீழானவர்களே என்ற கருத்தைத் தெரிவிக்கும் நளாயினியைக் கடுமையாகக் கண்டிக்கிறோம்.

நளாயினி said...

அன்புள்ள கவிதா(நளா)யினி

கவிதை நன்று
என்னைப் பார்த்து எந்தப் பெண்ணும் இதே மாதிரி கவிதை பாடியதில்லை :-(

மேல இருக்குற போட்டாவில் உள்ள, ரெண்டு கைகளும் , பெண்ணின் கைகள் மாதிரித் தான் தெரியுது
நன்றி என்ன பெயர் ஓ.. மரவண்டு. மனதுக்கு கொஞ்சம் கஸ்டமாத்தான் இருக்கு. உங்க பெயரை உச்சரிக்க. அதென்ன மரவண்டு. ஓ இயற்கையை எல்லாம் நாசம் பண்ணுறவரோ என எண்ணத்தோன்றுகிறது. ஓ சரியாவே இருக்கு. பின்ன இரண்டு கையும் பெண்ணுடையது என எப்படி உங்களால் குhறமுடிகிறது. அப்படி இல்லையே. பார்வையில் பிழை என நினைக்கிறேன். அழகாக மனக்கண்ணாடியை மாத்துங்களன். முடியாவிட்டாலும் முயற்சியுங்கள். உங்கள் மனசை நோகடிக்கும் எண்ணம் கொஞ்சமும் இல்லை. இன்பமான உணர்வுகளை இன்னமும் நீங்கள் அறியவில்லை என மிகவும் கவலைப்படுகிறேன்.கீழிருக்கம் கை ஆணுடையது. கோட் சூட்போட்ட கை அத்தோடு உரோமங்களுடன் குhடிய கை. மேலிருக்கம் கை பெண்ணினது கை. இதைக் குhடவா உங்களால் புரியமுடியாமல் போனது. வடிவாக பாருங்கள் வேணுமானால் அந்த படத்தின் மேல் கிளிக் செய்து பாருங்கள் இன்னும் தெளிவாகத்தெரியும். எத்தனையோ பெண்கள் உங்களையும் பாடியிருப்பர். நீங்கள் தான் கவனிக்கவில்லை என நினைக்கிறேன்.

நளாயினி said...

At 6:17 PM, கொழுவி said...
//மேல இருக்குற போட்டாவில் உள்ள, ரெண்டு கைகளும் , பெண்ணின் கைகள் மாதிரித் தான் தெரியுது //

இல்லை. கீழிருப்பது ஆணின் கை. மேலிப்பது பெண்ணின் கை. இப்படத்தின்மூலம் ஆண்கள் பெண்களுக்குக் கீழானவர்களே என்ற கருத்தைத் தெரிவிக்கும் நளாயினியைக் கடுமையாகக் கண்டிக்கிறோம்.


இதன் தாற்பரியம் உங்களுக்கு எங்கே தெரியப்போகிறது. ஆழ்ந்த அனுதாபங்களை மட்டுமே நான் உங்களிற்கு தெரிவிக்கலாம். தெரிவிக்கிறேன். மனைவி மட்டுமே தாயாக தோழியாக குழந்தையாக வாழும் சந்தற்பங்கள் அதிகம். அது எல்லாம் பெண்களுக்கு இறைவன் தந்த கொடை. ஆண்களுக்கெல்லாம் ஈகோ தந்த பேச்சு இவை. ஒரு நல்ல தாரத்தால் மட்டுமே குழந்தையாக தாயாக செல்லமாக குஞ்சாக மனைவியாக நண்பியாக வாழமுடியும். ஆண்களால் இதெல்லாம் முடியாது. திருமணத்தின் போது அந்தப்பெரிய கையை இந்த சிறிய கையால் மறைக்க முடியாது. ஆனாலும் அத்தனை பாசங்களையும் வரவிக்க முடியும். அதனால் தான் ஆணின் கை கீழேயும் பெண்ணின் கை மேலேயும். அந்த பெண்ணின் தொடுகையில் அத்தனை உணர்வையும் நீங்கள் அடைவீர்கள். காதல் காமம் அம்மா அப்பா குழந்தை தாய்மை உங்களுக்கு என்னென்ன உணர்வு வேண்டுமோ அத்தனையையும் தரமுடியும் ஒரு பெண்ணால்.அதற்காக பெண்ணின் கையின் கீழ் ஆணின் கை என வாதிடுவது தவறு. புரியாமை உணராமை தான் இதற்கெல்லாம் காரணம். எனது பதில் இப்போது பிழையாக உணரலாம் நீங்கள். என்றோ ஒரு நாளைக்கு நளாயினியுடைய கருத்துக்களோடு ஒத்து வருவீர்கள் என்றே நினைக்கிறேன். நிச்சயமாக ஒத்து வருவீர்கள். காலம் உங்களிற்கு பதில் சொல்லும்.

நளாயினி said...

At 4:36 PM, சோம்பேறி பையன் said...
கலக்குறீங்க நளாயினி :-)

கவிதை நடையும், கருப்பொருளும் கலக்கல் :-)

நிறைய கவிதைகளை எதிர்பார்க்கிறோம்


nanre paijan.

கொழுவி said...

//எனது பதில் இப்போது பிழையாக உணரலாம் நீங்கள். என்றோ ஒரு நாளைக்கு நளாயினியுடைய கருத்துக்களோடு ஒத்து வருவீர்கள் என்றே நினைக்கிறேன். நிச்சயமாக ஒத்து வருவீர்கள். காலம் உங்களிற்கு பதில் சொல்லும்.//

இதுக்கு நான் பதில் சொல்லுறது என்னைக் காட்டிக்குடுக்கிறமாதிரிப் போகுமெண்டதால பேசாம விடுறன்.

நளாயினி said...

ஓ அப்படி என்று ஒன்று இருக்கோ. சரி செசெல்ல்லம்ம். அப்ப்பச்ச் சொல்ல்ல வேண்ண்டாம்ம்.